எபிரெயர், ஏழாம் அதிகாரம் #1 57-0915E 1 …இரவு, ஜாய்ஸ் பாடுவதைக் கேட்பது…அது, தனக்குத்தானே ஒரு அற்புதமாய் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அந்த சிறு பெண்ணால், எப்படி அவளால் அது எல்லாவற்றையுங் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியும்? ஒவ்வொரு இரவும் அவள் நமக்கு புதியதான ஒன்றை வைத்திருக்கிறாள். எப்படி அவளால் அது எல்லாவற்றையுங் குறித்து எண்ணிப் பார்க்க முடியும்? அது உண்மையிலே ஒரு புத்தியுள்ள திறமைசாலியான சிறுமி. கர்த்தர் அந்தக் குழந்தையை ஆசீர்வதிப்பாராக. 2 இப்பொழுது, இந்தியானாவில் உள்ள சார்லஸ்டவுனில் நாளைய தினம் இரண்டு முப்பது மணிக்கு சவ அடக்கம் செய்யும் சரீரம் வைக்கப்பட்டுள்ள கூடத்திற்கு செல்லவிருக்கிறேன். பிரிந்து சென்று விட்ட நம்முடைய அருமையான சகோதரி, சகோதரி.கோல்வின் அவர்களுக்கு நாம் சவ அடக்கத்தின் முன் சரீரம் வைக்கப்பட்டுள்ள அக்கூடத்திலும், பின்னர் கல்லறையிலும் நாளைப் பிற்பகல் இறுதி மரியாதைகளை அளிக்கவுள்ளோம். இன்றிரவு நீங்கள் இருப்பதைப் போன்று ஒரு காலத்தில் வாழ்ந்து, ஒரு காலத்தில் நீங்கள் எங்கே இருப்பீர்களோ அங்கே காலத்தின் திரைக்கு அப்பால் இப்பொழுது கடந்து சென்று விட்டார். அந்த ஆராதனையில் கலந்து கொள்ள விரும்புகிற யாவரும் வரும்படி வரவேற்கப்படுகின்றீர்கள். அது நிச்சயமாகவே கோல்வின் குடும்பத்தாருக்கு ஒரு பெரிய உதவியாயிருக்கும், இங்குள்ள இந்த கூடாரத்திற்கு, அவர்கள் எல்லாருமே நீண்ட காலமாகவே சபைக்கு வருபவர்களாயிருக்கின்றனர் என்பதை அறிவோம். நீங்கள் அங்கு வருவதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நான் நினைக்கிறேன்…அநேக ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய சகோதரனுடைய சவ அடக்க ஆராதனையில் பிரசங்கித்திருந்த ஒருவரான நம்முடைய அருமை சகோதரன் மிக்கினி அவர்கள்தான் அடக்க ஆராதனையின் முக்கிய பாகத்தை எடுத்து நடத்தவுள்ளார், எனவே அந்த அடக்க ஆராதனைகளில் நான் வந்து அவருக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். 3 இப்பொழுது, நான் இன்றிரவு சற்று கால தாமதாக வந்தேன். மேலும் நான் அநேக வேதனையான செய்திகளைப் பெற்றுக்கொண்டேன். எனவே எனக்கு எந்த வழியாய் செல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. அநேக தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன, இந்த சீர்குலைவுகள், விபத்துகள் பற்றிய செய்திகளை கூற ஜனங்கள் தொலைபேசியில் அழைத்துக்கொண்டும், நேரில் வந்து பார்த்துக்கொண்டுமிருந்தனர். நான் லூயிவில்லை விட்டுப் புறப்பட்டு, துரிதமாக இங்கே புறப்பட்டு வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் வரையில் உண்மையாகவே இடைவிடாது வந்து கொண்டிருந்த பல அழைப்புகளையும், பேச வேண்டியிருந்த பல அழைப்புகளையும் பேசாமல் விட்டுவந்துவிட்டேன். இன்றிரவு இன்னமும் தொலைபேசி அழைப்புகளும் வந்து கொண்டேயிருக்கும் என்றே நான் யூகிக்கிறேன். இப்பொழுது நாங்கள் புறப்பட்டுச் செல்லுகையில், எங்களுக்காக ஜெபியுங்கள். 4 இந்தக் காலை நான் ஒருபோதும் எபிரெயர் புத்தகத்தின் 7-வது அதிகாரத்திற்கான என்னுடைய பாடப்பொருளை எடுத்துப் பேசவேயில்லை. நாம் அதற்கு திருப்பிக்கொண்டிருக்கையில், இன்றிரவு இங்கே பிரிங்ஹாம் சாலையின் கடைசியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் நடைபெறுகின்ற சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங் அவர்களுடைய கூட்டத்தைக் குறித்த அறிவிப்பினை நான் கூற விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் புதன் கிழமை இரவு மீண்டும் அங்கு செல்ல விரும்புகிறேன். நாம் கூட்டத்தில் சகோதரன் கிரஹாம் அவர்களை சந்திக்கும்படி இந்த வாரத்தில் எப்போதாவது ஒரு முறை நாம் ஒரு குழுவாக செல்லும்படியாக ஒரு குறிப்பிட்ட இரவு ஏற்பாடு செய்வோம். அவர் “மக்கள் கூட்டம் அருமையாயிருந்து வருகிறது…” என்றே கூறுகிறார். எனவே அவர் நம்முடைய வருகையை, இந்த உதவியைப் பாராட்டுவார். சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங் அவர்களுடைய கூட்டத்தில் உங்களில் எவரேனும் கலந்துகொள்ள விரும்பினால், அது இங்குள்ள பிரிங்ஹாம் தெருவின் கடைசியில் நடைபெறுகிறது. அது எங்கே நடைபெறுகிறது என்பதை எவராலும் உங்களுக்குக் கூற முடியும். சரியாக விளையாட்டு மைதானத்தின் கடைசியில் அந்த கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுடைய ஒத்துழைப்பைப் பாராட்டுகிறார். நாம் ஒரு கூடாரமாகவே நம்முடைய ஒத்துழைப்பை நூறு சதவிகிதம் அவரோடு உறுதியாக அளித்துள்ளோம், எனவே நாம் உதவி செய்ய முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறோம். 5 இப்பொழுது, சீக்கிரத்தில் நாம் கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் ஒரு சில இரவுகளில் எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் உள்ள பகுதிக்கு வரப்போகின்றோம். தேவனுக்குச் சித்தமானால், நாம் ஒரு மகத்தான நேரத்தையுங் கூட உடையவர்களாயிருக்கப் போகிறோம் என்று நான் கருதுகிறேன். 6 ஓ, இந்தக் காலையில் கர்த்தர் ஒரு ஆச்சரியமான வழியில் நம்மை ஆசீர்வதித்து, எப்படியாய் தம்முடைய ஆவியை நம்மீது அவர் பொழிந்தார்! இப்பொழுது, இன்றிரவும் அவர் அதை மீண்டும் செய்யும்படிக்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்; அதன் பின்னர் புதன் கிழமை இரவும் தொடர்ந்து எதிர்பார்கிறோம். நான் இங்கு இல்லாத இரவுகளில், நான் வெளியே சென்றிருந்தால், அப்பொழுது சகோதரன் நெவில் இங்கே சரியாக இதை எடுத்துப் பிரசங்கிப்பார். 7 நான் என்ன செய்ய போகிறேன் என்பதை நான் ஒருபோதும் அறியேன். நீங்கள் இந்த மணி வேளையில் இங்கிருக்கலாம், மற்றொரு மணி வேளையில் கலிபோர்னியாவிற்கு அழைக்கப்படலாம். பாருங்கள், எனவே கர்த்தர் எங்கே அனுப்புவார் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். அந்தக் காரணத்தினால் எனக்கான பயண விவரங்களைத் தாயாரித்து, நாங்கள்—நாங்கள் இன்ன-இன்னதைச் செய்வோம் என்று கூறுவது கடினமாயுள்ளது. என்னால் ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் செய்யும்படி துவங்கும்போது, கர்த்தர் என்னை வேறு எங்காவது அனுப்புவார். புரிகிறதா? எனவே அவர் என்ன செய்வார் என்பதை நாங்கள் அறியோம். ஆனால், “ஆண்டவருக்கு சித்தமானால்” என்றே நாம் கூறினோம். நாம், “ஆண்டவருக்கு சித்தமானால், நாம் இன்ன-இன்ன காரியங்களைச் செய்வோம்” என்றே கூற கட்டளையிடப்பட்டிருக்கிறோம், இல்லை வேதத்தில் அது கட்டளையிடப்பட்டுள்ளது என்று நான் எண்ணுகிறேன். ஆகையால் நாங்கள் எந்த சந்திப்புத் திட்டங்களையும் சந்திக்க வாய்பில்லையென்றால்…அல்லது சந்திப்புத் திட்டங்களை நிறைவேற்றவில்லையென்றால், ஒருகால் அது நிகழ்வது தேவனுடைய சித்தமாயில்லாமலிருந்திருக்கலாம் என்றே நாங்கள் உணருகிறோம். 8 அன்றொரு நாள் சகோதரன் ராபர்ஸன் அவர்களும், சகோதரன் உட்ஸ் அவர்களும், நானும் வந்து கொண்டிருந்தபோது, நாங்கள் தடுமாற்றம் அடைந்து விட்டோம். அப்பொழுது நாங்கள், “ஏன்?” என்று வியப்புற்று, அங்கேயே அமர்ந்து ஒரு சாலை வரைபடத்தை நோக்கிப் பார்த்த போது, நாங்கள் வந்து கொண்டிருக்கையில், ஐம்பது மைல்கள் தூரம் மீண்டும் வடப்பக்கமாக உள்ள ஒரு சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுவிட்டிருந்தோம். நான் ஏறக்குறைய பதினான்கு வயதிலிருந்தே நெடுஞ்சாலையில் பயணஞ் செய்து கொண்டு வருகிறேன். எனவே நான் எப்படி அவ்வாறு செய்துவிட்டேன் என்று நான் வியப்புறுகிறேன். நாங்கள் மூவரும் அங்கே நின்றுக்கொண்டிருந்தோம். நாங்கள் முழுவதும் நெடுஞ்சாலைகளிலேயே பயணித்து வந்துள்ளோம். ஒரு சாலை வரைபடத்தை நோக்கிப் பார்க்கையில், இல்லினாய்ஸினூடாக வர இன்னும் 130 மைல் தூரம் செல்ல வேண்டும் என்று எண்ணி, சூரியன் எங்களுக்கு முன்னால் இருப்பதற்கு பதிலாக எங்களுக்குப் பின்னால் இருப்பதைக் கவனிக்காமல் ஒரு சிறு திருப்பத்தில் ஓட்டிச் சென்றுவிட்டோம். எனவே நாங்கள் தென் திசைக்குப் பதிலாக வடதிசையில் சென்று கொண்டிருந்தோம். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அந்தச் சாலையைக் கடந்த போது, நான், “இது சரியான சாலையல்லவே” என்றேன். அப்பொழுது அங்கிருந்து நோக்கிப் பார்த்தபோது, நாங்கள் ஐம்பது மைல் தூரத்தில் பாதை மாறியிருந்ததைக் கண்டறிந்தோம். நேராக திரும்பாமல் சென்றிருக்க வேண்டும்…?… 9 அதன் பின்னர் நாங்கள் திரும்பி வந்தபோது, அதைக் குறித்து நாங்கள்—நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான், “அது ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நாம்…ஒரு பயங்கரமான விபத்து இங்கு எங்கோ சம்பவிப்பதிலிருந்து நம்மைத் தடுக்க, மற்றபடி ஏதோக் காரியம் சம்பவித்திருப்பதைத் தடுக்க, கர்த்தர் நம்மை பக்க வழியாய்ச் செல்ல வைத்திருக்கலாம். கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். அப்படித்தான் நாம் சிந்தையை வைத்திருக்க வேண்டும்.” என்றேன். 10 இப்பொழுது, இன்றிரவு, நாம் இப்பொழுது ஒரு சிறு உபதேச பாடமாக துவங்கிக்கொண்டிருக்கிறோம். நான்…நாம் பார்த்து முடித்து விடுவோம் என்று நான் நினைக்கவில்லை, ஒருக்கால் நாம் இன்றிரவு…பார்க்கலாம்…இது சபைக்கு தசமபாகத்தின் பேரிலான உபதேசத்தைக் கொண்ட ஒரு பெரிய அதிகாரமாகும். அது ஒரு பெரிய பாடமாயுள்ளது, ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு எப்படி தசமபாகம் செலுத்தினான் என்றும், அது அத்தியாவசியமானதுதானா என்ற அந்த ஒரு காரியத்தின் பேரில் நாம் பல வாரங்களாக தரித்திருக்கக் கூடும். 11 இந்த சூழல் விசிறி அங்கே பின்னால் உள்ள எவருக்கேனும் சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறதா? நீங்கள் அதை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அந்த சுழல் விசிறிகளில் ஏதேனும் ஒன்று எவருக்கேனும் அவர்களுடைய முகத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும்படி அதிக வேகமாய்க் காற்றை வீசிக்கொண்டிருந்தால், அவ்வாறு இருந்தால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், அல்லது வாயிற்காப்போன்களில் ஒருவரை அனுப்பினால், இங்குள்ள இந்த சகோதரனிடத்திற்கு யாரேனும் ஒருவரை அனுப்பினால், அவர் அதை உங்களுக்காக நிறுத்திவிடுவார். நான் அதை எனக்கு தூரத்தில் வைத்துள்ளேன்; எனவே எனக்கு உஷ்ணமாகி, வியர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதல் காரியம், எனக்கு—எனக்கு தொண்டை கரகரப்பாயுள்ளது. ஆகையால் அது உங்களைப் பொறுத்ததாயுள்ளது, ஆகையால் அது எனக்கு எந்த விதத்திலும் பாதகத்தையும் விளைவிக்காது. நீங்கள் இப்பொழுது செளகரியமாயிருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களுடைய நேரத்தை மிகவும் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும்படி முயற்ச்சிக்கப் போவதில்லை, ஆனால் நேராக வார்த்தைக்குள்ளாக நோக்கிப் பார்க்கப் போகிறோம். நாம் அதைச் செய்வதற்கு முன்பு, அப்படியே ஒரு நிமிடம் நாம் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. 12 இப்பொழுது, பரலோகப் பிதாவே, பண்டக சாலையில் என்ன உள்ளது என்பதை நாங்கள் அறியோம். ஆனால் எங்களுக்கு முன்பாக நன்மையான காரியங்கள் வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு காரியத்தையே நாங்கள் அறிந்து நிச்சயித்திருக்கிறோம். ஏனென்றால், “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு பண்டக சாலையில் என்ன வைத்திருக்கிறார் என்பதை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. 13 நீர் உம்முடைய பண்டக சாலையில் உள்ள வானத்தின் பலகணிகளைத் திறந்து, உம்முடைய வார்த்தையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், அதுவே பொருத்தமான ஒன்றாய், கிறிஸ்தவர்களாயிருக்கும்படி எங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும்படியான ஒன்றாயிருக்கும், மேலும் அது நாங்கள் உள்ளே வந்தபோது என்னவாயிருந்தோமோ, அதைக் காட்டிலும் அதிகமாக—அதிகமாக எங்களை சுவிசேஷத்தின் பேரில் சீரமைக்கும்படிச் செய்யும். பிதாவே இதை அருளும். பரிசுத்த ஆவியானவர்தாமே தேவனுடைய வார்த்தையை எடுத்து, எங்களுக்கு தேவையாயிருக்கிறபடியே அதை ஒவ்வொரு இருதயத்திற்கும் அளிப்பாராக. உம்முடைய நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 14 இப்பொழுது, நாம் 7-வது அதிகாரத்திற்குள்ளாக நேராக செல்லும்படி 6-ம் அதிகாரத்தின் கடைசி வசனத்தில் விட்டிருக்கிறோம். நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். 15 இப்பொழுது நாம் முதல் மூன்று வசனங்களை வாசிக்கப் போகிறோம், இல்லை முதல் இரண்டு வசனங்களை, இல்லை முதல் மூன்று வசனங்களை வாசிக்கப் போகிறோம், சரியாகக் கூறினால், நாம் 7-வது அதிகாரத்திலிருந்து துவங்கலாம். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; (அங்குதான் உங்களுடைய தசமபாக காரியம் உள்ளது) இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 16 என்ன ஒரு அற்புதமான வாக்குமூலம்! இப்பொழுது நாம் இந்த மகத்தான சாரம்சத்தை ஆராய்ந்து பார்க்க, நாம் மீண்டும் பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிச் செல்லப் போகிறோம். ஓ, நான் அவைகளை எவ்வளவாய் நேசிக்கிறேன்! 17 நாங்கள் முன்பெல்லாம் அரிசோனாவில் கனிவள ஆய்வினைச் செய்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நானும், திரு.மக் அனாலி அவர்களும் காண்பதற்கு ஒரு நல்ல வளமான நிலத்துண்டிற்குள்ளாகச் செல்வோம். பின்னர் அங்கே எங்கு சிறு வாய்க்கால்கள் உள்ளது என்று நாங்கள் காண்போம், அங்கே ஒரு சிறு வாய்க்கால் இருக்கும், அதை அவர்கள் “கழுவுதல்” என்று அழைக்கின்றனர். நான்…அவர் என்னை அங்கு அழைத்துச் சென்று, அந்த மணலை என்னை தேய்க்கும்படிச் செய்து, அதை “வ்வூயு” என்று ஊதுவார். அதன்பின்னும் தேய்த்து, மீண்டும், “வ்வூயு” என்று ஊதுவார். அவர் ஏன் அதைச் செய்தார் என்று நான் வியப்புற்றேன். நீங்கள் பாருங்கள், நீங்கள் மணலை ஊதிக்கொண்டிருக்கும்போது, அது லேசானதாகிறது என்பதைக் கண்டறிகிறோம். ஈயம் தங்கத்தைக் காட்டிலும் லேசானதாயிருக்கிறது. தங்கம் ஈயத்தைக் காட்டிலும் பளுவானதாயிருக்கிறது. எனவே நீங்கள் ஊதிக்கொண்டிருக்கும்போது, மற்ற எல்லா உலோகங்களும், மணலும், தூசியும் பறந்து போய்விடும், ஆனால் தங்கமோ அப்படியே தரையில் இருக்கும். ஆகையால், நீங்கள் இங்கே அந்த விதமான வாய்க்கால்களை உடையவர்களாயிருந்தால், அப்பொழுது அந்த விதமான தங்கக் கீற்றுகள் அங்கு உள்ளதை அது காண்பிக்கிறது. இந்த மழை இந்த சிறு துண்டுகளை அடித்து வருகின்றன. ஆகையால் அதன் பின்னர் நாம் தோண்டி எடுத்து, கிட்டத்தட்ட மலையைக் குடைந்து, இந்த தங்கத்தை கண்டடைய முயற்சிக்கிறோம். பூமியிலே துளையுண்டாக்கி அவைகளை தோண்டியெடுக்கிறோம். பின்னர் சுரங்க வெடி வைத்து அதைத் தகர்கிறோம். பின்னர் அந்த முக்கிய தங்கத்தால் நிறைந்த அந்த கற்பாறை குகையை நாம் கண்டறியும் வரை இயந்திரத்தால் கற்பாறைகளை குடைந்து கொண்டே போகிறோம். இப்பொழுது அதைத் தான் நாம், “கனிவள ஆய்வு” என்று அழைக்கிறோம். 18 இன்றிரவு நாம் தேவனுடைய வார்த்தையை எடுக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறபடியால், நம்மிடத்திலிருந்து எல்லா அலட்சியத் தன்மையையும், சந்தேகங்களையும் ஊதித்தள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறோம். நாம் இந்த மகிமையான இரத்தக் குழாயைக் கண்டறியும்படியாய், எந்த அஸ்திபாரமுமில்லாமலிருக்கிற அந்த சிறு இலேசான பஞ்சு போன்ற காரியங்களையும், நம்முடைய ஜீவியத்தில் எந்த ஒரு பாரமான பிடிப்புமில்லாதிருக்கிறவைகளை நாம் முழுமையாக ஊதித் தள்ளிட விரும்புகிறோம். அந்த இரத்தக் குழாய் கிறிஸ்துவாயிருக்கிறது. 19 இப்பொழுது நாம் அவருடைய வார்த்தையைப் படித்து, ஆராய்ந்து பார்க்கையில், தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக. நாம் கடைசியாக முந்தின மூன்று அதிகாரங்களில் கிட்டத்தட்ட மெல்கிசேதேக்கைக் குறித்து இடையிடையே பேசக் கேட்டுவந்துள்ளோம். 20 இப்பொழுது, பவுல் சரியான வியாக்கியானத்தை அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும்… “சாலேமின் ராஜா.” எந்த வேதபண்டிதனுமே…சாலேம் முன்னாளில்…எருசலேம் முன்னாளில் சாலேம் என்று அழைக்கப்பட்டது என்பதை அறிவார். அவர் எருசலேமின் ராஜாவாயிருந்தார். அவரைக் கவனியுங்கள். …உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; (அது பரிந்து பேசுவராகும்), ஆபிரகாமுக்கு இவன் எதிகொண்டுபோய்… முதலில் அவர் யாராயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படியாய், நான் இந்த மகத்தான மனிதனுடைய, அவருடைய வம்ச வரலாறை எடுத்துக் கூற விரும்புகிறேன். அதன்பின்னர் நீங்கள்…நாம் அந்தக் கதையோடு தொடர்ந்து செல்லலாம். …ராஜாக்களை முறியடித்து வந்த…அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசம்பாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய…நீதியின் ராஜா…என்றும் அருத்தமாம். இப்பொழுது கவனியுங்கள், “நீதி”. இப்பொழுது, நாம் சுய நீதியை உடையவர்களாயிருக்கிறோம், நாம் பாவனை விசுவாச நீதியை உடையவர்களாயிருக்கிறோம், நாம் தாறுமாறாக்கப்பட்ட நீதியை, மற்ற எல்லாவிதமானவைகளையும் உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் உண்மையான நீதி ஒன்று உண்டு, அந்த நீதி தேவனிடத்திலிருந்து வருகிறது. இந்த மனிதன் நீதியின் ராஜாவாயிருந்தார். அவர் யாராயிருக்கக் கூடும்? 21 இப்பொழுது, அவர் நீதியின் ராஜாவாயிருந்தார், எருசலேமின் ராஜாவாயிருந்தார், நீதியின் ராஜாவாய், சாமாதானத்தின் ராஜாவாய் இருந்தார். இயேசு, “சமாதான பிரபு” என்றழைக்கப்பட்டார். ஒரு பிரபு என்பவன் ஒரு ராஜகுமாரனாயிருக்கிறான். ஆகையால் இந்த மனிதன் சமாதானத்தின் இராஜாவாயிருந்தார், ஆகையால் அவர் சமாதான பிரபுவின் பிதாவாயிருக்க வேண்டியதாயிருந்தது. இது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 22 இப்பொழுது நாம் எங்கே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இன்னும் சற்று மேற்கொண்டு காணும்படியாக அவருடைய வம்சவரலாறைப் பார்ப்போமாக தகப்பன்…இல்லாதவன்… இப்பொழுது இயேசு ஒரு தகப்பனை உடையவராயிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. இவன் தாயும்…இல்லாதவன்… இயேசு ஒரு தாயை உடையவராயிருந்தார். ஆனால் இந்த நபர் தகப்பனும், தாயும் இல்லாதவராயிருந்தார். …வம்ச வரலாறும்…இல்லாதவன்… அவர் எந்த வம்ச வரலாற்றிலிருந்தும் தோன்றினவர்களிலிருந்து ஒரு போதும் வந்தவராயிருக்கவில்லை. அவர் எப்பொழுதும் இருந்து வந்தவராயிருந்தார். “வம்சவரலாறும் இல்லாதவர்.” …நாட்களின் துவக்கமும்… அவர் ஒருபோதும் எந்த நேரத்திலும் துவங்கியிருக்கவில்லை. ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்… அது தேவனேயல்லாமல் வேறுயாருமாயிருக்க முடியாது. அப்படித்தான் அது இருக்க முடியும். 23 இப்பொழுது, நாம் இப்பொழுது அடுத்த வசனத்தை வாசிக்கையில், நீங்கள் கவனிப்பீர்களேயானால் நலமாயிருக்கும். பார்த்தீர்களா? “முதற்பேராகிய மெல்கிசேதேக்கிற்கு நீதியின் ராஜா என்று அருத்தமாம்.” நான் வாசிக்க விரும்புவது அதுவல்ல. 3-வது வசனம், “ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்.” …தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய்… இப்பொழுது, அவர் தேவகுமாரனாயிருக்கவில்லை, ஏனென்றால், அவர் தேவ குமாரனாயிருந்தால், அவர் ஒரு துவக்கத்தை உடையவராய் இருந்திருப்பார். இந்த மனிதனுக்கு துவக்கமே இல்லாதிருந்தது. அவர் குமாரனாயிருந்தால், அவர் தகப்பனையும் தாயையும் உடையவராயிருந்திருக்க வேண்டும். “இந்த மனிதன் தகப்பனும் தாயுமில்லாதவராயிருந்தார். அவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் இருந்தார்.” …என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 24 இப்பொழுது, வேதபண்டிதர் ஸ்கோபீல்டு அதை, “அது ஒரு ஆசாரியத்துவம் என்று அழைத்து, ‘அது மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவம்?’” என்று கூற முயற்சிக்கிறார். ஆனால் நான் உங்களை ஒரு சில நிமிடங்கள் அதன் பேரிலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். அது ஒரு ஆசாரியத்துவமாயிருந்திருந்தால், அப்பொழுது அதற்கு ஒரு துவக்கம் இருந்திருக்க வேண்டியதாயிருந்திருக்கும், அதற்கு ஒரு முடிவும் இருந்திருக்க வேண்டியதாயிருந்திருக்கும். ஆனால், “இதற்கு துவக்கமோ அல்லது முடிவோ இல்லாததாயிருந்தது.” அவன் ஒரு ஆசாரியத்துவத்தை சந்தித்தான் என்று அவன் கூறவில்லை. அவன் ஒரு மனிதனை சந்தித்தான். அவர் தன்னுடைய பெயரை, “மெல்கிசேதேக்கு” என்று அழைத்தார். அவர் ஒரு நபராய் இருந்தார், ஒரு ஸ்தாபனமாயல்ல, ஒரு—ஒரு—ஒரு ஆசாரியத்துவமாயல்ல, அல்லது ஒரு பிதாத்துவமாயல்ல. அவர் முற்றிலுமாக மெல்கிசேதேக்கு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதனாயிருந்தார், அவர் எருசலேமின் இராஜாவாயிருந்தார். ஒரு ஆசாரியத்துவமாயல்ல, ஆனால் ஒரு தகப்பனே இல்லாத ஒரு ராஜாவாயிருந்தார். ஆசாரியத்துவங்களில் தகப்பனில்லாமலிருக்கவில்லை. “இந்த மனிதன் தகப்பனும், தாயும் இல்லாதவனாய், நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடையவராயில்லாமலிருந்தார்.” இப்பொழுது, தேவனுடைய குமாரன்… 25 இது யாராயிருந்தது, இது யேகோவாவாயிருந்தது. இது சர்வ வல்லமையுள்ள தேவனாயிருந்தது. அது மற்ற யாருமாயிருக்க முடியாது. 26 இப்பொழுது கவனியுங்கள், “அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார்.” அவர் இங்கே, “அவர் ஜீவிக்கிறார். அவர் ஒருபோதும் மரிப்பதில்லை” என்ற ஒரு சாட்சியை உடையவராயிருக்கிறார். அவர் ஒருபோதும் மரித்ததில்லை. அவர் உயிரோடிருப்பதைத் தவிர ஒருபோதும் வேறொன்றுமாயிருந்ததேயில்லை. “அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறார்.” 27 இப்பொழுது, இயேசு அவருக்கு ஒப்பானவராய் உண்டாக்கப்பட்டார். இப்பொழுது, காரணமென்னவெனில், தேவனுக்கும் இயேசுவுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உண்டு: இயேசுவுக்கு ஒரு துவக்கம் இருந்தது; தேவனுக்கு துவக்கம் இல்லாதிருந்தது. மெல்கிசேதேக்கிற்கு துவக்கம் இல்லாதிருந்தது, இயேசுவுக்கு ஒரு துவக்கம் இருந்தது. ஆனால் இயேசு அவருக்கு ஒப்பானவராய் உண்டாக்கப்பட்டார். “ஒரு ஆசாரியராய், என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கிறார்.” 28 இப்பொழுது, மெல்கிசேதேக்கு பூமியின் மேலிருந்தபோது, அவர் சிருஷ்டிப்பினால் வெளிப்பட்ட யோகோவா தேவனாயிருந்தரேயன்றி வேறொன்றுமாயிருக்கவில்லை, அவர் இங்கே ஒரு ஆவிக்குரிய சரீரம் போன்றிருந்தார். ஆபிரகாம் ஒருமுறை அவரை தன்னுடைய கூடாரத்தில் சந்தித்தான். நாம் இந்தக் காலையில் கூறினதுபோல, “ஆபிரகாம் அவரை அடையாளஙகண்டு கொண்டான்.” அவர் என்ன செய்யப்போவதாக இருந்தார் என்பதை ஆபிரகாமிடத்தில் கூறினார், ஏனென்றால் அவர் செய்யப் போவதாயிருந்த காரியங்களுக்கு உலகத்தின் சுதந்தரவாளியை அவர் குருடாக்கிவிடப்போவதாயிருக்கவில்லை. 29 தேவன் இன்னமும் தம்முடைய சபையைக் குறித்து அதேக் கருத்தினை உடையவராயிருக்கிறார் என்று கூறுவதற்கு நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்துவேனாக. நீங்கள் அந்தகாரத்தின் பிள்ளைகளாயிருக்கவில்லை. நீங்கள் ஒளியின் பிள்ளைகளாயிருக்கிறீர்கள். நாம்… “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.” பூமியை சுதந்தரிக்கப்போவதாயிருந்த ஆபிரகாமினிடத்தில் செயல்புரிந்த தேவன்…அவர், “பூமியை சுதந்தரிக்கப்போவதாயிருந்த மனிதனுக்கு இந்தக் காரியங்களை நான் மறைக்கமாட்டேன்” என்றார். அப்படியானால் பூமியை சுதந்தரிக்கப் போகிற தம்முடைய சபைக்கு அவர் எவ்வளவு அதிகமாய்த் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துவார்! 30 தானியேல், “அந்நாளில் அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்” என்றான். மேலும் அவர், “ஞானவான்கள் அந்நாளில் தங்கள் தேவனை அறிந்து திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். ஆனால் துன்மார்க்கரோ பரலோகத்தின் தேவனை அறியார்கள்” என்றார். நம்முடைய முதல் பாடத்தில் கூறினதுபோல, அவர்கள் அவரை ஒரு முறைமையில், ஒரு சடங்கு முறையில் அவரை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவரை பரிபூரண வழியில் அறிந்திருக்கவில்லை. 31 தேவனால் பரிபூரணத்தினூடாக மாத்திரமே கிரியை செய்ய முடியும், ஏனென்றால் அவர் பரிபூரணராயிருக்கிறார். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அது தேவன் கிரியை செய்கிற ஒரு பரிபூரண வாய்க்காலாய் இருக்க வேண்டும், ஏனென்றால் அவரால் பரிபூரணத்தினூடாக கிரியை செய்வதைத் தவிர வேறென்றினாலும் கிரியை செய்ய முடியாது. அவரால் தம்மை எந்த வழியிலும் கறைப்படுத்திக்கொள்ள முடியாது. ஆகையால் நாம் பரிபூரணமடையும்படிக்கு, தேவன் தம்முடைய சபையினூடாக கிரியை செய்யும்படிக்கே, அந்தக் காரணத்திற்காகவே நம்முடைய பாவங்களை எடுத்துப் போட இயேசு வந்தார். அங்குதான் இரகசியமே இருக்கிறது. அங்குதான் உலகம் குருடாயிருக்கிறது. அங்குதான் அவர்கள், “நீங்கள் உங்கள் சிந்தையை இழந்துவிட்டீர்கள்” என்று கூற விரும்புகின்றனர். அங்குதான் அவர்கள், “நீங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூற விரும்புகிறார்கள். காரணம், “கர்த்தருடைய காரியங்கள் இந்த உலகத்தின் ஞானத்திற்கு பைத்தியமாயிருக்கிறது. ஆனால் உலகத்தின் காரியங்களோ விசுவாசிக்கு மாம்சபிரகாரமானதாய் உள்ளது.” ஆகையால், நீங்கள் ஒரு வித்தியாசமான நபராய் இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு வித்தியாசமான மண்டலத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இனிமேல் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. நீங்கள் இந்த ஜீவியத்திலிருந்து ஒரு புதிய ஜீவியத்திற்குள்ளாக கடந்து சென்றுள்ளீர்கள். 32 ஆகையால், தேவன் உலகத்திற்கு அல்ல, உளவியல் ஆய்வாளருக்கு அல்ல, கல்விபயின்ற ஊழியர்களுக்கு அல்ல, ஆனால் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களுக்கே வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜனங்கள் சாந்தமாய் இருக்கிறார்கள், அவர் தேவனுடைய மகத்தானக் காரியங்களை அவர்களுக்கே வெளிப்படுத்துகிறார். உங்களுக்கு அது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 33 இப்பொழுது, இப்பொழுது, ஆபிரகாம் உலகத்தை சுதந்தரிப்பவனாயிருந்தான். ஆபிரகாமினுடைய வித்தின் மூலமாகவே சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதாயிருந்தது. ஆகையால் தேவன் ஒரு மனித ரூபத்தில் இறங்கி வந்து, அவனிடத்தில் பேசினார். இப்பொழுது, தேவன் எப்பொழுதுமே பூமியின் மேல் இருந்து வருகிறார். தேவன் ஒருபோதும் பூமியைவிட்டுச் சென்றதேயில்லை. அவர் எப்போதாவது பூமியைவிட்டுச் சென்றிருப்பாரேயானால், அப்பொழுது அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தேவன் எப்பொழுதுமே ஏதோ ஒரு ரூபத்தில் இங்கே இருந்து வருகிறார். ஓ, அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! 34 அவர் எகிப்திலிருந்து வெளிவந்து வனாந்திரத்தில் இருந்த பிள்ளைகளோடு ஒரு ஒளியின் ரூபத்தில் இருந்தார். அவர் ஆபிரகாமிடத்தில் ஒரு மனித ரூபத்தில் பேசினார். அவர் மேசோயினிடத்தில் ஒரு மனித ரூபத்தில் பேசினார். அவர் சபையினிடத்தில் ஒரு மனித ரூபத்தில், அவருடைய குமாரன், கிறிஸ்து இயேசு மூலமாய் பேசினார். அவர் இன்றைக்கு தம்முடைய சபையினூடாக, அபிஷேகிக்கப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய சபையினூடாக, மண்பாண்டங்களினூடாக பேசிக்கொண்டிருக்கிறார். “நானே திராட்சைச் செடி. நீங்கள் கொடிகள்.” தேவன் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார், நீங்கள் அவரை தோற்றுவிக்கிறபோது, உலகம் இயேசுவைக் காண்கிறது. அந்தவிதமாகத்தான் உலகம்…உள்ளது. “நீங்கள் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் வாசிக்கப்படும் நிரூபங்களாயிருக்கிறீர்கள்.” நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியம் சொல்லுகிறது. 35 இப்பொழுது இந்த ஆபிரகாம் தன்னுடைய பாதையில் திரும்பி வந்துகொண்டிருந்தான். நாம் திரும்பிப் போய், இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவரைக் குறித்து ஆதியாகம புத்தகத்தில் வாசிக்கப் போகிறோம். அது ஆதியாகமம் 14-ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓ, அது இங்கே எவ்வளவு அழகான கதையாய் உள்ளது. இப்பொழுது நாம் யாவரும் எப்படி தேவன் ஆபிரகாமை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு வரும்படி அழைத்து, தன்னுடைய ஜனத்தாரைவிட்டு தன்னைப் பிரித்துக்கொள்ளும்படிக் கூறினார் என்பதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்துள்ளோம். தேவன் புருஷரையும் இல்லை ஸ்திரீகளையும் அழைக்கிறார், அவர் ஒரு வேறு பிரிதலையே அழைக்கிறார். 36 இப்பொழுது, அதுதான் இன்றைய சபைகளோடு உள்ள தொல்லையேயாகும், அவர்கள் பழைய மாம்சபிரகாரமான விசுவா…அவிசுவாசிகளிடத்திலிருந்து தங்களைப் பிரித்துக்கொள்ள விரும்புகிறதில்லை. அந்தக் காரணத்தினால்தான் நம்மால் எதிலும் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. நாம் அந்த ஒரு மாம்சபிரகாரமான காரியத்திலேயே இருந்துகொண்டு, நாம்—நாம், “ஓ, ஜிம் குடித்தாலும், அவர் ஒரு நல்ல நபராயிருக்கிறார். அவர்…எனவே நான் அவரோடு சட்டத்திற்கு புறம்பான சூதாட்ட இடத்திற்குச் செல்வேன், ஆனால் நான் சூதாடுகிறதில்லை. நான்—நான்—நான் அவளோடு அந்த விருந்திற்குச் செல்வேன். அவர்கள் அசுத்தமான நகைச் சுவைகள் முதலியனவற்றைச் சொல்லுகிறார்கள், ஆனால் நான் எதையும் அவ்வாறு கூறுகிறதில்லை” என்று கூறுகிறோம். 37 “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” அது உண்மை. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” நீங்கள் அதைச் செய்யாதீர்கள். உங்களை வேறுபிரித்துக் கொள்ளுங்கள். 38 தேவன் ஆபிரகாம் தன்னோடு நடக்கும்படியாக, அவனுடைய எல்லா இனத்தவர்களிடத்திலிருந்து அவனை வேறுபிரித்துக்கொள்ளும்படி அழைத்தார். சகோதரனே, சில சமயங்களில் அது ஒரு சபையை விட்டுச் செல்லுதலைக் குறிக்கிறது. அது பவுலுக்கு அதையே பொருட்படுத்தினது. அவன் தன்னுடைய சபையை விட்டுவிட வேண்டியதாயிருந்தது. அநேகருக்கும் அதையேப் பொருட்படுத்தினது. சில சமயங்களில் அது வீட்டை விட்டுச் செல்வதைப் பொருட்படுத்துகிறது. சில சமயங்களில் அது தகப்பனையும், தாயையும், எல்லாவற்றையும் விட்டுவிடும்படிக்கே பொருட்படுத்துகிறது. அது ஒவ்வொரு முறையும் அதையேச் செய்கிறது என்று நான் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் சில சமயங்களில் அது அவ்வாறு செய்கிறது. அது நீங்கள் உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துக்கொண்டு, அவரோடு தனியே சஞ்சரிக்க வேண்டும் என்று பொருட்படுத்துகிறது. ஓ, நீங்கள் உங்களையே உங்களுடைய காரியங்களிலிருந்தும், உலகத்தின் காரியங்களிலிருந்தும், உங்களைக் குறித்து பரியாசம் செய்து கொண்டிருக்கிற மாம்சபிரகாரமான விசுவாசிகளிடத்திலிருந்து உங்களை வேறு பிரித்துக் கொண்டு, கிறிஸ்துவோடு தனியாக சஞ்சரிக்கிற அந்த ஐக்கியம் ஆசீர்வதிக்கப்பட்ட இனிமையான கலந்துரையாடலாய் உள்ளதே! 39 எத்தனை முறை நான் தேவனுக்கு நன்றி கூறியிருக்கிறேன்! அவர், “நான் உனக்கு இந்த உலகத்தில் தகப்பன்மார்களையும், தாய்மார்களையும் தருவேன். நான் உங்களுக்கு நண்பர்களையும், கூட்டாளிகளையும் கொடுப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. முழு உலகமும் அதனுடைய புற முதுகை உன்மேல் காட்டினாலும், நான் பாதையின் முடிவுமட்டும் உன்னோடு செல்வேன்” என்றார். 40 என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியம், ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றும்படி, கர்த்தரைப் பின்பற்றும்படிக்கு தன்னுடைய எல்லா மாம்சபிரகாரமான கூட்டாளிகளிலிருந்தும் தன்னை பிரித்துக்கொள்ளும்படியான அந்த சவாலை உடையவனாயிருக்கிறான். எந்த நபராவது ஒழுங்கான முறையில் தான் நடந்து கொள்ளாததுபோன்று தோன்றினால், கிறிஸ்தவர்களைப் போன்று காண்பித்துக்கொள்ளாதது போன்று தென்பட்டால், ஆனால் மாம்சபிரகாரமான காரியங்களில் அன்புகூர்ந்தால், அப்பொழுது நீங்கள் உங்களுக்காக உடனே மற்றொரு கூட்டாளியைத் தேடுவதே மிகச் சிறந்ததாகும். அது உண்மை. உங்களோடு எவருமே நடக்கவில்லையென்றாலும், உங்களோடு நடக்கும்படி வாக்குப்பண்ணின ஒருவர் இருக்கிறார். அந்த ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு, அவர் உங்களோடு நடப்பார். 41 தேவன் ஆபிரகாமினிடத்தில், “உன்னை வேறுபிரித்துக்கொள்” என்று கூறினார். ஆபிரகாம் மானிட இயல்பின் காரணமாக, அவன் தன்னுடைய தகப்பனை கூடவே அழைத்து வந்துவிட்டான். அவன் தன்னுடைய சகோதரனுடைய மகனையும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிட்டான், எல்லோருமே அவனோடு கூட இருந்துகொண்டிருந்தனர். தேவன் அவனிடத்தில் என்ன செய்யும்படி கூறினாரோ, அதை அவன் செய்யும்வரையில், தேவன் அவனை ஒருபோதும் ஆசீர்வதிக்கவேயில்லை. 42 நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கவில்லை என்பதை நான் கூறவில்லை. அதாவது நான் எவரையும் கிறிஸ்தப் பண்பில்லாதவராக்கவில்லை. ஆனால் நான் இதைக் கூறுகிறேன், தேவன் உங்களிடத்தில் ஒரு காரியத்தைச் செய்யும்படிக் கூறியிருந்தால், நீங்கள் அதைச் செய்கிறவரையில் அவர் உங்களை ஒருபோதும் ஆசீர்வதிக்கவேமாட்டார். அந்தக் காரியங்களில் ஒன்று இன்றிரவு என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதோடு நான் பிரசங்கபீடத்தில் இருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய கூட்டங்கள் என்னவிதமாய் நடைபெற்றிருக்க வேண்டுமோ, அந்த விதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கவில்லை. அதற்குக் காரணம் நான் கர்த்தரிடத்தில் தவறியிருப்பதேயாகும். அவர் என்னிடத்தில், “ஆப்பிரிக்காவிற்கு போ, அதன்பின்னர் இந்தியாவிற்குப் போ” என்றார். இதோ அது இங்கே இந்த புத்தகத்தின் பின்னால் அப்பொழுதே எழுதிவைக்கப்பட்டுள்ளது. 43 மேலாளர் என்னைக் கூப்பிட்டு, “அந்த ஆப்பிரிக்கர்களிடத்திற்கு போவது இருக்கட்டும். இந்தியாவிற்கு செல்வதோ ஆயத்தமாயுள்ளது” என்றார். 44 அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னை சந்தித்து, “நான் உன்னைப் போகும்படி கூறினது போல நீ ஆப்பிரிக்காவிற்கு போ” என்றார். 45 அதன்பின்னர் மற்றொரு வருடமும் கடந்துவிட்டது. மேலாளர்களும்…நானும் அதைக் குறித்து மறந்துவிட்டேன். பின்னர் மேலாளரோ, “நாம் இந்தியாவிற்கு போகப்போகிறோம். பயணச்சீட்டுகள் ஏற்கனவே இங்கு ஆயத்தமாயுள்ளன” என்றார். 46 அப்பொழுது நான் புறப்பட்டு லிஸ்பான் என்ற இடத்தைச் சென்றடையும் வரை நான் அதைக் குறித்து மறந்தே போய்விட்டேன். ஒரு நாள் இரவு நான் மரித்துகொண்டிருந்தாகவே நான் எண்ணிக்கொண்டேன். அடுத்த நாள் காலையில் நான் குளிப்பதற்காக குளியல் அறைக்கு செல்ல புறப்பட்டேன். அப்பொழுது நான் ஓ, மிகவும் சுகவீனமாயிருந்தேன். என்னால் எழும்பி நிற்கவே முடியாமலிருந்தது. அப்பொழுது அங்கே அந்த ஒளி குளியல் அறையில் தொங்கிக் கொண்டிருக்க, “நான் உன்னிடத்தில் முதலில் ஆப்பிரிக்காவிற்கு போ” என்று கூறினேனே என்று அந்த சத்தம் உரைத்தது. 47 அந்த நேரம் முதற்கொண்டு என்னுடைய கூட்டங்கள் மெதுவாக வெற்றிகரமாய் நடைபெறாமலிருந்து வந்தன. நான் இந்தியாவிற்கு சென்றிருந்தும், அங்கே கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர்கொண்ட ஜனக்கூட்டத்திலிருந்தபோதிலும், தேவன் என்ன செய்யும்படிக் கூறியிருந்தாரோ அதை செய்யாமலிருந்துகொண்டிருந்தேன். எனவே நான் திரும்பிப் போய் அந்தக் காரியத்தை சரிப்படுத்திக் கொள்ளும் வரையில் என்னுடைய கூட்டங்கள் ஒரு போதும் வெற்றிகரமாக அமையாது என்பதை நான் உணர்ந்தேன். நான் என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது முதலில் ஆப்பிரிக்காவிற்கு செல்லவேண்டும் என்பதாயிருந்தது, ஏனென்றால் நான் அவர் கூறியிருந்ததை செய்தாக வேண்டும். தேவனுடைய நித்திய வார்த்தை அங்கே அவ்விதமாய் கூறப்பட்டிருந்தது. நான் அதைப் பார்க்கிலும் மேலானதை அறிந்திருக்கவில்லை. ஆனால் நான் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த வருகின்ற வருடத்தில் கர்த்தருடைய ஒத்தாசையினால் நான் தாழ்மையாய் அதைச் செய்ய வேண்டிய நேரம் இதுவே என்பதையே நான் உணருகிறேன். 48 இந்த மகிமையான, பண்டைய சுவிசேஷம் ஒரு கருவாலி மரத்தைப் போன்று எளிதாக வளர்ந்துகொண்டே வந்துள்ளது, ஆனால் அது இப்பொழுது ஏறக்குறைய அதனுடைய கிளைகளைப் படரவிட ஆயத்தமாயுள்ளது. இது மகத்தான செய்தி மற்றும் மகத்தான காரியம் என்றே நான் இதை விசுவாசிக்கிறேன். தேவனுடைய மகிமைக்காக கர்த்தர் நம்மை மீண்டும் இந்த உலகத்தை அசைக்கச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். 49 தேவன் உங்களை என்ன செய்யும்படிக்குக் கூறினாரோ, நீங்கள் அதை செய்யத்தான் வேண்டும். ஆபிரகாம் தன்னுடைய இனஜனங்களை தன்னோடு அழைத்து சென்றுவிட்டான். அவன் அவர்களை நேசித்தான். அது மனித தன்மையின் பாகமாயிருந்தது. ஆனால் கொஞ்சங் கழித்து, அடுத்தபடியாக அவனுடைய தகப்பனார் மரித்துப்போய்விட்டார், அப்பொழுது அவன் அவரை அடக்கம்பண்ணினான். அதன்பின்னர் அவனுக்கு தன்னோடிருந்த தன்னுடைய சகோதரனின் மகன் மூலம் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழும்பின. முடிவிலே லோத்து தன்னுடைய தெரிந்துகொள்ளுதலின்படி சோதோமுக்குள் சென்று விட்டான். நீங்கள் ஆபிரகாமை கவனிப்பீர்களேயானால், அவன் லோத்தினிடத்தில் சண்டையிடவில்லை. அவன், “நாம் சகோதரர்கள். நாம் வாக்குவாதம்பண்ண வேண்டாம். ஆனால் நீ உன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து, நீ போக வேண்டுமென்று விரும்புகிற எந்த வழியிலும் நீ போகலாம். நீ கிழக்கு நோக்கிச் சென்றால், நான் மேற்கு நோக்கி செல்வேன். நீ வடக்குப் பக்கம் சென்றால், நான் தென்புறம் செல்வேன்” என்றான். அதுவே கிறிஸ்தவ மனப்பான்மையாயிருக்கிறது, அதாவது மனப்பூர்வமாய் மற்ற மனிதன் சிறந்த முறையில் கையாள விட்டுக்கொடுப்பதாகும். எப்பொழுதுமே அதை மற்றவருக்கு அளித்து விடுங்கள், அவர் தன்னுடைய தெரிந்துகொள்ளுதலை தெரிந்தெடுக்கட்டும். 50 எதற்காக? ஆபிரகாமை அதைச் செய்யும்படிச் செய்தது எது? அவன் எப்படியும் முழுக் காரியத்தையும் சுதந்தரித்துக் கொள்வான் என்று தேவனால் அவனுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆமென். ஆகையால், அதன்பின்னர் ஒரு கூடாரமோ அல்லது ஒரு குடிசையோ, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? முழுக் காரியமும் நமக்கு சொந்தமானதாயிருக்கிறது. “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இவையாவும் நமக்குச் சொந்தமானது. தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். ஆகையால் ஒரு மனிதனுக்கு வேண்டுமானால், அவனுக்கு மிகச் சிறந்த தேர்வுரிமையைத் தாருங்கள். ஒருகால் அவன் பெற்றுக்கொள்வது அவ்வளவாகத்தான் இருக்கலாம். ஆனால் வாக்குத்தத்ததினால் அவையாவும் இரட்சிப்பின் சுதந்தரவாளிகளாகிய உங்களுக்கு சொந்தமானதாயுள்ளது. அவையாவும் உங்களுடையதாயிருக்கிறது. 51 ஆகையால் சாராள், தேசத்திலேயே மிகவும் அழகான ஸ்திரீயாயிருந்தாள். அவள் அங்கே மலைப்பகுதியில் தன்னுடைய கணவனோடு இந்தவிதமான ஆடைகளை உடுத்திக் கொண்டவளாய் அமர்ந்திருந்திருக்க வேண்டும். அவள் சாதாரணமான, எளிமையான பருத்தி ஆடைகளை அணிந்திருந்திருக்கலாம், அல்லது நீங்கள் அந்த எளிமையான ஆடையை என்னவென்று அழைக்கிறீர்களோ, அதைப் போன்றதையே அணிந்திருந்திருக்கலாம். ஆனால் திருமதி. லோத்து ஒரு கோடீஸ்வரியைப் போன்று உடையுடுத்தியிருந்தாள். அவளுடைய கணவன் மாநகராட்சி மன்றத் தலைவராயிருந்தான். அவன் ஒலிமுகவாசலில் ஒரு நியாதிபதியாய் வீற்றிருந்தான். எனவே அவள் எல்லாவற்றையும் உடையவளாயிருந்தாள்; சோதோம் கொமாராவில் இருந்த எல்லா பொழுதுபோக்கு இடங்களுக்கும், சீட்டு விளையாட்டுகளுக்கும் சென்று வந்தாள். ஆனால் சாராளோ மிக எளிய செலவில் தன்னுடைய கணவனோடு வாழ்க்கை நடந்த அதிகப் பிரியங்கொண்டிருந்தாள், அவள் ஒரு பருவகாலத்திற்கான ஐஸ்வரிய இன்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும்…தேவனுடைய சித்தத்தில் இருந்தாள் என்பதை அறிந்திருந்தாள். அது உண்மை. அப்பொழுதே தேவன் வருகை தந்தார். 52 ஒரு நாள் நீங்கள் நிச்சயமாகவே தவறான பாதையைத் தெரிந்துகொள்ளும்போது, அது உங்களை என்றோ ஒருநாள் பிடித்துக் கொள்ளப்போகிறது. நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். நீங்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் தப்பித்துக் கொண்டிருக்கவில்லை. அது முழுவதும் மறைக்கப்பட்டிருப்பது போன்று தென்படலாம், ஆனால் அது மறைக்கப்பட்டிருக்கவில்லை. தேவன் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையாகவே உங்களுடைய அறிக்கையை பொருட்படுத்திக் கூறுகிறீர்களா அல்லது இல்லையா என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் உண்மையாகவே அவரை விசுவாசித்து, இரட்சிக்கப்பட்டு, அவரை ஏற்றுக்கொண்டு, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, நீங்கள் கிறிஸ்துவுக்குள் உயிரோடிருக்கிறீர்கள் என்று பொருட்படுத்திக் கூறுகிறீர்களா என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் அதை அறிந்திருக்கிறார். 53 இப்பொழுது நாம் ஆபிரகாமை கவனிப்போம், நீங்கள் இந்த உண்மையான ஆவியைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஓ, முழு ஆசீர்வதிக்கப்பட்டக் காரியமும் இங்கே கிருபையாயுள்ளது. நீங்கள் இப்பொழுது என்னோடு கூட…யாத்திரயாகமம் 14-வது அதிகாரத்தை அப்படியே ஒரு நிமிடம் வாசிக்க விரும்புகிறேன். 54 இப்பொழுது, அவர்கள் அங்கு சென்றடைந்தபோது சம்பவித்த முதலாம் காரியம் என்னவென்றால் லோத்து தொல்லைக்குள்ளானான். ஏன்? அவன் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாயிருந்தான். நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்கும்போது, நீங்கள் தொல்லைக்குள்ளானால், அப்பொழுது தேவன் உங்களுக்கு அதிலிருந்து வெளிவர உதவி செய்வார். ஆனால் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாயிருந்து, நீங்கள் தொல்லைக்குள்ளிருந்தால், அப்பொழுது செய்யக் கூடிய ஒரே ஒரு காரியம் தேவசித்தத்திற்கு மீண்டும் திரும்பி வருவது மாத்திரமேயாகும். 55 இப்பொழுது எல்லா ராஜாக்களும் ஒன்று சேர்ந்து நீர்வளம் நிறைந்திருந்த, அங்கிருந்த அந்த சமவெளிகளைக் கண்டு, அவர்கள் போய், இந்த சோதோமையும், கொமாராவையும் கைப்பற்றிக்கொள்ள சென்றனர். அப்பொழுது அவர்கள் அதைக் கைப்பற்றிவிட்டனர். அவர்கள் புறப்பட்டுச் சென்று, அதைக் கைப்பற்றிக் கொண்டு, லோத்துவையும் அவர்களோடு அவர்கள் சிறைப் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். 56 இப்பொழுது, ஆபிரகாமுக்குள் இங்கே கிறிஸ்துவின் ஆவி இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது 14-வது வசனத்தைக் கவனியுங்கள். தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது…(இது புரிகிறதா?) அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, 57 ஓ, என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கிருபையின் சிந்தனை! ஆபிரகாம், தன்னுடைய சகோதரன் கிருபையிலிருந்து விழுந்த போதிலும், இந்த பின்வாங்கிப்போன நிலைமையில் இருந்தபோதிலும்; உலகமானது அவனைப் பற்றிப் பிடித்து, அவனை சிறைப்படுத்திக் கொண்டுபோய் கொல்லவிருப்பதை ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, ஆபிரகாம் கிறிஸ்துவின் ஆவியினால் செயல்பட்டான். அப்பொழுது அவன் தன் வீட்டில் பிறந்த கைப்படிந்தவர்களாகிய எல்லா மனுஷருக்கும் ஆயுதம் தரிப்பித்து, அவர்களை கூட்டிக்கொண்டு, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். தாண் என்ற ஊர் பாலஸ்தீன பாகங்களின் கடைமுனையாயுள்ளது, “தாண் முதல் பெயெர்செபா மட்டுமே,” ஒரு கடைமுனையிலிருந்து மற்றொன்று வரையிலுமானதாயுள்ளது. அது ஒரு கிறிஸ்துவின் மாதிரியாயுள்ளது, உலகம் விழுந்துபோனதை…அவர் கண்டபோது, விழுந்துபோன ஆதாமின் இனத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள அவர் சத்துருவை கடைமுனைமட்டும் பின் தொடர்ந்தார். 58 நீங்கள் அடுத்த வசனத்தைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், இங்கே எவ்வளவு இனிமையாக அவன் மூலமாகப் பேசுகிறார். சரி, இப்பொழுது 15-வது வசனம். சகல பொருள்களையும் (எல்லாவற்றையும்) திருப்பிக் கொண்டு வந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். 59 ஆபிரகாம் தன்னுடைய சகோதரனை சிறையாக்கிக் கொண்டு சென்றிருந்த சத்துருவை பின்தொடர்ந்துபோய், அவன் அவர்களை தேசத்தினூடாக தாண் என்ற ஊர் மட்டும் பின்தொடர்ந்து சென்று, தன் சகோதரன் வீழ்ச்சியுற்று இழந்துபோயிருந்த எல்லாவற்றையும் ஆபிரகாம் திருப்பிக்கொண்டு வந்தான். 60 என்னே ஒரு அழகான கிறிஸ்துவின் காட்சியாயுள்ளது, நாம் இழக்கப்பட்டோம் என்பதை அவர் பரலோகத்திலிருந்து கேள்விப்பட்டு, இறங்கி வந்து நரகம் வரைக்குமாய் சத்துருவைப் பின்தொடர்ந்து சென்று, இழக்கப்பட்ட ஆத்துமாக்களை சிறைப்படுத்திக் கொண்டு, நம்மை திரும்பக் கொண்டு வந்து, வீழ்ச்சியுறுவதற்கு முன்னர் நாம் கொண்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் நமக்கு திரும்ப அளித்தாரே! நாம் பின்வாங்கிப் போனவர்களாய், தேவகுமாரர்களாயிருக்கும்படி பிறந்த நாம் பிசாசின் குமாரர்களாக தாறுமாறாக்கப்பட்டு, உலகத்தின் காரியங்களின் பின்னே சென்று, தவறானதைச் செய்து, லோத்து செய்ததுபோன்று பேராசை கொண்டு ஓடி, நம்முடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்டு, உலகத்தின் காரியங்களின் பின்னே சென்றுவிட்டிருந்தோம். அப்பொழுது கிறிஸ்து இறங்கி வந்தார். நாம் விழுந்து போயிருந்தாலும், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை தேவன் ஆதியிலேயே அறிந்திருந்தார், ஆகையால் அவர் இறங்கி வந்து சத்துருவை ஜீவனினூடாகவும், மரணத்தினூடாகவும், பரதீசினூடாகவும், நரகத்திற்குள்ளாகவும் பின் தொடர்ந்து சென்றார். மகிமையிலிருந்து நரகத்திற்குச் சென்று, பாதாளத்தின் வல்லமைகளைக் கைப்பற்றி, பிசாசினிடத்திலிருந்து திறவுகோல்களைப் பிடுங்கிக் கொண்டு, மீண்டும் உயிரோடு எழுந்து, மனுஷர் மீண்டும் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாயிருக்கும்படி மானிட இனத்திற்கு அவைகளைத் திரும்பளித்தார். 61 அங்கே ஆபிரகாமுக்குள் இருந்த ஆவியை, கிறிஸ்துவின் ஆவி அவனோடு வருவதைப் புரிந்துகொள்கிறீர்களா? 62 இப்பொழுது நாம் வாசிக்கையில், நீங்கள் இன்னும் சற்று கூடுதலாக கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பி வருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்கு மட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான். 63 அவர்கள் புறப்பட்டு சென்றனர். சோதோமின் ராஜா திரும்பக் கொண்டு வரப்பட்டான். அவனுடைய சகோதரன் திரும்பக் கொண்டுவரப்பட்டான். பிள்ளைகள் திரும்பக் கொண்டுவரப்பட்டனர். இங்கே ராஜாக்கள் அவனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். நான் இங்கிருந்து தான் இப்பொழுது செய்தியை அளிக்க விரும்புகிறேன். இங்கே கவனியுங்கள். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய (எருசலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா) மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வதாம் ஆபிரகாமுக்கு உண்டவதாக. 64 மெல்கிசேதேக்கு, சாலேமின் ராஜா மற்ற ராஜாக்களுக்கு மத்தியிலும் கூட தம்மைச் சுட்டிக்காட்டினார். கவனியுங்கள், யுத்தம் முடிவுற்றுவிட்டிருந்தது, கிறிஸ்துவினுடைய, தேவ ஆவியானது ஆபிரகாமுக்குள்ளிருந்து, தன்னுடைய விழுந்துபோன சகோதரனைத் திருப்பிக்கொண்டு வந்து, பின்னர் அவன் இழந்துபோயிருந்த எல்லாவற்றையும் அவனுடைய நியாயமான நிலைமைக்கே அவனுக்குத் திரும்ப அளித்தான். அவன் இதைச் செய்தபோது, அவர் அப்பத்தையும், திராட்சரசத்தையும், இராபோஜனத்தைக் கொண்டு வந்தார். அந்த மெல்கிசேதேக்கு யாராயிருந்தார் என்று உங்களால் காணமுடியவில்லையா? அது தேவனாயிருந்தது. யுத்தத்திற்குப் பிறகு இராபோஜனத்தைக் கொண்டு வந்தார். 65 இப்பொழுது மத்தேயு 26:26-க்கு துரிதமாக நாம் மீண்டும் திருப்பி, இங்கே அதைக் குறித்து இயேசு என்னக் கூறினார் என்பதை நாம் பார்ப்போம். மத்தேயு புத்தகத்தில், 26-ம் அதிகாரத்தில் 26-ம் வசனமும் கூட, நாம் அதை இங்கே சற்று வாசிக்க விரும்புகிறோம். சரி, மத்தேயு 26:26 அப்பொழுது, இயேசு அவர்களோடே கொல்கொதா, கொல்கொதா…இல்லை கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்து, அதைத்தான் நான் கூறுகிறேன், சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, 66 நான் தவறான வேத வசனத்தை வாசித்துள்ளேன் என்று நான் நினைக்கிறேன். மத்தேயு, இருபத்தி…26-ம் அதிகாரம், 26-ம் வசனம். யாராவது அதை எடுத்துவிட்டிருந்தால், எனக்காக அதை வாசியுங்கள், உங்களால் அதை கண்டுபிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும். அப்படியே ஒரு நிமிடம். இது இங்கே ஒரு அழகான மாதிரியாய் உள்ளது. நீங்கள் இதைத் தவறவிட நான் விரும்பவில்லை. இதோ நாம் எடுத்துவிட்டோம். சகோதரியே, அதுதான். அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து… அது என்னவாயிருந்தது? யுத்தமோ முடிவுற்றுவிட்டிருந்தது. …அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து; நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 67 அந்த மெல்கிசேதேக்கைப் பார்த்தீர்களா? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவுற்றிருந்த பிறகு, அவர் ஆபிரகாமை சந்தித்தபோது, அவர் அப்பமும் திராட்சரசமும் கொடுத்தார். இங்கே இயேசுவானவர் தம்முடைய சீஷர்களுக்கு, அவருடைய கடுமையான யுத்தம் முடிவுற்ற பிறகு, அவர் அவர்களுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தார். கவனியுங்கள். எதிர்கால வருகையைக் கவனியுங்கள். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 68 நாம் இப்பொழுது யுத்தத்தில் இருக்கிறோம். அதாவது தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னே கண்டு, நித்திய ஜீவனுக்கென்று முன்குறித்த நம்முடைய விழுந்துபோன சகோதரனை திரும்பக் கொண்டுவர நாம் பின்தொடர்ந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். உலகத்தின் காரியங்கள் அவனைப் பிடித்திருக்க, ஒரு சுழல்காற்றில் சிக்குண்டு பிடிக்கப்பட்டிருக்கிறான். அவன் சங்கங்களிலிருந்து கொண்டு, உயர்குல மக்களிடமிருந்து கொண்டு, அவனும், அவனுடைய மனைவியும் வீதிகளில் மேலும் கீழும் நடந்து, புகைபிடித்துக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, களித்துக் கூத்தாடி சமாதானத்தை கண்டறிய முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறான். ஆபிரகாமுக்குள் கிறிஸ்துவின் ஆவி இருந்ததுபோல நமக்குள் இருந்தால், அப்பொழுது நாம் அவனைப் பின் தொடர்ந்து செல்வோம். எல்லா தேவனுடைய சர்வாயுதவர்கங்களோடும், நம்மை சூழ பாளயமிறங்கியிருக்கிற தேவ தூதர்களோடும் நாம் பின் தொடர்ந்து சென்று, விழுந்துபோன நம்முடைய சகோதரனைத் திரும்பக் கொண்டு வருவோம். 69 முடிவிலே யுத்தமானது முடிவடைகின்றபோது, நாம் மீண்டும் மெல்கிசேதேக்கை சந்திப்போம், தேவனுக்கு ஸ்தோத்திரம், அங்கே ஆபிரகாமை ஆசீர்வதித்து, அவனுக்கு ஆசீர்வாதத்தை அளித்து, அவனுக்கு அப்பத்தையும், திராட்சரசத்தையும், இராபோஜனத்தை அளித்த அவரையே சந்திப்போம். யுத்தம் முடிவடைகின்றபோது, நாம் அவரை சந்திப்போம். நாம் ஆபிரகாமின் வாக்குத்தத்ததின் சுதந்தரவாளிகளாயிருக்கிறபடியால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரராயிருக்கிறபடியால், பாதையின் முடிவில் அவரை சந்திப்போம், யுத்தம் முடிவுறும்போது, மீண்டும் அப்பமும் திராட்சரசமும் புசிப்போம். 70 யார் இந்த மெல்கிசேதேக்கு? “அந்த ஒருவர் தகப்பனும், தாயுமில்லாதவராயிருந்தார், அவர் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவராயில்லாதிருந்தார்.” அவர் அங்கே மீண்டும் இராப்போஜனம் தருவார். உங்களுக்கு அது புரிகிறதா?. [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 71 நாம் குறிப்பிட்ட இரவுகள் தன்னடக்கத்துடன் வந்து, நாம் ஒன்று சேர்ந்து வந்து, நாம் கர்த்தராகிய இயேசுவின் மரணத்திலும், அடக்கத்திலும், உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டுகிற இராபோஜனத்தை ஊழியக்காரர்களின் கரங்களிலிருந்து வாங்கிப் புசிக்கிறோம். அந்த—அந்தத் திரை, அவருடைய சரீரத்தில், தேவன் திரையிடப்பட்டிருந்தார். நாம் அதை ஒரு பிரதிநிதியாக எடுத்துக்கொள்கிறோம், “நாம் உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, ஆவியினால் புதியதாய் பிறந்திருக்கிறோம்.” நாம் எல்லா விசுவாசிகளுமாய் ஒன்று சேர்ந்து கிறிஸ்துவின் சரீரத்தோடு நடக்கிறோம். 72 பெரிய யுத்தம் முடிவுறுகின்றபோது, நாம் மீண்டும் கிறிஸ்துவோடு வந்து, நாம் அவரோடு தேவனுடைய ராஜ்ஜியத்தில் இராபோஜனம் எடுப்போம்: மீண்டும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் மாம்சத்தைப் புசித்து, நவமான திராட்சை பழ ரசத்தை பானம்பண்ணுவோம். ஓ! அவர் தான் மெல்கிசேதேக்கு. அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். 73 இப்பொழுது இன்னும் சற்று கூடுதலாக இங்கே அவரைக் குறித்து அப்படியே வாசிப்போம், 18-வது வசனம். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு…(உங்களுக்கு இது புரிகிறதா?)…அப்பமும் திராட்ரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து; வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம்…ஆபிரகாமுக்கு உண்டாவதாக! அவனை ஆசீர்வதித்து…அவனை ஆசீர்வதித்து… தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். அவன் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் செலுத்தினான், ஆபிரகாம் கொள்ளையிட்டவைகளில்லெல்லாம் தசமபாகம் செலுத்தினான். 74 இப்பொழுது பவுல் இங்கே தொடர்ந்து எழுதுகையில், நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது வரப்போகும் பாடத்திற்கான ஒரு பிண்ணணியை அளிக்க விரும்புகிறேன். சோதோமின் ராஜா ஆபிரகாமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான். இப்பொழுது சோதோமின் ராஜா, “இப்பொழுது, நீர் என்னுடைய பிரஜைகளை திரும்ப எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான். அதற்கு, ஆபிரகாம் சோதோமின் ராஜாவைப் பார்த்து;…நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும்…எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். ஏல் ஏலோன், “வானத்தையும் பூமியையும் உடையவர்.” அவன் பணத்தை எடுத்துக் கொள்ளும்படியாக ஒரு பெரிய கூட்டத்தை நடத்தவில்லை. அவனுக்கு விழுந்துபோன தன்னுடைய சகோதரன் மாத்திரமே தேவையாயிருந்தது. …ஆபிரகாமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு…உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்… வாலிபர் சாப்பிட்டதுபோக, என்னுடனே வந்த…புருஷருடைய பங்கு மாத்திரமே வரவேண்டும்;… 75 இப்பொழுது, ஆபிரகாம், “நான் ஒரு சரட்டையாகிலும், பாதரட்சையின் வாரையாகிலும் எடுத்துக்கொள்ளேன்” என்று கூறினதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் அதிகமான பணத்தை சம்பாதிக்க யுத்தத்தில் சண்டையிடவில்லை. மெய்யாகவே, உண்மையான யுத்தங்கள் சுய நல நோக்கங்களினால் சண்டையிடப்படுகிறதில்லை. யுத்தங்கள் பணத்திற்காக சண்டையிடப்படுகிறதில்லை. யுத்தங்கள் நோக்கங்களுக்காகவும், கொள்கைகளுக்காகவுமே சண்டையிடப்படுகின்றன. மனுஷர் கொள்கைகளுக்காகவே யுத்தத்தில் சண்டையிடுகின்றனர். ஆபிரகாம் லோத்தை மீட்டுக் கொண்டுவர புறப்பட்டுச் சென்றபோது, அவனால் ராஜாக்களை அடித்துத் துரத்தி, அவர்களுடைய எல்லா உடைமைகளையும் கைப்பற்றிக் கொள்ள முடியும் என்பதை அவன் அறிந்திருந்த காரணத்தால் புறப்பட்டுச் செல்லவில்லை. அவன் “தன்னுடைய சகோதரனைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கொள்கைக்காகவே புறப்பட்டுச் சென்றான். 76 பரலோக ராஜாவின் ஆவியின் ஏவுதலின் கீழ் அனுப்பப்பட்டுள்ள எந்த ஊழியக்காரனும் பணத்திற்காகச் செல்லமாட்டான்; அவன் பெரிய சபைகளை உண்டுபண்ணச் செல்லமாட்டான், அவன் ஸ்தாபனங்களை ஊக்குவிக்கச் செல்லமாட்டான். அவன் ஒரு கொள்கைக்காக மாத்திரமே செல்வான். அது “விழுந்துபோன தன்னுடைய சகோதரனை திரும்பக் கொண்டுவருவதற்காகவேயாகும்.” அவன் காணிக்கையில் ஒரு அமெரிக்க வெள்ளி நாணயத்தைப் பெற்றுக்கொண்டாலும், அல்லது அதையும் அவன் பெற்றுக்கொள்ளவில்லையென்றாலும், அது அவனுக்கு ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது. 77 நான் கூறுவது போன்றே, “உண்மையான யுத்தங்கள் கொள்கைகளுக்காக சண்டையிடப்பட்டு நடத்தப்படுகின்றவேயன்றி பணத்திற்காக அல்ல. சபையில் சேர்ந்துள்ள புருஷரும் ஸ்திரீகளும் புகழ்பெற்றோராயிருக்கவே சபைக்கு வருகிறார்கள், ஏனென்றால் ஜோன்ஸ் அங்கே உள்ள சபையை சார்ந்திருக்கிறார் அல்லது அவர்கள் தங்களுடைய சபையை ஒரு சிறிய சபையிலிருந்து ஒரு பெரிய சபைக்கு மாற்றிக்கொள்கின்றனர், நீங்கள் அதை ஒரு சுயநல நோக்கத்திற்காகவே செய்து கொண்டிருக்கிறீர்கள், அதற்கு பின்னால் சரியான கொள்கையே இல்லை. நீங்கள் யுத்தத்தில் மனப்பூர்வமாய் முன் நிற்க வேண்டும். 78 இந்தக் கூடாரத்தில் இங்கே காரியங்கள் தவறாக நடக்கும்போது, புருஷர்களாகிய நீங்களும், ஸ்திரீகளாகிய நீங்களும் வேறு எங்காவது ஓடிப்போய்விட்டு அல்லது அந்த சிறு வம்புச் சண்டை அல்லது கடுஞ்சினக்குமுறல் முற்றும் பெறும்வரை வெளியே இருந்து விடுகிறீர்கள், அப்படியானால் உங்களுடைய அனுபவத்தோடு ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. உண்மையே. 79 நமக்கு இங்கே ஒரு வழக்கம் உண்டு. நமக்கு ஒரு - நமக்கு இங்கே ஒரு ஒழுங்கு உண்டு. இந்த சபை வேதாகமத்தின் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்குள்ள எவரேனும் சரியானதைச் செய்யவில்லையென்றால், அவர்கள் சரியில்லை என்று நீங்கள் கருதினால், அப்பொழுது நீங்கள் அவரிடத்திற்கு சென்று, அவரிடத்தில் பேசுங்கள். நீங்கள் அவரை ஒப்புரவாக்க முடியவில்லையென்றால், அப்பொழுது உங்களோடு யாராவது ஒரு சகோதரனை, ஒருவரை அல்லது இருவரை அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதும் அவர் ஒப்புரவாகவில்லையென்றால், அதன்பின்னர் அதை சபைக்குச் சொல்லுங்கள். அப்பொழுது சபையானது அவரை வெளியேற்றி, அவரோடு அதற்கு மேல் ஐக்கியமே கொள்ளாது. இயேசு, “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்றார். 80 அந்தக்காரணத்தினால் நீங்கள் அதிகத் தொல்லைகளை உடையவர்களாயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் வேதாகமக் கொள்கைகளை பின்பற்றுகிறதில்லை. சபையில் உள்ள யாராவது ஒரு கலகத்தை உண்டுபண்ண காரணமாயிருந்தால், அல்லது ஏதோக் காரியம் தவறாக நடைபெற்றால், அப்பொழுது நீங்கள் அந்த மனிதனைக் குறித்து அல்லது அந்த ஸ்திரீயைக் குறித்து பேசுவது உங்களுடைய கடமை அல்ல. ஆனால் அந்த மனிதனிடத்திலோ அல்லது அந்த ஸ்திரீயினிடத்திலோ போய், அவனுடைய தவறை அவனிடத்தில் எடுத்துக் கூறுவது உங்களுடைய கடமையாயுள்ளது. அவன் உங்களுக்கு செவிகொடுக்கவில்லையென்றால், அப்பொழுது உங்களோடு வேறு யாராவது ஒருவரை அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதும் அவன் செவிகொடுக்கவில்லையென்றால், அப்பொழுது சபையானது அவனை கட்டவிழித்துவிடுகிறது. இயேசு, “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்.” அதுவே சபையினுடைய வல்லமையாயிருக்கிறது. 81 இங்கே அண்மையில், என்னுடைய நண்பரான ஒரு நல்ல பிரசங்கியாருக்கு ஒரு பையன் இருந்தான், அந்தப் பையன் தன்னுடைய சொந்த சபைக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவன் புகைப்பிடித்துக்கொண்டும், மது அருந்திக் கொண்டுமிருந்த ஒரு இளம் பெண்ணோடு சுற்றித் திரிய ஆரம்பிக்கும் ஒரு நிலையை அடைந்துவிட்டான். அப்பொழுது பிரசங்கியாரோ, “உண்மையிலேயே, அது அவனுடைய தனிப்பட்ட காரியம்” என்று கூறிவிட்டார். என்னுடைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பர், அவனும் ஒரு அருமையான பையன். ஆனால் அவன் ஒரு வாலிப ஸ்திரீயோடு முழு மோகங்கொண்டிருந்தான். அவளுக்கோ திருமணமாகி சில பிள்ளைகளும் இருந்து வந்தனர். அவளுடைய கணவனும் உயிரோடிருந்து கொண்டிருந்தான். எனவே அவர்கள்…செய்துகொள்ள…அந்தப் பையன் அவளை திருமணம் செய்துகொள்ளப் போகிறானோ என்று அவர் பயமடைந்திருந்தார். ஆகையால் அந்த சகோதரன் முழுவதும் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தான். எனவே அவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய பையனுடைய இன்ன-இன்ன இந்த குறிப்பிட்ட காரியத்திற்காக நீர் அவனிடத்திற்கு போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீர் அவனிடத்தில் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். 82 நான், “சகோதரனே…” என்றேன். நான் கிட்டத்தட்ட அவருடையப் பெயரையே கூறிவிட்டிருப்பேன். அதற்கு நான் அவரிடத்தில் “உங்களுக்கு ஒரு மேலான வழி உள்ளது. என்னை அனுப்பாதீர்கள். அந்தப் பையன் சரியாக ஜீவித்துக் கொண்டிருக்கவில்லையென்றால், அப்பொழுது சபையானது அவன் தவறு செய்துகொண்டிருப்பதைக் கண்டிருந்தால், அப்பொழுது சபையே இந்த வேலையைச் செய்யும்படியானதாய் உள்ளது. அது சபையினிடத்தில் விடப்பட்டது. எனவே சபையோர் சென்று அவனிடத்தில் கூறுங்கள்” என்றேன். 83 ஆகையால் அவர் ஒரு சகோதரனை அழைத்துக்கொண்டு போய் அவனிடத்தில் கூறினார். அதன் பின்னர் அந்தப் பையன் அதேக் காரியத்தையே மீண்டும் செய்து கொண்டிருக்கிறானா என்பதை அந்த சகோதரன் அறிந்துகொள்ளும்படிக்கு திரும்பவும் அவனிடத்திற்கு சென்றான். அவன் அதையே செய்துகொண்டிருந்தான். எனவே அவர் மற்றொரு சகோதரனை, இன்னும் இரண்டு பேரை, இரண்டு உதவிக்காரர்களை அழைத்துச் சென்று, அந்தப் பையனிடத்தில் கூறினார். அப்பொழுதும் அவன் அதற்கு செவிகொடுக்க மனதாயில்லை. பின்னர் அவர்கள் அதை சபைக்குக் கூறினர். அவனுடைய பாவமானது சபைக்கு முன்பாக கூறப்பட்டபோதும், சபையோடு ஒப்புரவாகும்படி அவன் பல இரவுகளாக சபைக்கே வராமலிருந்தான், அதன் பின்னர் சபையானது அவனை கட்டவிழ்த்துவிட்டது. 84 அப்பொழுதுதிலிருந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் அவன் சளிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டான். அப்பொழுது மருத்துவரோ, “அவன் உலகத்தில் உயிரோடிருக்கும்படியான ஒரு வாய்ப்பும் இல்லை” என்று கூறிவிட்டார். அப்பொழுது அவன் மீண்டும் மனந்திரும்பி வந்தான். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். 85 நாம், “ஓ, நீங்கள் இன்ன-இன்னாரை சபையிலிருந்து உதைத்துத் தள்ள வேண்டும். நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் அல்லது மற்றதைச் செய்ய வேண்டும்” என்று அதைச் செய்ய நாமாகவே முயற்ச்சிக்கிறோம். ஒரு சபை என்ற வகையில் நீங்கள் அதற்குரிய உங்களுடைய பாகத்தை செய்துள்ளீர்களா? அங்குதான் உங்கள் காரியம் உள்ளது. அதுவே அவர்களை மனந்திரும்பி வரவழைக்கச் செய்யும் வழியாய் உள்ளது. ஒரு முறை அவர்களை பிசாசினிடத்தில் ஒப்புக்கொடுங்கள். 86 தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்த இந்த மனிதனைக் குறித்து பவுல் என்னக் கூறினான்? அவர்களால் அவனை சரிப்படுத்த முடியவில்லை. எனவே பவுல், “அவனை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுங்கள்” என்றான். அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். அதற்கு அடுத்த நிரூபத்தில் பவுல் எழுதும்போது, இந்த மனிதன் சரிப்படுத்திக் கொண்டான் என்று எழுதினான். நிச்சயமாக. நாம் அவருடைய ஒழுக்க விதிகளை பின்பற்றுவோமேயானால், தேவன் இந்தக் காரியங்களை செய்யும் ஒரு வழியினை தேவன் உடையவராயிருக்கிறார். 87 சபையில் ஏதோக் காரியம் தவறாக நடக்குமேயானால், அது சபையோர் மத்தியில் இருக்குமேயானால், நீங்கள் ஒவ்வொருவரும் சகோதரர்களாயிருக்கிறீர்கள். உதவிக்காரர்களின் குழுவில் உள்ள உதவிக்காரர்களாகிய உங்களில் ஒருவர் ஒழுங்காக நடக்கவில்லையென்றால், மற்ற உதவிக்காரர்கள் வந்து, ஒரு கூட்டம் நடத்தி, அந்த சகோதரனை சரிப்படுத்தி ஒப்புரவாக்க முயற்சியுங்கள், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரிடத்தில் சொல்லுங்கள் அல்லது உங்களுடைய அங்கத்தினர்களில் ஒருவராயிருந்தால், நீங்கள் யாராயிருந்தாலும் சரி அவ்வாறு செய்யுங்கள். அதன்பின்னர் அது அவருக்கு முன்பாக கொண்டுவரப்பட வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அதன்பின்னர் அதை போதகரிடத்தில் வந்து சொல்லுங்கள். அதன்பின்னர் அவர் சபையிலிருந்து நீக்கப்படுகிறார், அப்பொழுது அவர் ஒரு அஞ்ஞானியைப் போலவும், ஒரு ஆயக்காரனைப் போலவும் இருப்பாராக. அதன்பின்னர் கர்த்தர் அவர் பேரில் கிரியை செய்யப் போவதைக் கவனித்துப் பாருங்கள், அப்பொழுது அவர்தாமே திரும்பி வருகிறார். அப்பொழுது அவர் உள்ளே தவழ்ந்து வருகிறார். ஆனால் நாமாகவே அதைச் செய்ய முயற்சிக்கிறோம், நாம் ஒவ்வொரு காரியத்தையும் நாம் செய்யக் கூடிய வழியிலேயே…செய்ய முயற்சிக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், இப்பொழுது நாம் அதை ஒருபோதும் ஒரு வெற்றியடையச் செய்வதில்லை. 88 இப்பொழுது இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் ராஜா, பிரபு, உன்னதமானவரின் ஆசாரியர் ஆபிரகாமைச் சந்தித்து, அவரை ஆசீர்வதித்தார். ஆபிரகாம் அவருக்கு தன்னுடைய தசமபாகத்தைச் செலுத்தினான். அவர் சாலேமின் ராஜாவாயிருந்தார். அவர் யுத்தம் முடிவுற்ற பிறகு, அந்த மனுஷரை ஜெயங்கொண்டப் பிறகு அப்பமும், திராட்சரசமும் கொண்டு வந்து, இராபோஜனத்தை ஆபிரகாமுக்குக் கொடுத்தார். 89 இப்பொழுது “எல்லா போர்களுமே,” நான் கூறுவதுபோல, “கொள்கைகளுக்காகவே சண்டையிடப்படுகின்றன.” இப்பொழுது சபையில் உங்களுக்கு ஒரு சிறு சண்டை இருக்குமாயின், அது சரியான கொள்கைக்கானதாய் இருக்க வேண்டும். நீங்கள் சரியான காரியத்திற்காக சண்டையிட வேண்டும். சபையின் ஒவ்வொரு அங்கத்தினனும் அதைச் செய்ய வேண்டியதாயுள்ளது. இப்பொழுது இந்த போதனை சபைக்கானதாய் உள்ளது. அதற்காகத்தான் நாம் இங்கே இருக்கிறோம். அதற்காகத்தான் நான் இங்கு நின்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் தேவனுடைய வார்த்தையும் உள்ளது, அது சபைக்கானதாய் உள்ளது. 90 எந்தக் காரியமும் இந்த சபைக்கு தடங்கலாயிருக்க ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். எந்தக் காரியமாவது தடங்கல் செய்தால், அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் குற்றவாளியாயிருக்கிறீர்கள். நீங்கள் இருக்கின்ற உங்களுடைய பல்வேறுபட்ட சபைகளில், உங்களுடைய சபையில் ஏதோ ஒரு காரியம் தவறாக நடைபெற்றுக்கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அந்த சபையின் கண்காணியாயிருக்கிறீர்கள். அது போதகரைப் பொறுத்ததாயிருக்கவில்லை. அது உதவிக்காரரின் குழுவினைப் பொறுத்தது மாத்திரமல்ல. அது உங்களை, தனிப்பட்ட உங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்ததாயுள்ளது. எனவே நீங்கள் அந்த சகோதரனிடத்திற்குச் சென்று, உங்களால் அவரை ஒப்புரவாக்க முடிகிறதா என்று பாருங்கள். அப்படி ஒப்புரவாக்க முடியவில்லையென்றால், அதன்பின்னர் உங்களோடு இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்துச் சென்று பேசிப்பாருங்கள், அதுவும் முடியவில்லையென்றால் அப்பொழுது திரும்பி வந்து விடுங்கள். அவர் அதற்கு செவிகொடுக்கவில்லையென்றால், அதை சபைக்கு கூறிவிடுங்கள். அப்பொழுது அவர் தேவனுடைய இராஜ்ஜியத்திலிருந்து நீக்கப்படுகிறார். தேவன், “நீங்கள் அவரை அங்கே நீக்கிவிடுவீர்களேயானால், நான் அவரை இங்கே நீக்கிவிடுவேன், நீங்கள் இந்த ஒழுங்கினூடாக சென்றிருப்பீர்களேயானால், நலமாயிருக்கும்” என்றார். அதன்பின்னர் அவர் அழிவிற்காக…அவனுடைய மாம்சத்தின் அழிவுக்காக பிசாசை அவனண்டை அவிழ்த்து விடுவார். அதன்பின்னர் அவன் திரும்பி வந்து விடுவான். அது உண்மையே. அந்த விதமாகவே அவனைத் திரும்பி வரச் செய்கிறார். அவன் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அவன் திரும்பி வந்துவிடுவான். அவன் தேவனுடையப் பிள்ளையாயில்லையென்றால், ஏன்—ஏன், அவன் அப்படியே தொடர்ந்து சென்று கொண்டிருப்பான், அப்பொழுது பிசாசு அவனை தன்னுடைய நித்திய ஸ்தலத்திற்கு அனுப்பிவிடுவான். 91 இப்பொழுது, அதனுடைய நோக்கங்களை அது பொறுத்ததாயுள்ளது. நீங்கள் அதை யாரோ ஒருவருக்காக உள்ளே நுழைக்கும்போது, அப்பொழுது அது வித்தியாசமானதாயுள்ளது. ஆனால் அந்த மனிதன் குற்றவாளியாயிருப்பானேயானால்! லோத்து ஒரு எபிரெயனாயிருந்தும், அவன் அங்கு சென்றபோது, பின்வாங்கிப் போய்விட்டான். அவன் கிருபையில் இருந்தான், ஆனால் அவன் அதிலிருந்து விழுந்து போய்விட்டிருந்தான். அவன் வெளியேறிவிட்டபோது…லோத்து—லோத்து இரட்சிக்கப்பட்டிருந்தான். லோத்து இரட்சிக்கப்பட்டிருக்கவில்லையென்று ஒருபோதும் எண்ணிக்கொள்ளவேண்டாம். அவன் இரட்சிக்கப்பட்டிருந்தான். காரணம், அவன் எல்லா நேரத்திலும் தவறான இடத்தில் இருந்தபோது, வேதம், “சோதோமின் பாவங்களினால் நாள்தோறும் நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டான்” என்று உரைத்துள்ளது. இப்பொழுது, அவனுடைய மாம்சம் ஒரு காரியத்தை செய்து கொண்டிருந்தது. அவனுடைய முடிவு என்னவாயிருந்தது? அவன் அதிக அவமானத்தையேக் கொண்டுவந்தான். அவனுடைய மனைவியோ ஒரு உப்புத் தூணாக மாறிவிட்டாள். அவன் தன்னுடைய குமாரத்திகளினாலே பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆகையால், அது என்ன ஒரு அவமானத்தைக் கொண்டு வந்தது என்பதை உங்களால் காண முடியும், ஏனென்றால் அவன் கிருபையிலிருந்து விழுந்துபோய், ஒருபோதும் அவன்தானே மீண்டும் சீர்ப்படுத்தபடவேயில்லை. எனவே தேவன் அவனை பூமியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. 92 ஆனால் அவன் அப்பொழுதும் ஒரு விழுந்துபோன சகோதரனாகவே இருந்தான், அவனை மீண்டும் திரும்பக் கொண்டுவர தன்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் ஆபிரகாம் செய்தான். ஆபிரகாமுக்குள்ளிருந்த ஆவியானது, இன்றைக்கு சபைக்குள்ளிருக்கிற கிறிஸ்துவின் ஆவியாய் இருக்கிறது. சகோதரன் என்ன செய்திருந்தாலும் பொருட்படுத்தாமல், அவனை மீண்டும் கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் கொண்டுவர உங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அவன் என்ன செய்திருந்தாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் கடினமாக முயற்சியுங்கள். 93 இப்பொழுது, நாம் இந்த மெல்கிசேதேக்கைக் குறித்த, இந்த மகத்தான சாலேமின் ஆசாரியரைக் குறித்த, வானங்களையும், பூமியையும் உடையவரானவரைக் குறித்த இந்த பாடத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், நாம் இப்பொழுது இங்கே மீண்டும் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இப்பொழுது முதலாவதாயிருப்பது: இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். அவர் தேவகுமாரனாயிருக்கவில்லை. அவர் குமாரனின் தேவனாயிருந்தார். அவர் தேவகுமாரனாயிருக்கவில்லை, மெல்கிசேதேக்கு அவ்வாறு இருக்கவில்லை. ஆனால் அவர் தேவகுமாரனின் பிதாவாயிருந்தார். 94 இப்பொழுது அவர் கொண்டிருந்த இந்த சரீரமானது, அவர் அதை சிருஷ்டித்திருந்தார். அது ஒரு ஸ்திரீயின் மூலமாக கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. ஆகையால் அந்த சிருஷ்டிக்கப்பட்ட சரீரத்தினால்…அவரால் முடியாது…அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்த ஒரு சரீரத்தை உண்டு பண்ணியிருந்தார். “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. தேவன் ஆவியாயிருக்கிறார்.” அது ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் அல்லது அது என்னவாயிருந்தாலும் அல்லது அவர்கள் தரிசனத்தின் மூலம் கண்டிருந்த ஏதோ ஒரு ரூபத்தில் இருந்தாலொழிய மானிடக் கண்கள் அந்தக் காரியங்களைக் காண்கிறதில்லை. ஆனால்…தேவன் தம்மை ஏதோ ஒரு வழியினூடாக வெளிப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். தேவன் ஆபிரகாமுக்கு தம்மை ஒரு மனிதனின் ரூபத்தில் வெளிப்படுத்தினார். அவர் மோசேக்கு தம்மை ஒரு மனிதனின் ரூபத்தில் வெளிப்படுத்தினார். அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் தம்மை வெளிப்படுத்தினார். அவர் யோவான் ஸ்நானனுக்கு ஒரு புறாவின் ரூபத்தில் தம்மை வெளிப்படுத்தினார். நீங்கள் பாருங்கள், அவர் தம்மை அந்த ரூபங்களில் வெளிப்படுத்தினார். அவர் தம்மை ஒரு மனித ரூபத்தில் சாலேமின் ராஜாவாக; எருசலேமின் ராஜாவாக: பூமிக்குரிய எருசலேமின் ராஜாவாக அல்லாமல் பரலோக எருசலேமின் ராஜாவாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தபோது, அவர் தம்மை அந்த ரூபத்தில் வெளிப்படுத்தினார். அவர் தேவனுடைய குமாரனுக்கு “ஒப்பானவராயிருந்தார்.” 95 இப்பொழுது, தேவகுமாரன் ஒரு ஸ்தீரியினூடாக வரவேண்டியதாயிருந்தது, இங்கே சிருஷ்டிக்கப்பட வேண்டியதாயிருந்தது; ஒரு ஸ்திரீயின் கருப்பையினால் வரவேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அதேக் காரியத்தினூடாகவே மரணம் வரவேண்டியதாயிருந்தது. 96 தேவன் ஆதியில் செய்த சிருஷ்டிப்பைப் போன்றதினூடாக அவரால் வரமுடியாது. தேவன் ஆதியிலே மனிதனை உண்டாக்கினபோது, ஸ்திரீக்கு அதனோடு எந்தவிதமான சம்மந்தமும் இல்லாதிருந்தது. தேவன் அப்படியே, “உண்டாக்ககடவது” என்று கூறினபோது, மண்ணிலிருந்து ஒரு மனிதன் தோன்றினான். அவர் அவனை அழைத்தார், அதனோடு எந்த ஸ்திரீக்குமே எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்தது. ஆனால், ஸ்திரீயானவளோ அப்பொழுது மனிதனுக்குள் இருந்தாள். 97 தேவன் ஸ்திரீயானவளை ஆதாமினுடைய விலாவிலிருந்து எடுத்தார். அது உண்மைதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அதன் பின்னரே ஸ்திரீயானவள் பாலியல் தொடர்பினூடாக மனிதனைப் பிறப்பித்தாள். ஆகையால் தேவனால் செய்ய முடிந்த ஒரே வழி…அவரால் அந்த ஆவிக்குரிய சரீரத்தில் வரமுடியாதிருந்தது. அவரால் மெல்கிசேதேக்காக வர முடியவில்லை. அவர் ஒரு மனிதனாக வரவேண்டியதாயிருந்தது, அவர் ஸ்திரீயினூடாக வரவேண்டியதாயிருந்தது. “உன் வித்து சர்ப்பதினுடைய தலையை நசுக்கும். அதனுடைய தலை உன்னுடைய குதிங்காலை நசுக்கும்.” இது புரிகிறதா? [“ஆமென்.”] தேவன் ஒரு ஸ்திரீயினூடாக வரவேண்டியதாயிருந்தது, அவர் தம்முடைய குமாரன், கிறிஸ்து இயேசுவின் சரீரத்தில் வாசம் செய்தபோது, அவர் அதைச் செய்தார். “தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்.” அவர் ஒரு பலியாக தம்முடைய சொந்த இரத்தத்தையே செலுத்தினார். அவர் உங்களை நித்திய ஜீவனுக்கென்று இரட்சிக்கும்படியாக மரணத்தின் வாய்க்காலினூடாக தம்முடைய ஜீவனை அளித்தார். 98 ஆகையால் தேவன் அதன்பின்னர் வந்தார், அவர் தேவனுடைய குமாரனுக்கு “ஒப்பானவராய்” இருந்தார். புரிகிறதா? அவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பான ஒரு மனிதனாய் இருந்தார். இப்பொழுது அவரால் தேவகுமாரனாய் இருக்க முடியாது, ஏனென்றால் இந்த மனிதன் நித்தியமானவராயிருக்கிறார். 99 தேவகுமாரனுக்கு ஒரு துவக்கம் இருந்தது, அவருக்கு ஒரு முடிவும் இருந்தது. அவர் தன்னுடைய பிறப்பின் ஒரு—ஒரு நேரத்தை உடையவராயிருந்தார். அவர் தன்னுடைய மரணத்தின் ஒரு நேரத்தை உடையவராயிருந்தார். அவர் துவக்கத்தையும், முடிவையும் உடையவராயிருந்தார். அவர் தகப்பனும் தாயும் உடையவராயிருந்தார். 100 இந்த மனிதனுக்கு தகப்பனும், தாயும், துவக்கமும், முடிவின் நேரமும் இல்லாததாயிருந்தது. ஆனால் அவர், இந்த மனிதன், மெல்கிசேதேக்கு தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவராயிருந்தார். 101 இப்பொழுது, தேவகுமாரன், அவர் உலகத்தில், ஒரு ஸ்திரீயின் ரூபத்தில், ஒரு ஸ்திரீயின் மூலமாக, மனிதனுடைய ரூபத்தில் வந்தபோது கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் மீண்டும் உயிரோடெழுப்பப்பட்டார், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுந்து, இப்பொழுது அவர் என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கிறார். அந்த சரீரம் நிலைத்திருக்கும் வரை நாமும் கூட நிலைத்திருப்போம். காரணம் அவர் பூமியிலிருந்து உயிரொடெழும்பினார், நாமும் அவருடைய சாயலில் உயிரோடே எழுப்பப்படுவோம். அதுவே சுவிசேஷ கதையாய் உள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. தூதர்களாய் அல்ல, இயற்கைக்கு மேம்பட்டவர்களாய் அல்ல, சிறகுடைய ஒரு கூட்ட பறவைகளாய் அல்ல, ஆனால் புருஷரும், ஸ்திரீகளுமாய் அவருடைய சாயலில் நிற்போம். ஆமென், ஆம் ஐயா. 102 நான் இதை அடிக்கடி கூறியிருப்பதுபோல, நான் இதை இங்கே இந்த நேரத்தில் மீண்டும் கூறுகிறேன். இது பொருத்தமானதாய்த் தோன்றுகிறது. என்னுடைய வழுக்கைத் தலையில் கிட்டத்தட்ட முழுவதும் கொட்டாமலிருந்த ஐந்து அல்லது ஆறு முடியை வாரிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய மனைவி, “பில்லி, நீர் வழுக்கைத் தலையாகிக் கொண்டிருக்கிறீர்” என்று கூறினாள். 103 அதற்கு நான், “ஆனால் நான் அவைகளில் ஒன்றையும் இழந்து போகவில்லையே” என்றேன். 104 அப்பொழுது அவள், “அவைகள் எங்கே இருக்கின்றன?” என்று கேட்டாள். 105 அதற்கு நான், “நான் அவைகளைப் பெற்றுக்கொள்ளும் முன்பு அவைகள் எங்கே இருந்தன என்று எனக்கு கூறு, அப்பொழுது அவைகள் எங்கே எனக்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நான் உனக்குக் கூறுவேன்” என்றேன். அது உண்மை. 106 நான் முன்பு சண்டையிடுபவனாய், குத்துச் சண்டையிடுபவனாய் இருந்து வந்தேன். அப்பொழுது நான் பலமானவனாகவும், பரந்த தேக அமைப்பு கொண்டவனாயுமிருந்தேன். அப்பொழுது நீங்கள் இந்த சபையைத் தூக்கி என் முதுகின் மீது வைத்தால், நான் அதனோடு வீதியில் நடந்து செல்வேன் என்பதை நான் எண்ணிப்பார்த்தேன். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இப்பொழுதோ நான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்திருக்கும்போது, நாற்பது வயதிற்கு மேல் கடந்து விட்டதை நான் தெளிவாக உணருகிறேன். புரிகிறதா? நான் வழக்கமாக முன்பு இருந்தது போன்று இப்பொழுது இல்லை. நான் ஒவ்வொரு நாளும் பெலவீனமாகிக்கொண்டேயிருக்கிறேன். நான் என்னுடைய கரங்களை நோக்கிப் பார்க்கையில், “இங்கே பாருங்கள். நான் வயோதிக மனிதனாகிக் கொண்டேயிருக்கிறேன்” என்பதை எண்ணிப்பார்க்கிறேன். நான் என்னுடைய தோள்பட்டைகளை நோக்கிப் பார்க்கிறேன். நான் அதிக எடை கூடியிருப்பதைக் காண்கிறேன். நான் முன்பெல்லாம் இருபத்தியெட்டு அங்குல அளவுள்ள அரைக் கச்சையையே அணிவேன். இப்பொழுதோ நான் முப்பது அங்குல அளவு கொண்ட அரைக்கச்சையை அணிகிறேன். பாருங்கள், நான் வயோதிகனாகிக்கொண்டேயிருக்கிறபடியால், பருமனாகி, நலிவுற்றுப் போகிறேன். 107 அது என்னவாயிருக்கிறது? நான் வழக்கமாக புசிக்கிற அதே ஆகாரத்தையேப் புசிக்கிறேன். நான் முன்பு ஜீவித்து வந்ததைக் காட்டிலும் சுத்தமாகவும், மேலாகவும் ஜீவிக்கிறேன். ஆனாலும் தேவன் எனக்காக ஒரு நேரத்தை நியமித்திருக்கிறார். நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த நாளிலே அவர் என்னை மீண்டும் எழுப்புவார் என்பதே ஆசீர்வதிக்கப்பட்ட சிந்தனையாயுள்ளது. நான் இருபத்தைந்து வயதாயிருந்தபோது பெற்றிருந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் மீண்டுமாய் என்றென்றைக்குமாயிருக்கும்படிக்குப் பெற்றுக்கொள்வேன். ஆமென். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. இந்த வயோதிகம் எனக்கு என்ன தொந்தரவு செய்கிறது? எனவே நான் இதை அறிந்துள்ளபடியால், நான் அவரை விசுவாசிக்கிறபடியால், நான் வருடாவருடம் பிசாசை அதிலிருந்து வீழ்த்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாயினும் இதுவோ வெறுமென ஒரு குறுகிய கால வாழ்க்கையாயுள்ளது. நாம் நமக்கு வாக்களிக்கப்பட்ட எழுபது ஆண்டுகள் மாத்திரமே தரித்திருந்தாலும், அது துன்பமும், துக்கமுமேயன்றி வேறென்னவாயிருக்கிறது? அது என்னவாயுள்ளது? நீங்கள் இந்த தொற்றுநோய் பரவக் கூடிய இடத்தை அவ்விடத்தில் உள்ள அந்த மகிமையான காரியத்திற்காக மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா? 108 ஏன்? கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! என்னுடைய உட்புறத்தில் உள்ள ஏதோ ஒன்று ஒரு நாள் அந்த மெல்கிசேதேக்கை சந்திக்க, அவர் என்னிடத்தில் சமாதானமாய் பேசி, நித்திய ஜீவனை அவர் எனக்கு அளித்தார். இந்த ஜீவியம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் ஒரு கூடாரமேயன்றி வேறொன்றையும் பொருட்படுத்துகிறதில்லை. இந்த இரண்டு வேதாகமங்களும் எனக்கு முன்பாக இருக்க, நான் இதை முழு உத்தமத்தோடு கூறுகிறேன். என்னுடைய தேவன் என்னோடிருப்பதன் மூலமாக நான் சுவிசேஷத்தை பிரசங்கித்திருக்க, என்னால் அவருக்காக இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாவிட்டாலும், என்னுடைய பிள்ளைகள் தங்களை கவனித்துக்கொள்ளுமளவிற்கு பெரியவர்களாயிருந்தால், அப்பொழுது அவர் என்னை இப்பொழுதே எடுத்துக்கொள்ள விரும்புவாரானால், “ஆமென்,” அதுவே இதற்கு தீர்வாகிறது. ஆம் ஐயா. 109 நான் எண்பது வயதுடையவனாயிருந்தாலும் அல்லது நான் இருபது வயதுடையவனாயிருந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? நான் கர்த்தரை சேவிக்கும்படியான ஒரே காரியத்திற்காக மாத்திரமே இங்கு இருக்கிறேன். அவ்வளவுதான். நான் இப்பொழுது செய்வது போன்று என்னால் இன்னமும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடிந்தால், எனக்கு எண்பது வயதாகும்போதும், எனக்கு நாற்பது வயதோ அல்லது எண்பது வயதோ ஆனாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. இன்றிரவு அநேக புருஷர்கள் எண்பது வயதுடையவர்களாய் இருக்கின்றனர். எண்பது வயது நிரம்பிய ஒரு வயோதிகன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்க, ஏராளமான பிள்ளைகள் மரித்துப்போகலாம், அவர்களில் அநேகர் மரித்துப் போய்விடலாம். ஆயினும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அது உங்களுடைய நோக்கங்களையும், உங்களுடைய கொள்கைகளையும் பொறுத்ததாயுள்ளது. நாம் கர்த்தராகிய இயேசுவை சேவிக்கும்படிக்கே இங்கு இருக்கிறோம். அவ்வளவுதான். 110 அதாவது, “இந்த ஜீவன் கிட்டத்தட்ட ஒரு மனுஷன் பேசுகிற புகையைப் போன்றதாய் உள்ளது: அது கொஞ்சக்காலந் தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறது” என்று இதைக் குறித்து அறிந்துள்ளோம். ஆனால் நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் நம்மை மீண்டும் உயிரோடெழுப்புவதாக அவர் வாக்குபண்ணியிருக்கிறார். நாட்கள் முடிவுறும்போது, நாம் அவரோடு இராப்போஜனம் எடுப்போம், அப்பொழுது அவர், “உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று கூறுவார். 111 நாம் எந்த காரியத்தை உடையவர்களாயிருந்தாலும், அல்லது நாம் உடையவர்களாயில்லையென்றாலும், அப்பொழுது அது இங்கு என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? நாம் வாலிபமாயிருந்தாலும் அல்லது நாம் வயோதிகமாயிருந்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீங்கள் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா என்பதே முக்கியமான காரியமாகும். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்களால் அவரை சேவிக்க முடியுமா? நீங்கள் உலகத்தின் காரியங்களை விற்றுபோட்டுவிட்டீர்களா? யுத்தம் முடிவுற்ற பிறகு நீங்கள் மெல்கிசேதேக்கை சந்தித்தீர்களா? 112 தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஏறக்குறைய எனக்கு இருபத்தியொரு வயதாயிருந்தபோது ஒரு நாள் எனக்கு இதனோடு, அதனோடு, மற்றதோடு ஒரு யுத்தம் உண்டாயிருந்தது. நான் ஒரு குத்துச் சண்டையிடுபவனாயிருக்க வேண்டும் என்று விரும்பினேன், அல்லது நான் ஒரு கண்ணி வைப்பவனாயிருக்க வேண்டும் அல்லது வேட்டைக்காரனாயிருக்க வேண்டும் என்று விரும்பினேன், நான் என்னாவாயிருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் நான் மெல்கிசேதேக்கை சந்தித்தேன், அவன் எனக்கு இராபோஜனம் கொடுத்தார், அப்பொழுது அது முதற்கொண்டு அது என்றென்றைக்குமாய் தீர்த்து வைக்கப்பட்டது. அல்லேலூயா! நான் அவருடைய பக்கமாக சென்றுவிட்டேன். நான் பாதையில் களிகூர்ந்து கொண்டிருக்கிறேன். அது பாதையின் முடிவிற்கு வரும்போது, மரணமானது என்னை முறைப்பார்த்து பார்க்க, அப்பொழுது நான் அதற்கு ஒருபோதும் பயப்படமாட்டேன் என்பதை நான் இப்பொழுதே உணருகிறேன். நான் நடந்து சென்று அதை எதிர்நோக்க விரும்புவேன். நான் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறவரை அறிந்திருக்கிறேன் என்றும், அது உண்மையென்றும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்துள்ளேன் என்பதையும் அறிவேன். அவர் மரித்தோர் மத்தியிலிருந்து கூப்பிடும்போது, நான் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வருவேன். அது உண்மை, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்திருக்கிறேன். நான் வயோதிகனாயிருந்தாலும் அல்லது நான் வாலிபமாயிருந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நான் சிறியதாயிருந்தாலும் அல்லது நான் பெரியதாயிருந்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? நான் நிறைவாயிருந்தாலும் அல்லது நான் பசியாயிருந்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? எனக்கு தலை சாய்க்க ஒரு இடமிருந்தாலும் அல்லது எனக்கு தலைசாய்க்க ஒரு இடம் இல்லாமலிருந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுப்பண்ணுகிறது? 113 “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை,” ஆனால் அவர் மகிமையின் இராஜாவாயிருந்தார். 114 நாம் இன்றிரவு ராஜாக்களும், ஆசாரியர்களுமாயிருக்கிறோம். நாம் எதையாவது உடையவர்களாயிருந்தாலும் அல்லது நாம் எதையும் உடையவர்களாயில்லையென்றாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நாம் தேவனை உடையவர்களாயிருக்கும் வரையில், நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். நாம் தேவனுடைய பிரசன்னத்தில், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தில் உட்கார்ந்துகொண்டு, “நானே மரித்த அவராய் இருந்தேன், மீண்டும் உயிரோடிருக்கிறேன், நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று சாட்சிப்பகர்ந்த அவருடைய கரங்களிலிருந்து ஆவிக்குரியப் பிரகாரமான இராபோஜனத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஓ அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? ஒரு கூடாரமோ அல்லது ஒரு குடிசையோ, நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் ஒரு மாளிகையை எனக்காக அங்கே கட்டிக்கொண்டிருக்கிறார்களே! அவருடைய கருவூலப் பெட்டிகள் மாணிக்கங்களாலும், வைரங்களினாலும், வெள்ளியினாலும், பொன்னினாலும் நிறைந்திருக்கின்றன. அவர் சொல்ல முடியாத ஐஸ்வரியங்களை உடையவராயிருக்கிறார். 115 நான் யுத்தத்திலிருந்து வந்தபோது, ஒரு நாள் நான் அவரை சந்தித்தேன். நான் என்னுடைய வெற்றிப் பதக்கங்களை கீழே வைத்துவிட்டேன். அது முதற்கொண்டு நான் ஒரு யுத்தத்திலும் சண்டையிடுவதில்லை. அவர் எனக்காக அவைகளில் சண்டையிடுகிறார். நான் அவருடைய இளைப்பாறுதலில் அப்படியே சார்ந்திருக்கிறேன், நான் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்துள்ளேன் என்பதை அறிந்திருக்கிறேன். அந்தக் காரியங்கள் அவ்வளவுதான். அது வேறென்ன காரியத்தைச் செய்கிறது? 116 நாம் என்ன செய்ய முடியும்? கவலைப்படுகிறதினாலே உங்களுடைய சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியுமா? உங்களுடைய தலைமுடி சுருளாயிருந்தாலும் அல்லது நீங்கள் எந்தவிதமான தலைமுடியை உடையவர்களாயிருந்தாலும் அல்லது தலைமுடியேயில்லாமலிருந்தாலும் நீங்கள் எதற்கு கவலைப்படுகிறீர்கள்? அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீங்கள் வயோதிகராயிருந்தாலும், நீங்கள் தலைமுடி நரைத்தவராயிருந்தாலும், நீங்கள் தோள்பட்டை தொங்கினவராயிருந்தாலும், நீங்கள் அவ்வாறில்லையென்றாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? ஆமென். இது வெறுமென ஒரு குறுகிய காலமாய் உள்ளது, ஆனால் அதுவோ என்றென்றைக்குமானதாய் உள்ளது. காலத்தின் யுகங்கள் உருண்டோடும்போதும், காலங்கள் உருண்டோடும்போதும், நீங்கள் ஒருபோதும் மாறவேமாட்டீர்கள், அவருடைய இடைவிடா நித்திய காலங்களினூடாக செல்லுவீர்கள். இது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? 117 நான் அவரை சந்தித்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ராஜாக்களை முறியடித்துத் திரும்பி வருகிறபோது ஆபிரகாமை சந்தித்த அந்த அதே மெல்கிசேதேக்கு ஒரு நாள் எனக்கு இராப்போஜனம் கொடுப்பார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக. “பரலோகத்தின் தேவன்.” ஏல் ஏலோன்; மகத்தானவர், “நான் இருக்கிறேன்,” நான் இருந்தேன் என்றவர் அல்ல; நான் இருக்கிறேன், நிகழ்காலம். “அவர் அவனை ஆசீர்வதித்தார்.” 118 இங்கே இன்னும் சற்று மேற்கொண்டு கவனிப்போம், ஆகையால் நாம் இந்தப் பாடத்தை சற்று இன்னும் உன்னிப்பாகப் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது 4-வது வசனம். இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்… நானும் கூட அதை அப்படியே சிந்தித்துப் பார்க்கிறேன். “இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்.” அவர் தேவகுமாரனுக்கும் மேம்பட்டவராயிருக்கிறார். தேவகுமாரனுக்கோ தகப்பனும் தாயுமிருந்தனர்; இவருக்கோ அவ்வாறு இருக்கவில்லை. தேவ குமாரனுக்கு ஒரு துவக்கத்தின் நேரமும், முடிவின் நேரமும் இருந்தது; இவருக்கோ அவ்வாறு இருக்கவில்லை. அது யாராயிருந்தது? அது குமாரனின் பிதாவாகும். அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய்க் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசமபாகம் கொடுத்தான். 119 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப் பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளை பெற்றிருக்கிறார்கள். 120 இப்பொழுது நீங்கள் ஒரு காரியத்தைக் காண விரும்பினால், இதைக் கவனியுங்கள். ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில்வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். 121 ஆபிரகாம் வாக்குத்தத்ததை உடையவனாயிருந்தான், இந்த மனிதனோ வாக்குத்தத்ததை பெற்றிருந்த ஆபிரகாமை ஆசீர்வதித்தார். இது யாராயிருந்தது? லேவியின் புத்திரர் தங்களுடைய சகோதர்களுக்கு தசமபாகம் செலுத்தினர் இல்லை…அவர்களுடைய சகோதரர்கள் லேவியருக்கு தசமபாகம் செலுத்தினர். தங்களுடைய சகோதரரின் சம்பாத்தியத்திலிருந்து தங்களுடைய ஜீவியத்திற்காக, பத்தில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி அவர்கள் கர்த்தரின் ஒரு கட்டளையைப் பெற்றிருந்தனர், ஏனென்றால் அவர்கள் ஆசாரியத்துவத்தை உடையவர்களாயிருந்தனர். இப்பொழுது நீங்கள் சரியாக அதைக் குறித்துப் பேசுகையில், மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தை தவறு என்று இது வெளிப்படையாய்த் தெரியப்படுத்துகிறது. அது சரியே. ஆனால் இந்த மனிதன்…வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தவன், பூமியின் மீதிருந்த மகத்தான மனிதன், ஆபிரகாம் இந்த மனிதனை சந்தித்து, அவருக்கு தசமபாகத்தை செலுத்தினான். [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] அவர் பெரியவராயிருக்க வேண்டியதாயிருந்தது. 122 கவனியுங்கள். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை நிச்சயமாக, அவர் யாராயிருக்கிறார் என்பதை கவனியுங்கள். அன்றியும், இங்கே மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்… அதுவே ஆசாரியர் மற்றும் பிரசங்கிமார்கள் போன்றவர்களின் முறைமையின் ஆசாரியத்துவமாய் உள்ளது. மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள். புரிகிறதா? …அங்கேயோ, பிழைத்திருக்கிறேன் என்று சாட்சி பெற்றவன் வாங்கினான். 123 ஒரு மனிதன் ஒருபோதும் பிறந்திராமலும், ஒருபோதும் மரியாதவனுமாயிருந்து, துவக்கமும் முடிவும் இல்லாமலும், தகப்பனும் தாயும் இல்லாமலும், வம்சவரலாறும் இல்லாமலிருந்து, அதே சமயத்தில் வானத்தையும், பூமியையும், அதில் உள்ள எல்லாவற்றையும் உடையவராயிருக்கும்போது, அவர் எந்த…அவர் ஏன் தசமபாகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? அவர் ஏன் ஆபிரகாம் தசமபாகத்தை செலுத்தும்படி கேடுக்கொள்ள வேண்டும்? தசமபாகத்தை செலுத்துவது என்ன ஒரு கண்டிப்பான காரியமாய் உள்ளது என்பது உங்களுக்குப் புரிகிறதா? தசமபாகம் செலுத்துவது சரியானதாயுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தசமபாகம் செலுத்த கடமைபட்டவனாயிருக்கிறான். அது உண்மையே. அது ஒருபோதும் மாற்றமடைந்திருக்கவில்லை. 124 இப்பொழுது: தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். 125 இப்பொழுது, ஓ, இங்கே ஒரு காரியம் உள்ளது. அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், 126 என்ன லேவியா? ஆபிரகாம் லேவியினுடைய முப்பாட்டனாராயிருந்தார். வேதம், “லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபோது, அவன் தசமபாகம் செலுத்தினான்” என்று இங்கே கூறியுள்ளது. அவன் பூமியில் தோன்றுவதற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்னரே, அவன் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகத்தை செலுத்திக் கொண்டிருந்தான். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 127 அப்படியானால் நியமனஞ்செய்தலுக்கு முன்னர் உள்ள முன்குறித்தலில் விசுவாசங்கொள்ள முடியாத உங்களைத் தான், இங்கே லேவி ஆபிரகாமின் அரையிலிருந்து தோன்றும் நான்கு தலைமுறைகளுக்கு முன்னரே அவன் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் செலுத்திக் கொண்டிருந்தான். வேதவாக்கியத்தினூடாக நாம் இதை ஆராய்ந்து பார்க்க நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். 128 நீங்கள் அதை எரேமியா 1:4-ல் உள்ளதைப் போன்று எடுத்துப் பார்த்தால், தேவன், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” என்றார். அப்படியானால் நீங்கள் செய்தீர்கள் என்று என்னக் கூற முடியும்? நான் செய்தேன் என்று என்னக் கூற முடியும்? அது இரங்குகிற தேவனாலேயாம். தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்னே நம்மை அறிந்துள்ளார். 129 எவரேனும் கெட்டுப்போக வேண்டும் என்று அவர் விரும்பமுடையவராயிருக்கவில்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் அவர் தேவனாயிருப்பாரானால், அப்பொழுது யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார், இல்லையென்றால் அவர் எந்தக் காரியத்தையும் அறியாதவராயிருக்கிறார். அவ்வாறு அவர் அறிந்திருக்கவில்லையென்றால்…உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, யார் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்கள் என்பதை அறிந்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் தேவனல்ல. அவர் முடிவற்றவராயிருப்பாரானால், அப்பொழுது அவர்…அவர் ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு பேனையும், ஒவ்வொரு சிறு விஷ பூச்சியையும் பூமி உருவாகுவதற்கு முன்னமே, அவை பூமியில் தோன்றுவதற்கு முன்னமே அறிந்திருக்கிறார். அது உண்மை. அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். உலகத்தோற்றத்திற்கு முன்னமே அவன் நம்மை அறிந்திருக்கிறார். வேதம், “அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மை முன் குறித்திருக்கிறார்” என்று உரைத்துள்ளது. 130 நாம் இதை ஒருமுறை அப்படியே தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் எபேசியர் 1-வது அதிகாரத்திற்கு திரும்பிச் செல்வோம். 5-வது அதிகாரம்…ஒரு நிமிடம், எபேசியர் 1-வது அதிகாரத்தைப் பார்ப்போம். நான் உங்களிடத்தில் கூற முயற்சித்துக்கொண்டிருப்பது ஏதோ ஒரு காரியம் அல்ல என்பதை நீங்கள் உண்மையாகவே புரிந்து கொள்ளும்படியாக நான் இங்கே அதை ஒரு நிமிடம் வாசிக்க விரும்புகிறேன். அது தேவன் உங்களிடத்தில் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. புரிகிறதா? இப்பொழுது எபேசியர் 1-வது அதிகாரத்தை, இதை உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்… எபிரெயர் நிரூபத்தை எழுதின அதே மனிதன் இந்த நிரூபத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். …பரிசுத்தவான்களுக்கு… இது அவிசுவாசிகளுக்கு அல்ல, ஆனால் பரிசுத்தவான்களுக்கு, பரிசுத்தமாக்கப்பட்ட…பரிசுத்தவான்களுக்கு எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற… நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். “அவர்…தெரிந்துகொண்டபடியே…” இப்பொழுது, 4-வது வசனத்தை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர் உலகத் தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே… “நாம்” அங்கே யாராயிருக்கிறோம்? சபை. தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே (கிறிஸ்துவுக்குள்) நம்மைத் தெரிந்து கொண்டபடியே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திராகும்படி முன்குறித்திருக்கிறார். 131 யார் அதைச் செய்தது? தேவன் அதைச் செய்தார். யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை தேவன் ஆதியிலிருந்தே அறிந்திருந்தார். நிச்சயமாக. ஒருவரும் கெட்டுப்போக வேண்டும் என்று அவர் விருப்பங்கொண்டிருக்கவில்லை. ஆனால் நீங்கள், “நல்லது, ஏழ்மையான இயேசுவே, நான் அவருக்காக வருந்துகிறேன். நான் ஒருக்கால் இரட்சிக்கப்பட்டு, அதை அங்கிகரிப்பது மேலானதாயிருக்கும்” என்று நீங்கள் செயல்படுவதைக் காண அவர் இங்கே இயேசுவை அனுப்பவில்லை. இல்லை ஐயா. 132 யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை தேவன் ஆதியிலே அறிந்திருந்தார். ஆகையால் சிலர் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே அவர் முன்னறிந்தவர்களுக்காக ஒரு கிருபாதாரபலியை உண்டுபண்ணவே அவர் இயேசுவை அனுப்பினார். “எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான் களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைபடுத்தியுமிருக்கிறார். (கடந்த காலம்).” அங்குதான் காரியமே உள்ளது. 133 ஆகையால் அது நீங்களே உங்களை காத்துக் கொள்வதல்ல, அது தேவனுடைய கிருபையே உங்களைக் காத்துக்கொள்வதாய் உள்ளது. நீங்களே உங்களை இரட்சித்துக்கொள்ளவில்லை, இல்லை நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு தகுதியாய் ஒன்றையுமே செய்யவில்லை. அது தேவனுடைய கிருபை உங்களை இரட்சித்ததாயுள்ளது. தேவனுடைய கிருபை உங்களை அழைத்தது. தேவனுடைய முன்னறிவு உங்களை அறிந்திருந்தது. அவர் எல்லையற்றவராயிருப்பாரானால், நீங்கள் இந்த சபையில் இன்றிரவு இருப்பீர்கள் என்பதை உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னமே அவர் அறிந்திருந்திருப்பார். அவர் அறிந்திருந்திருக்கவில்லையென்றால், அவர் தேவனல்ல. அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்திருந்தால், அவன் தேவனாகும். அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்திருக்கவில்லையென்றால், அவர் தேவன் அல்ல. அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாய் இருந்தால், அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியவில்லையென்றால், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் அல்ல. அங்குதான் காரியமே உள்ளது. 134 ஆகையால் அது உங்களால் செய்ய முடிந்த ஒரு காரியமாயிருக்கிறது என்று எப்படி உங்களால் கூற முடியும்? அதுவோ உங்களால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாததாயிருக்கிறது. நீங்களும் கூட இங்கே இருக்கிறீர்கள் என்பதே உங்களுக்கான தேவனுடைய அன்பும் கிருபையுமாயிருக்கிறது. உங்களால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது, தேவன் உங்களை தம்முடைய கிருபையினால் அழைத்தார்; நீங்கள் செவிகொடுத்து, கேட்டு, ஏற்றுக்கொண்டீர்கள். 135 “அப்படியானால்”, நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், அது எதை வேண்டுமானாலும் செய்யும்படி செய்கிறது என்று கூறிகிறீரா” எனலாம். நிச்சயமாகவே அவ்வாறுதான் செய்கிறது. நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். “அப்படியானால் அந்த நபர் செய்ய விரும்புகிற எந்தக் காரியத்தையும் அவனால் செய்ய முடியுமே” எனலாம். முற்றிலுமாக. நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறேனோ அதையே நான் எப்பொழுதும் செய்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், நீங்கள் தவறான காரியத்தைச் செய்ய விரும்பமாட்டீர்கள். 136 இன்றிரவு ஒரு பெண், என்னுடைய மனைவி அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். எனக்குள்ள எல்லாவற்றோடும் நான் அவளை நேசிக்கிறேன். நான் மற்றொரு பெண்ணோடு சுற்றித் திரிந்து விட்டதை நான் அறிந்திருந்தும், பின்னர் நான் அவளிடத்திற்கு போய், “மேடா, நான் தவறு செய்துவிட்டேன்” என்று கூறினால் எப்படியிருக்கும்? நான் அவ்வாறு செய்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அவளை நேசிப்பேனேயானால், நான் அதைச் செய்யமாட்டேன். அது உண்மை. 137 இப்பொழுது, நான், “ஓ, என்னால் அதைச் செய்ய முடியாது. அதற்குக் காரணம் ஏன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன். அப்பொழுது அவள் என்னை விவாகரத்து செய்துவிடுவாள், நான்…ஓ, நான் ஒரு பிரசங்கியாராயிருக்கிறேன். அது என்ன செய்யும் என்று புரிகிறதா? அவள் என்னை விவாகரத்து செய்து விட்டால், அது என்னை பிரசங்கபீடத்திலிருந்து எடுத்துப்போட்டுவிடும். ‘விவாகரத்து செய்யப்பட்ட ஒரு மனிதன், ஓ!’ எனக்கு மூன்று பிள்ளைகள் உண்டு; அதைக் குறித்து என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. ஆனால், பையனே, நான்…” என்று இவ்வாறு கூறினால் என்னவாயிருக்கும்? அந்த விதமாகவே அது இருக்குமாயின், நீங்கள் இன்னமும் சட்டப்படிதான் இருக்கிறீர்கள். அது நான் அவளை விவாகம் செய்து கொண்டதன் பேரிலான சட்ட அடிப்படையில் இல்லை. சட்டத்தின் அடிப்படை என்னை அவளிடத்தில் உண்மையாக ஜீவிக்கியச் செய்ய வைக்கிறதில்லை. அது நான் அவளை நேசிக்கிற காரணத்தினாலே உண்மையாய் ஜீவிக்கிறேன். நான் எந்தக் காரியத்தையும் வேண்டுமென்று செய்ய வேண்டியதில்லை. நான் மனப்பூர்வமாய் அதை செய்கிறேன், ஏனென்றால் அது ஒரு அன்பின் விவகாரமாய் உள்ளது. நீங்கள் உங்களுடைய மனைவியை நேசிப்பீர்களேயானால், நீங்களும் அதேக் காரியத்தையேச் செய்வீர்கள். 138 நீங்கள் அந்தவிதமாக, மாம்சபிரகாரமான அன்போடு உங்களுடைய மனைவியை நேசிப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் உண்மையாகவே தேவனை நேசித்தால், நீங்கள் தெய்வீக அன்போடு கிறிஸ்துவுக்கு என்ன செய்ய வேண்டும், அது கோடான கோடி மடங்கு இதைக் காட்டிலும் வலிமையானதாயுள்ளது. நான் இன்றிரவு வெளியே சென்று மது அருந்த முடியும் என்பதை நான் அறிந்திருந்தாலும், என்னால் இன்றிரவு சுற்றித் திரிந்து ஒழுக்கக்கேடாய் நடந்துகொள்ள முடியும் என்பதை நான் அறிந்திருந்தாலும், நான் அதை செய்யும்படி அது என் இருதயத்தில் இருந்தது என்பதை நான் இன்றிரவு அறிந்திருந்து, நான் அவ்வாறு சென்று, அதை செய்துவிட்டிருந்தாலும், அவர் என்னை மன்னிப்பார் என்பதையும் அறிந்துள்ளேன். ஆனாலும் நான் அதைச் செய்யமாட்டேன். நான் அவரைக் குறித்து மிகவும் அதிகமாக எண்ணிப்பார்க்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். நிச்சயமாக. நிச்சயமாகவே. 139 அந்தக் காரணத்தினால்தான் நான் என்னுடைய அனுபவத்தை எந்த ஸ்தாபனத்திற்கும் விற்கமாட்டேன்,(இல்லை ஐயா), எந்த அசெம்பளீஸ் ஆஃப் காட் ஸ்தாபனத்திற்கும், எந்த சர்ச் ஆஃப் காட் ஸ்தாபனத்திற்கும், எந்த யாத்திரீக பரிசுத்தர் ஸ்தாபனத்திற்கும், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்க ஸ்தாபனத்திற்கும் விற்கமாட்டேன். இந்த் அன்பவத்திற்காக விரும்பி கொடுக்கப்படக் கூடிய எந்தக் காரியத்தையும் நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் இது ஒருபோதும் மனிதனால் உண்டானதல்ல. இது தேவனால் உண்டானது. இல்லை ஐயா. நான் என்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை எந்த எல்விஸ் பிரஸ்லியினுடைய அசைந்து சுழன்று ஆடும் நடனப் பாடலுக்காகவும், அல்லது ஏராளமான கார்களுக்கு அல்லது காடில்லா கார்களுக்காகவும் அல்லது அவனைப் போன்று இலட்சக்கணக்கான டாலர்கள் போன்றவற்றிற்காகவும் விற்றுப் போடமாட்டேன். அவனோ ஒவ்வொரு மாதமும் அவ்வாறு சம்பாதிக்கிறான். இல்லை ஐயா. நான் அவரை நேசிக்கிறேன். நான்…நான் அந்த விதமாக அவரை நேசிக்கும் வரையில், நான் அவருக்கு உண்மையாய் தரித்திருப்பேன். தேவன் என்னை அழைத்திருப்பாரேயானால், என்னை தெரிந்துகொண்டிருப்பாரேயானால், அவர் எனக்குள் ஏதோ ஒரு காரியத்தை வைத்திருக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன். 140 நான் திரு.ஐலர் அவர்களை நினைவுகூருகிறேன். நீங்கள் யாவருமே, உங்களில் பெரும்பாலான எல்லோருமே அவரை அறிவீர்கள். மாநில சட்ட மாமன்ற மேலவை உறுப்பினராக இருக்கின்ற அவர் இங்கு வந்து தன்னுடைய வீணை போன்ற வாத்தியத்தை வாசித்திருக்கிறார். என்னுடைய குழந்தை மரித்துவிட்டிருந்த போதூ, என்னுடைய மனைவி மரித்துவிட்டிருந்த போது, அவர்கள் எல்லோருமே இங்கே மரித்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்தனர். நான் என்னுடைய கரங்களை பின்னால் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே வீதியில் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய பழைய வாகனத்திலிருந்து குதித்து, என்னிடத்தில் வந்து அவருடைய கரத்தை என்மீது போட்டு, “பில்லி, நான் உம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் அவர், “நீர் பிரசங்க பீடத்திலேயே கிட்டத்தட்ட மயங்கி விழுந்துவிடுமளவிற்கு நீர் பிரசங்கிப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் வீதியின் மூலையிலும் மற்றுள்ள எல்லாவிடத்திலும் கிறிஸ்துவிற்காக கூக்குரலிடுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அவர் தொடர்ந்து, “இப்பொழுது அவர் உம்முடைய தந்தையை எடுத்துக்கொண்டார். அவர் உன்னுடைய சகோதரனை எடுத்துக்கொண்டார். அவர்கள் இருவரையுமே பறித்துக்கொண்டார். அவர்கள் உம்முடைய கரங்களிலேயே மரித்துப்போயினர். அவர்கள் மரித்து விட்டனர். உம்முடைய மனைவியும் உம்முடைய கரங்களை பிடித்துக்கொண்டே மரித்துப் போய்விட்டார். உம்முடைய குழந்தையும் மரித்துப்போய்விட்டது. அப்பொழுது உமக்கு உதவி செய்ய நீர் அவரை அழைத்தீர். அவரோ தம்முடைய புறமுதுகையே உமக்குக் காட்டினார். எனவே நீர் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார். 141 அதற்கு நான், “நான் அவரை எனக்குள்ள எல்லாவற்றோடும் நேசிக்கிறேன். அவர் என்னை நரகத்திற்கு அனுப்பினாலும், நான் இன்னமும் அவரை நேசிப்பேன்” என்றேன். அவர் நீதிபரராயிருக்கிறார். எனவே அவர் அதை இருபத்தியாறு வருடங்களாக நிரூபித்திருக்கிறபடியால், நான் வேறெதையும் கூறுகிறதில்லை. அது உண்மை. 142 நீங்கள் அவரை நேசிப்பீர்களேயானால் நலமாயிருக்கும்! அதாவது, “என்னால் இதைச் செய்ய முடியாது, என்னால் அதைச் செய்ய முடியாது” என்ற ஒரு கடமையாய் அல்ல. நீங்கள் அதைச் செய்யும்படி மிக அதிகமாய் அவரை நேசிக்கிறீர்கள், ஏனென்றால் அவர் உங்களை தெரிந்துகொண்டார். நீங்கள் அவரை ஒருபோதும் தெரிந்துகொள்ளவில்லை. அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். 143 நீங்களோ, “நான் கர்த்தரைத் தேடினேன், கர்த்தரைத் தேடினேன்” என்று கூறினீர்கள். “எந்த மனிதனுமே தேவனைத் தேடுகிறதில்லை.” அது தேவன் மனிதனை தேடுகிறதாய் உள்ளது. நீங்கள் அவருடைய தயவிற்காக தேடிக்கொண்டிருந்திருக்கலாம், ஆனால் உங்களால் அவரை தேட முடிவதற்கு முன்னரே, அவர் உங்களுடைய சுபாவத்தை மாற்றியிருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்கள், நீங்கள் ஒரு பன்றியாய் இருக்கிறீர்கள். அது உண்மை. 144 ஜனங்களில் சிலராகிய நீங்கள் சபைக்குப் போய், உங்களுடைய உறுப்பினர் நிலையை தக்கவைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து வெளியே போய், உலகத்தில் உள்ள எல்லாக் காரியங்களையும் செய்து, அதன்பின்னர் அப்படியே திரும்பிப்போய், “ஆம், நான் சபையைச் சார்ந்தவன்” என்று கூறுகிறீர்கள். அது தேவனுக்கு சொந்தமாயிருப்பதலிருந்து ஒரு தூரமான வழியில் இருப்பதாகும். நிச்சயமாகவே. நான்…ஆனால், நீங்கள் பாருங்கள், ஜனங்கள் அதைச் செய்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியும். ஓ, அவர்கள் நல்ல சபை அங்கத்தினராயிருக்கிறார்கள். அது உண்மையே. உங்களால் இன்னமும் ஒரு சபை அங்கத்தினராயிருந்துகொண்டு, இந்தக் காரியங்களைச் செய்ய முடியும், ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்துகொண்டு, அவைகளைச் செய்ய முடியாது. 145 நான் இந்தக் காலையில் கூறியிருப்பது போன்றே, “அந்த வயதான காகம், எப்போதாவது மாய்மலமான ஒன்று இருந்ததானால், அது காகமேயாகும்.” அது உண்மை. அதுவும் புறாவும் ஒரே பேழையில் அமர்ந்திருந்தன, ஒரே தங்கும் இடத்தில் அமர்ந்திருந்தன. அந்தக் காகம் அவிழ்த்துவிடப்பட்டபோது, அது திருப்தியடைந்தது, அது சபையிலிருந்து வெளியே போய், அங்கு சென்று பழைய செத்த பிணங்களின் மீது அமர்ந்து, “கா, கா” என கரைந்து, இந்த ஒன்றைப் புசிக்க முடிந்தது, அதனால் அந்த செத்த குதிரையின் மாம்சத்தை புசிக்க முடிந்தது, அந்த செத்த பசுவின் மாம்சத்தைப் புசிக்க முடிந்தது, என்னவெல்லாம் அங்கு இருந்ததோ அவையாவற்றையும் புசிக்க முடிந்தது, அதனால் அது திருப்தியடைந்தது. ஆனால் நோவா புறாவை அவிழ்த்துவிட்ட போது, அதனால் தன்னுடைய உள்ளங்கால்களில் இளைப்பாற முடியாமற்போனது. காகம் செய்ததுபோலவே, ஒரு செத்த மிருகத்தின் மேல் அமருவதற்கு புறாவிற்கு அவ்வளவு உரிமை இருந்தது, ஆனால் அவை இரண்டும் வித்தியாசமான சுபாவங்களை உடையவைகளாயிருந்தன. அவைகளில் ஒன்று, அது துவக்கத்திலேயே ஒரு புறாவாயிருந்தது. மற்றொன்று துவக்கத்திலேயே ஒரு காகமாய் இருந்தது. 146 ஆனால், நீங்கள் கவனிப்பீர்களேயானால், காகத்தினால் ஒரு செத்த பிணத்தின் மீது அமர்ந்து பாதி நாளளவும் புசிக்க முடியும். புறாவோ ஒரு கோதுமை வயலில் அமர்ந்து பாதி நாளளவும் புசிக்கும். காகத்தினால் அங்கிருந்து பறந்துசென்று, அது விரும்புமளவிற்கு புறாவின் ஆகாரத்தைப் புசிக்க முடியும். அதனால் காகம் புசிக்க முடிந்தது போன்றே…இல்லை புறாவினால் கோதுமையைப் புசிக்க முடிந்தளவு காகத்தாலும் கோதுமையையும் புசிக்க முடியும். ஆனால் காகத்தினால் புறாவினுடைய ஆகாரத்தைப் புசிக்க முடியும், ஆனால் புறாவினால் காகத்தினுடைய ஆகாரத்தைப் புசிக்க முடியாது. அது உண்மை. 147 ஆகையால் மாய்மாலக்காரனால் சபைக்கு வந்து, களிகூர்ந்து, சத்தமிட்டு, கர்த்தரைத் துதித்து, அந்தவிதமாக நடந்து கொண்டு, பின்னர் வெளியேத் திரும்பிப் போய், உலகத்தின் காரியங்களில் களிகூர முடியும். ஆனால் மீண்டும் பிறந்த ஒரு கிறிஸ்தவனால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் தேவனுடைய அன்பு அவன் அதைச் செய்யமுடியாத அப்படிப்பட்ட ஒரு ஸ்தானத்திற்கு அவனை நெருக்கிக் கட்டுப்படுத்துகிறது. 148 ஆகையால் நீங்கள் சபையைச் சேர்ந்துகொள்வதன் மூலம், இதைச் செய்வதை, அதைச் செய்வதை விட்டுவிடுதன் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், அப்பொழுது அதே வாஞ்சை உங்களுக்குள் இருக்கிறது. எனவே உங்களுக்கு மற்றொரு முழுகுதல் தேவையாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மையே. 149 ஸ்திரீகளாகிய நீங்கள் சிறிய…குட்டைக் கால்சட்டைகளை அணிந்துகொண்டு, இங்கே வெளியே வீதியில் சென்றுகொண்டு, அதன்பின்னரும் உங்களை ஒரு “விசுவாசி” என்று அழைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாகத்தான் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒருகால் பரிதாபமான ஒரு மாதிரியாய் இருக்கலாம். நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவை உங்களுடைய இருதயத்தில் கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் அதைப் போன்ற அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து நினைத்துப் பார்க்கமாட்டீர்கள். மற்ற ஸ்திரீகள் என்ன செய்கிறார்கள் என்றும், மற்றப் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்றும் நான் கவலைப்படுகிறதில்லை. நீங்களோ வித்தியாசமாயிருப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவை மிகவும் அதிகமாக நேசிக்கிறீர்கள். 150 நான் அன்றொரு நாள் ஒரு வீட்டில் இருந்த ஒரு ஸ்திரீயிடம் பேசினேன், அவள் தன்னுடைய கரங்களை இந்தவிதமாக மேலே உயர்த்திக் கொண்டு, “சங்கை.பிரான்ஹாம், நான் இங்கே என்னுடைய வீட்டில் கிட்டத்தட்ட நிர்வாணமாயிருக்கிறேன். நான் அப்படியே சுற்றி நடந்துகொண்டிருக்கிறேன்” என்றாள். 151 அப்பொழுது நான், “உனக்கு அவமானமாயிற்றே” என்று எண்ணினேன். உன்னுடைய சொந்த வீட்டிலோ, நீ எங்கேயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. சரி. ஆடையணிந்து, ஒரு ஸ்திரீயைப் போல நடந்து கொள்ள வேண்டும், ஒரு பெண்மணியைப் போன்று இருக்க வேண்டும். உனக்கோ அவமானம். ஆனால் நீங்கள் காத்துக்கொள்ள…வேதம், “நீங்கள் அந்தக் காரியங்களிலும், உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், கிறிஸ்துவின் அன்பு உங்களிடத்திலும் கூட இல்லை” என்று கூறியுள்ளது. நீங்கள் கர்த்தரை நேசிப்பீர்களேயானால், அப்படியே உங்களுடைய முழு இருதயத்தோடும், உங்களுடைய முழு ஆத்துமாவோடும், உங்களுடைய முழு மனதோடும் நேசிப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அந்த பழைய அசுத்தமான, ஆபாசமான காரியங்களை உங்களைவிட்டு விலக்குவீர்கள். அது உண்மையே. 152 உதவிக்காரராகிய நீங்கள், இங்கே மற்றவர்களாகிய நீங்கள் இங்கே வீதிக்கு ஓடி, உங்களுடைய கழுத்தை நீட்டி, ஒவ்வொரு ஸ்தீரியையும் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அவமானம்; பின்னர் உங்களை, “தேவனுடைய புத்திரர்” என்றும் அழைத்துக்கொள்கிறீர்கள். இவ்வாறு கூறுவது உங்களை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் அறிவேன். ஆனால் நீங்கள் அங்கே என்றென்றுமாய் சுட்டெரிக்கப்படுவதைப் பார்க்கிலும் இப்பொழுது வாட்டியெடுக்கப்படுவது மேலானதாகும். ஆகையால் நீங்கள் அந்தக் காரியங்களைச் செய்வீர்களேயானால்…இப்பொழுது, ஒரு ஸ்திரீ வீதியில் அரைகுறை ஆடையணிந்து நடந்து செல்லுவாளேயானால், உங்களால் அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நீங்கள், நீங்கள் வீதியில் பார்த்துக்க்கொண்டிருக்கையில், நீங்கள் அவளைக் காண வேண்டியதாயிருக்கிறது, ஆனாலும் உங்களால் உங்களுடைய தலையை திருப்பிக்கொள்ள முடியும். வேதம், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று உரைத்துள்ளது. 153 அருமையான சகோதரியே, நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும். நீங்கள் அதற்கு பதில் கூறப் போகிறீர்கள். நீங்கள் ஒரு லீலி புஷ்பத்தைப் போன்று அவ்வளவு சுத்தமுள்ளவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் உண்மையாகவே அந்த மாதிரியான பாவத்தை, ஒழுக்கக்கேடான பாவத்தை உங்கள் ஜீவியத்தில் ஒருபோதும் செய்யாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த விதமாக உடை உடுத்துவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் நியாயத்தீர்ப்பிலே உங்களை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனோடும் விபச்சாரஞ் செய்ததற்காக பதில் கூறப் போகிறீர்கள். வேதமே அதைக் கூறியுள்ளது. வீதியில் நடந்து செல்லும்போது, யார் குற்றவாளி? அந்த மனிதனா? இல்லை ஐயா. நீங்கள் தான் குற்றவாளியாயிருக்கிறீர்கள். நீங்கள் உங்களை அந்தவிதமாக காண்பித்தீர்கள். 154 ஸ்திரீயானவள் ஒரு மகத்தான ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறாள். அது ஒரு புனிதமான, அருமையான, அற்புதமான ஸ்தானமாகும். ஆனால் அவள் ஒரு தாயாக, ஒரு ஸ்திரீயாக, மற்றும் பெண்மையை அவள் காத்துக்கொள்ள வேண்டிய விதத்தில் தன்னுடைய அலுவலைக் காத்துக் கொள்ள வேண்டும். பெண்மை முறிவுறும்போது, எந்த தேசத்தின் முதுகெலும்பும் முறிவுற்றுவிடுகிறது. அந்தக் காரணத்தினால்தான் இன்றைக்கு நம்முடைய தேசம் சீர்குலைந்துள்ளது, நம்முடைய ஸ்திரீகளின் ஒழுக்க கேடுகளின் நிமித்தமாகவே இந்நிலையில் உள்ளது. அது முற்றிலும் உண்மையே. நிச்சயமாகவே. அது நமக்கு மத்தியிலே அழுகிப்போயிருப்பதே இதற்கு காரணமாயிருக்கிறது. 155 உங்களுக்கு தேவை என்னவென்றால் இந்த மெல்கிசேதேக்கை நீங்கள் ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதேயாகும். ஆமென். அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு அப்பத்தையும், திராட்சரசத்தையும், நித்திய ஜீவனையும் தரட்டும். அப்பொழுது நீங்கள் காரியங்களை வித்தியாசமாக காண்பீர்கள். அப்பொழுது நீங்கள்…அது வித்தியாசமாயிருக்கும். அப்பொழுது நீங்கள் பையன்கள் உங்களிடத்தில் ஓநாயைப் போன்று ஊளையிடும் ஊதல் சத்தம் எழுப்ப, ஓநாயைப்போன்று ஊளையிடும் சத்தத்தை எழுப்ப, அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்புகிறீர்களோ, அதை அவர்கள் செய்ய விரும்பமாட்டீர்கள். நிச்சயமாகவே விரும்பமாட்டீர்கள். நீங்கள் வித்தியாசமாயிருப்பீர்கள். 156 நீங்கள் அந்தவிதமாக உடை உடுத்தி, அங்கே வெளியே செல்வது வேறு நோக்கத்திற்காகவே என்று நீங்கள் என்னிடத்தில் சுட்டிக்காட்டிக் கூறுகிறீர்களா? நீங்களோ, “ஏன்? அது குளிர்ச்சியாக்குகிறது” என்று கூறுகிறீர்கள். நீங்கள் கதை சொல்லுகிறீர்கள். அது குளிர்ச்சியாக்குவதல்ல. விஞ்ஞானமே அது குளிர்ச்சியாக்குகிறதில்லை என்று நிரூபித்திருக்கிறது. அது ஒரு…சகோதரியே, அது உங்கள் மீது வந்துள்ள இச்சையாயுள்ளது. நீங்கள் அதை தெளிவாக புரிந்துகொள்ளுகிறதில்லை. நான் உங்களைப் புண்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை, ஆனால் நான் உங்களை எச்சரிக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறேன். அநேக நன்நடத்தைக்குரிய ஸ்திரீகள் அவர்கள் இருக்க முடிந்தளவு அவ்வளவு சுத்தமாய் இருக்க முடியும், ஒரு அருமையான பெண்மணி இப்படிப்பட்ட காரியங்களோடு வெளியே வீதியில் நடந்து செல்லும்போது, அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அறிந்துகொள்ளும் நினைவற்றவளாயிருக்கிறாள், ஏனென்றால் ஒரு பின்வாங்கிப்போன பிரசங்கியார் உங்களுடைய கணவன் தன்னுடைய தசமபாகத்தை சபைக்கு இனிமேல் செலுத்தமாட்டாரே என்று பயப்படுகிறார். அவர் எப்போதாவது மெல்கிசேதேக்கை சந்தித்திருப்பாரேயானால், அப்பொழுது அவர் அந்தக் காரியங்களை சிந்தித்துப்பார்க்க மாட்டார். அவர் சுவிசேஷத்தையே பிரசங்கிப்பார். அது அவர்களுடைய முதுகுத் தோலையே சுட்டெரித்துப் பொசுக்குவதாயிருந்தாலும், அவர் அதை எப்படியும் பிரசங்கிப்பார். அது முற்றிலும் உண்மை. 157 நீங்கள் அதைச் செய்கிறீர்கள், நீங்கள் அதைச் செய்கிறீர்கள், ஏனென்றால் அது ஒரு இச்சையின் ஆவியாய் உங்கள் மேல் உள்ளது. புருஷர்களாகிய நீங்கள் உங்களுடைய மனைவிகள் அந்தக் காரியங்களைச் செய்ய அனுமதிப்பீர்களேயானால், நீங்கள் ஒரு புருஷன் என்ற நம்பிக்கையே உங்களைக் குறித்து எனக்கு இல்லை. அது உண்மை. அது சரியே. இப்பொழுது அதன்பேரிலான முறையீடுகள் ஏதும் இல்லை. ஏனென்றால்…இல்லை மன்னிப்புக்கோருதலும் இல்லை. ஏனென்றால் அது உண்மை. தன்னுடைய மனைவி வீதியில் சென்று, அந்தவிதமாக நடந்து கொள்ள அனுமதிக்கும் எந்த மனிதனும், சகோதரனே, நீங்கள் அவளுடைய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். அது உண்மை. ஏன்? உங்களைத்தான், என்னே! 158 என்னுடைய மனைவி அதைச் செய்யமாட்டாள் என்று நான் கூறவில்லை. அவள் அதைச் செய்து கொண்டிருக்கையில், நான் அவளோடு ஜீவித்தால், நான் இப்பொழுது என்னவாயிருக்கிறேனோ அதிலிருந்து நான் மாற்றப்பட்டு, தாறுமாறாக்கப்பட்டிருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மையே. என்னுடைய பெண்பிள்ளைகள், அவர்கள் ஸ்திரீகளாகும்போது, அவர்களும் அதைச் செய்யலாம். அவர்கள் செய்யமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. எனக்குத் தெரியாது. அது தேவனுடைய இரக்கத்தைப் பொறுத்ததாயுள்ளது. அவர்கள் செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அப்படி செய்வார்களேயானால், அவர்கள் ஒரு நீதிமானாகிய தகப்பனின் ஜெபங்களை பொருட்படுத்தாமல் இழிவுடன் நடப்பார்கள். அவர்கள் அதைச் செய்வார்களேயானால், அப்பொழுது அவர்கள் சரியாக ஜீவிக்க முயன்ற யாரோ ஒருவருடைய வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் இழிவுடன் நடப்பார்கள். அது உண்மையே. ஆனால் நான் சரியாக ஜீவிக்க விரும்பி, சரியாக போதிக்க விரும்பி, சரியாக இருந்து, அவர்களுக்கு சரியாக அறிவுறுத்த முடிந்தது. அவர்கள் அப்படி செய்வார்களானால், அப்பொழுது அவர்கள் என்னுடைய பிரசங்கத்தைக் கடந்து, என்னுடைய கிறிஸ்துவைக் கடந்து, என்னுடைய எச்சரிக்கைகளைக் கடந்து, அவர்கள் அதைச் செய்தால், அப்பொழுது அவர்கள் கடினப்பட்டு தங்களுடைய வழியில் நகரத்தை அடைவார்கள். அது உண்மை. நிச்சயமாக. அது உண்மை. 159 உங்களுக்கு அவமானம். நீங்கள் எப்போதாவது கிறிஸ்துவை முகமுகமாய் சந்தித்தால், அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்களுடைய இருதயத்தின்மேல் அங்கீகார முத்தமளிக்க, நரகத்தில் உள்ள எல்லா பிசாசுகளும் அவைகளை மீண்டும் நீங்கள் செய்யும்படி ஒருபோதும் செய்யாது. அது உண்மை. நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாறியிருக்கிறீர்கள், உங்களுடைய நேசம் மேலே பரத்தில் உள்ள காரியங்கள் மீது வைக்கப்படுகின்றதேயன்றி, பூமியின் காரியங்களின் மீது வைக்கப்படுகிறதில்லை. ஆமென். நான் அந்தப் பொருளை விட்டுவிடுவது மேலானது. அது மனதைப் புண்படுத்துகிறதாயுள்ளது, சரி. ஆனால் அது சத்தியமாயுள்ளது. 160 சரி, நாம் இன்னும் சற்று மேற்கொண்டு பார்க்கிறபடியால், சற்று கழித்து நாம் முடிக்கவிருக்கிறோம். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான். அதற்குச் சந்தேகமில்லை. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசம்பாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் வாங்கினான். நான்… அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். 161 கிறிஸ்துவின் பேரில் உள்ள உங்களுடைய மனப்பான்மையே உங்களுடைய பிள்ளைகள் என்னவாயிருப்பார்கள் என்ற ஒரு மகத்தான எண்ணப்பதிவினை ஏற்படுத்தும். உங்களுடைய குடும்பத்தினருக்கு முன்பாக நீங்கள் ஜீவிக்கிற ஜீவியமே உங்களுடைய பிள்ளைகள் என்னவாயிருப்பார்கள் என்ற எண்ணப்பதிவினை ஏற்படுத்தும். காரணம், வேதம், “அவர் பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிப்பார்” என்று உரைத்துள்ளது. 162 இப்பொழுது முடிப்பதற்கு முன்னால், அப்படியே ஒரு சில நிமிடங்கள் இருங்கள். அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், (அங்குதான் மீண்டும் உங்களுடைய பூரணப்படுதல் உள்ளது), ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்ப வேண்டுவதென்ன? 163 அது நியாயப்பிரமாணம், பிரமாணக்காரர், பாருங்கள், “ஓ, நீங்கள் இதைச் செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லையென்றால், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல, நீங்கள் ஓய்வுநாளை கடைபிடிக்கவில்லையென்றால்! நீங்கள்…செய்யவில்லையென்றால்…நீங்கள் மாம்சம் புசித்தால்! நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால்!” இவையாவும் நியாயப்பிரமாணஞ்சார்ந்த கருத்துக்கள். “நீங்கள் சபைக்கு செல்லத்தான் வேண்டும். நீங்கள் செல்லவில்லையென்றால், நீங்கள் அதற்கான ஒரு அபராதத்தை செலுத்த வேண்டும். நீங்கள் நோன்பிருக்க வேண்டும்” என்பவைகள். அந்தக் காரியங்களின் பொருளோ அர்த்தமற்றதாயுள்ளது. நீங்கள் தேவனுடைய கிருபையினால், தேவனுடைய முன்னறிவினால், அவருடைய முன்குறித்தலினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் ஆபிரகாமை முன் குறித்தலினால், முன்னறிவினால் அழைத்தார். அவர் அழைத்தார். அவர் ஏசாவை வெறுத்து, யாக்கோபை சிநேகித்தார், அவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்னமே அவ்வாறு செய்தார். அது உண்மை. அது—அது இந்தக் காரியங்களை அறிந்திருக்கிற தேவனுடைய முன்னறிவாய் உள்ளது. 164 அப்படியானால் நீங்கள், “சுவிசேஷத்தை பிரசங்கிப்பதனால் என்னப் பயன்?” என்று கேட்கலாம். 165 இப்பொழுது நான் இதை உங்களுக்குக் கூறுவேன். பவுல் அதற்கு பதிலளித்தான், இல்லை சரியாகக் கூறினால் இயேசு பதிலளித்தார். இயேசு இங்கே இருக்கிறார். அவர், “பரலோக ராஜ்யம் ஒரு மனிதன் ஒரு—ஒரு குளத்திற்கோ அல்லது ஒரு ஏரிக்கோ சென்று அதிலே வலையை வீசுவது போன்றதாயுள்ளது. பின்னர் அவன் அந்த வலையை இழுக்கிறான். அங்கே அதிலிருந்து அவன் ஆமைகளைப் பெற்றுக்கொள்கிறான். அவன் உணவு ஆமை வகைகளைப் பெற்றுக்கொள்கிறான். அவன் சர்ப்பங்களை பெற்றுக்கொள்கிறான். அவன் பல்லிகளைப் பெற்றுக்கொள்கிறான். அவன் தவளைகளைப் பெற்றுக்கொள்கிறான். அவன் சிலந்திப் பூச்சிகளைப் பெற்றுக்கொள்கிறான். அவன் அழுகிய பொருள்களை தின்று வாழ்பவைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவன் மீன்களையும் பெற்றுக்கொள்கிறான்” என்றார். இப்பொழுது மனிதன் அப்படியே வலைவீசிக்கொண்டிருக்கிறான். 166 அந்தவிதமாகத்தான் சுவிசேஷம் உள்ளது. இங்கே அது இப்பொழுது உள்ளது, நான் சுவிசேஷத்தை பிரசங்கித்துக்கொண்டிருக்கிறன். நான் அப்படியே வலையை வீசுகிறேன். பின்னர் நான் அதை இழுக்கிறேன், நான், “விருப்பமுள்ளவர்கள், விருப்பமுள்ளவனெவனோ, அவன் வரக்கடவன்” என்கிறேன். இங்கே சிலர் எழும்பி பீடத்தண்டை வருகிறார்கள். அவர்கள் யாவரும் பீடத்தைச் சுற்று நிற்கிறார்கள், அவர்கள் ஜெபிக்கிறார்கள். அவர்கள் அழுகிறார்கள். நான் எவரையுமே அறியேன். அது என்னுடைய வேலை அல்ல. நான் நியாயந்தீர்க்க அனுப்பப்படவில்லை. 167 ஆனால் அங்கே அதில் சில தவளைகள் இருக்கின்றன. அதில் சில பல்லிகள் இருக்கின்றன. அதில் சில பாம்புகள் இருக்கின்றன. அதில் சில ஆமைகள் இருக்கின்றன. அதில் சில மீன்களும் இருக்கின்றன. நியாயந்தீர்ப்பது என்னுடைய வேலையல்ல. நான், “பிதாவே, நான் என்ன வெளியே இழுத்தேனோ அவை இதோ உள்ளன” என்கிறேன். 168 ஆனால் தவளையோ துவக்கத்திலேயே ஒரு தவளையாகவே இருந்தது. 169 சிலந்தியோ, சிலந்தி, சற்று நேரம் அங்கேயிருந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவைகளினுடைய பெரிய கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “உங்களுக்கு என்னவென்று தெரியுமா? நான் அப்படியே என்னால் கிட்டத்தட்ட நிற்க முடிந்தளவு நின்று விட்டேன்” என்று கூறி, பிளாம்ப், பிளாம்ப், பிளாம்ப், பிளாம்ப் என்று அவைகள் அங்கிருந்து போய்விடுகின்றன. 170 அந்த வயோதிக ஸ்திரீயான சர்பமோ தன்னுடைய தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு, “என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குட்டைகால் சட்டைகள் மற்றுமுள்ள காரியங்களை அணிந்துகொள்வதற்கு எதிராக, அதைப் போன்றதை அவர்கள் பிரசங்கிக்கப்போவதாயிருந்தால், அது என்னைத் தாக்குகிறதாய் உள்ளது. ஆகையால் நான் அந்த பரிசுத்த உருளைகள் கூட்டத்திலிருந்து விலகிவிடுவேன். அது அந்தளவாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறும். நீ துவக்கத்திலேயே ஒரு பாம்பாய் இருந்தாய். அது முற்றிலும் உண்மையே. ஆம். 171 இங்கே திருவாளர் வயோதிகத் தேரை தன்னுடைய வாயில் பெரிய சுருட்டினை வைத்தவாறு அமர்ந்து, அதாவது ஒரு கொம்பற்ற டெக்ஸாஸ் இளங்காளையைப்போல இருந்துக்கொண்டு, அங்கே எழும்பி நின்று, சுற்றும் முற்றும்பார்த்துவிட்டு, “புகைப்பது என்னை ஒருபோதும் குற்றப்படுத்தியதேயில்லை. எனவே நான் இந்தக் காரியத்திலிருந்து இப்பொழுதே வெளியேறவுள்ளேன்” என்று கூறும். வயோதிகத் தவளையாகிய நீ துவக்கத்திலேயே தவளையாக இருந்தாய். அது முற்றிலும் உண்மையே. அது முற்றிலும் உண்மையே. 172 நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய சுபாவமே நிரூபிக்கிறது. நீங்கள் துவக்கத்தில் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியமே பிரதிபலித்துக் காண்பிக்கிறது. அதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமானதாயிருக்கவில்லை. அதைப் புரிந்துகொள்வது உங்களுக்கும் கடினமானதாயிருக்கவில்லை. 173 நான் இங்கே அமர்ந்துள்ள விவசாயி ராய் ஸ்லாட்டர் அவர்களோடு வெளியே சென்று, நான் எருக்குவியலின் மேல் பன்றிகளையும், அந்த குவியலை அவைகள் புசிப்பதையும் கண்டால், நான் அதைக் குறித்து மோசமாக எதையுமே எண்ணிக்கொள்ளமாட்டேன். அது ஒரு பன்றியாயுள்ளது. ஆனால் நான் ஒரு ஆட்டுக் குட்டியை அந்த எருக்குவியலின் மேல் கண்டால், அப்பொழுது நான் வியப்புறுவேன். ஹூ-ஹூ. புரிகிறதா? கவலைப்படாதீர்கள், நீங்கள் ஆட்டுக்குட்டியை அங்கே காணமாட்டீர்கள். அதனால் அதை நின்று பொறுத்துக்கொள்ள முடியாது. அது உண்மை. 174 தேவனுடைய ஆவியினால் பிறந்துள்ள ஒரு மனிதன் உலகத்தின் காரியங்களை வெறுக்கிறான். அது உண்மை, “ஏனென்றால் நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை.” 175 நான் ஒவ்வொருநாளும் ஸ்திரீகளோடு சுற்றித் திரிந்துகொண்டு, அதே சமயத்தில் நான் என் மனைவியினிடத்தில் வந்து, நான் அவளை நேசிக்கிறேன் என்று கூறினால், நான் ஒரு பொய்யன் என்பதை அவள் அறிந்துகொள்வாள். என்னுடைய வார்த்தைகளைக் காட்டிலும் என்னுடைய செயல்கள் அதிகமாய் சத்தமிடும். நிச்சயமாக. நான் அவளை நேசிக்கவில்லை என்பதை நான் அவளுக்கு நிரூபிக்கிறேன், ஏனென்றால் நான் அவளிடத்தில் உண்மையாயிருக்கவில்லை. 176 அவளும் என்னை நேசிப்பதாக என்னிடத்தில் கூறிவிட்டு, ஒவ்வொரு முறையும் நான் வெளியே சென்றுவிட்டப் பிறகு, அவள் யாரோ ஒருவரை கூட்டிக்கொண்டு சுற்றினால், அவள் என்னை நேசிக்கவில்லை என்பதை அது நிரூபிக்கும். சரி. அவளுடைய செய்கைகள் அதை நிரூபிக்கின்றன். அவள் எவ்வளவுதான் என்னிடத்தில், “பில், நான் உம்மை நேசிக்கிறேன். உலகத்தில் உம்மைத்தவிர வேறு யாரையுமே நான் நேசிக்கவில்லை” என்று கூற முயற்சித்தாலும் நான் கவலைப்படமாட்டேன், அவள் ஒரு பொய்க்காரியாயிருக்கிறாள் என்பதை நான் அறிவேன். 177 நீங்களோ, “கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூற முயற்சித்து, உலகத்தின் காரியங்களை செய்து கொண்டிருந்தால், நீங்கள் துவக்கத்திலேயே ஒரு பொய்யராயிருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஏன் அவ்வாறு? மகத்தான பரலோகத்தின் ஆகாய விரிவுகளே உண்மையான காரியங்களினால் நிறைந்திருக்கும்போது, பழைய அரை குறை அனுபவத்தை, அதுபோன்ற வேறு ஏதோ ஒன்றை ஏற்றுக்கொள்வதனால் என்ன பயன்? நீங்கள் ஏன் ஒரு பரிதபிக்கத்தக்க, பாசாங்கு செய்கிற, அரை குறையான, அரைவேக்காடு கொண்ட, கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுபவராயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நீங்கள் உண்மையாகவே மீண்டும் பிறந்த ஒரு தேவனுடைய பிள்ளையாய் பரலோகத்தின் சந்தோஷ—மணிகள் உங்கள் இருதயத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, களிகூர்ந்துகொண்டு, தேவனைத் துதித்துக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை வாழ முடியுமே. 178 நீங்களாகவே அதைச் செய்ய முயற்சிப்பதல்ல, ஏனென்றால் நீங்கள் துவக்கத்திலேயே தவறிப்போவீர்கள். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள், இது அவருடைய வார்த்தையாயுள்ளது, அவர் என்ன கூறினாரோ அது சத்தியம் என்பதன் பேரில் சார்ந்திருங்கள். அவரை விசுவாசியுங்கள், அவரை நேசியுங்கள், அவர் உங்களுக்காக ஒவ்வொரு காரியத்தையும் சரியாக கிரியை செய்யும்படிச் செய்வார். அதுதான் இதுவாகும். அதுவே அந்த கருத்தாகும். 179 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களைக் கடிந்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் சகோதரனே, சற்றுக் கடிந்து கொள்ளுதல் மிகச் சிறந்ததாயுள்ளது. நீங்கள் என்னுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். புரிகிறதா? தன்னுடைய பிள்ளைகள் நேசிக்கிற எந்த தகப்பனும் நிச்சயமாகவே அவர்களைத் திருத்துவான், இல்லையென்றால் அவர் ஒரு சரியான தகப்பன் அல்ல, அது சரிதானே? அது உண்மை. இந்த தகப்பனோ ஒரு கட்டளையை மாத்திரமே உடையவராயிருக்கிறார். அது வீட்டிற்குரிய கட்டளையாயுள்ளது. தேவனோ ஒரு கட்டளையை மாத்திரமே உடையவராயிருக்கிறார், அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது. 180 நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிப்போமேயானால், நாம் அவருடைய வார்த்தையினாலே பிழைப்போம். அது நம்முடைய கடமையாயுள்ளது. நாம் எப்போதாவது தேவனை சந்தித்திருந்தால் நலமாயிருக்கும். நீங்கள், “நான் சபைக்குச் செல்கிறேன். நான் இதைச் செய்ய வேண்டும்” என்று நீங்கள் கூறுவதனால் அல்ல. நீங்கள் பரிதபிக்கத்தக்கவர்களாயிருக்கிறீர்கள். அதைச் செய்யாதீர்கள். நீங்கள் ஒரு புறாவாய் இருக்க முடியும்போது, நீங்கள் ஏன் ஒரு பரிதபிக்கப்படத்தக்க, தளர்வுற்ற நிலையிலான, தேவபக்தியற்ற காகமாயிருக்க விரும்புகிறீர்கள்? நிச்சயமாகவே உங்களுக்கு உங்களுடைய சுபாவம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்கிறீர்கள், தேவனோடு சமாதானமாயிருக்கும்படி நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாகிறீர்கள். 181 இயேசு! “அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.” எபிரெயர் 13:12, 13. ரோமர் 5:1 “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,” கரங்களை குலுக்குவதனால் அல்ல, தண்ணீர் ஞானஸ்நானத்தினால் அல்ல, கரங்களை வைப்பதினால் அல்ல, சத்தமிடுவதனால் அல்ல, அந்நிய பாஷைகளில் பேசுவதனால் அல்ல, எந்த உணர்ச்சியினாலும் அல்ல. “ஆனால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” என்று கூறுகிறது. நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு, புதிய சிருஷ்டிகளாகியிருக்கிறோம், ஏனென்றால் நாம் தேவனுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசித்து, அவரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றிரவு அவருடைய இரத்தம் நம்முடைய ஸ்தானத்தில் நிற்கும்படியாக நம்முடைய பாவத்திற்கான ஒரு கிருபாதாரபலியாக செயல்படுகிறது. 182 பழைய ஏற்பாட்டில், ஐக்கியங்கொள்வதற்கு ஒரே ஒரு இடம் மாத்திரமே இருந்தது, அது இரத்தத்தின் கீழாகும். ஒவ்வொரு விசுவாசியும் ரத்தத்தின் கீழ் வரவேண்டியதாயிருந்தது. சிவப்பான கிடாரி கொல்லப்பட்டு, அது ஒரு பாவநிவாரணபலியாக செலுத்தப்பட்டது. அது சிவப்பாய் இருக்க வேண்டும். உங்களில் எவரேனும் அதை வாசிக்க வேண்டும் என்று விரும்பினால், அது யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில் உள்ளது. அதின் குளம்பும், யாவுமே ஒன்று சேர்ந்து சுட்டெரிக்கப்படவேண்டும். அதன்பின்னர் அது ஒரு தீட்டுக்கழிக்கும் ஜலமாக்கப்பட்டது. அது பாளையத்திற்கு புறம்பே கொட்டி வைக்கப்பட்டது. அது சுத்தமான கரத்தினால் கையாளப்பட வேண்டியதாயிருந்தது. இந்த கிடாரியின் இரத்தம்…ஆசரிப்புக் கூடாரத்து…நிலைக்காலின் மேல் ஏழு தரம் தெளிக்கப்பட்டது. இப்பொழுது, தீட்டுப்பட்ட ஒவ்வொரு நபரும் அங்கு நடந்து சென்று, அந்த இரத்தத்தைப் பார்த்து முதலில் அடையாளங்கண்டுகொண்டு, அந்த இரத்தத்தின் கீழ் மாத்திரமே ஐக்கியம் உண்டு என்பதை தெளிவாக உணர வேண்டும். ஆராதனை செய்கிறவர்கள் உண்மையாகவே அந்த இரத்தத்தின் கீழ் மாத்திரமே அதிகாரப்பூர்வமாக ஆராதனை செய்யக்கூடிய ஒரே ஸ்தலமாய் அது இருந்தது. 183 அப்பொழுது அவன் செய்ய வேண்டியிருந்த முதல் காரியம், அவன் இரத்தத்தின் கீழ் வருவதற்கு முன், அவன் மீது இந்த தீட்டுக்கழிக்கும் ஜலம் தெளிக்கப்பட வேண்டியதாயிருந்து, தீட்டு சுத்திகரிக்கப்பட்டது. 184 அவர்கள் தீட்டுக்கழிக்கும் ஜலத்தை எடுத்து, அதை பரதேசியானவன் மேல் அதை தெளித்து, அவனுடைய பாவத்திலிருந்து அவனை வேறு பிரித்தனர். அதன்பின்னர் அவன் இந்த தெளிக்கப்பட்ட ஏழு இரத்தக்கோடுகளோடு நடந்து சென்று, மற்ற விசுவாசிகளோடு தேவனுடைய பிரசன்னத்தில் ஐக்கியங்கொள்ள வேண்டியதாயிருந்தது. 185 அதைச் செய்வதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. கரங்களை குலுக்குவதனால் அல்ல, சபையில் சேர்ந்துகொள்வதனால் அல்ல, ஞானஸ்நானத்தினால் அல்ல, உணர்சிவசப்படுதல்களினால் அல்ல, ஆனால் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினண்டைக்கு நடந்து சென்று, விசுவாசத்தினால் உங்களுடைய கரங்களை இயேசுவின் தலையின் மேல் வைத்து, “நான் ஒரு பாவி, நீரோ என்னுடைய ஸ்தானத்தில் மரித்தீர். எனக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று என்னிடத்தில் நீர் என்னுடைய பாவங்களை எனக்கு மன்னிப்பீர் என்று சொல்லுகிறது, நான் உம்மை என்னுடைய சொந்த இரட்சகராக இப்பொழுதே ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். அங்கிருக்கின்ற இரத்தத்தின் கீழாக நடந்து சென்று, தேவனுடைய பிள்ளைகளோடு ஐக்கியங்கொள்ளுங்கள். அதுதான் இதுவாகும். அப்பத்தைப் புசித்து, திராட்சரசத்தை பானம்பண்ணி, சபையோடு ஐக்கியங்கொள்ளுங்கள். 186 அவர் அற்புதமானவரல்லவா? அவர் நல்லவரல்லவா? இப்பொழுது, சிநேகிதனே, இது உங்களுக்கு விநோதமாகத் தென்படலாம். ஆனால் நான் இங்கு நின்று இந்தக் காரியங்களை என்னத்திற்காகக் கூறுகிறேன்? நான் அவைகளை கூறி, மற்றவரைக் காட்டிலும் என்னை வித்தியாசமாக்கிக்கொள்ள முயற்சிக்கவா? நான் அவ்வாறு செய்தால், அப்பொழுது நான் மனந்திரும்ப வேண்டும். தேவன் அதைக் கூறின காரணத்தால் நான் அதைக் கூறிக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. கவனியுங்கள். ஒரு நேரம் வரப்போகிறது, அப்பொழுது ஜனங்கள் கிழக்கிலிருந்து மேற்க்குக்குச் சென்று தேவனுடைய வார்த்தையைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருப்பார்கள், ஆயினும் அதைக் கண்டறிய முடியாது, அதுதான், இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. 187 நீங்கள் ஒரு கூட்டத்திற்கு செல்லும்போது, நீங்கள் செய்கிற முதல் காரியம், நீங்கள் அங்கு உள்ளே செல்லும்போது, ஒரு கூட்டத்தார் அந்நிய பாஷையில் பேசி வியாக்கியானமுரைக்கிறதை கண்டறிகிறீர்கள். வேறு யாரோ ஒருவர் எழும்பி, வேதவாக்கியத்தை தொடர்ச்சியாய் மேற்கோள்காட்டுவதை அறிகிறீர்கள், அது மாம்சபிரகாரமானதாயுள்ளது. முற்றிலுமாக. தேவன், “வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்று நமக்குக் கூறினார். அவரைக் குறித்து என்ன? அவர் அதை ஒருமுறை எழுதிவிட்டாரென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அவர் அதை மீண்டும் கூற வேண்டியதில்லை. அந்நிய பாஷைகளும், வியாக்கியானங்களும் சரிதான், ஆனால் அது சபைக்கோ, மற்ற யாரோ ஒருவருக்குமான ஒரு நேரடி செய்தியாயிருக்க வேண்டுமேயன்றி, மாம்சபிரகாரமான, அதைப் போன்ற காரியங்களாயிருக்கக் கூடாது. அப்பொழுதே நீங்கள் இந்த மற்ற எல்லாக் காரியங்களிலும் முன்னேறிச் செல்கிறீர்கள். 188 இங்கே அன்றோரு நாள், இரண்டு மனுஷர் நடந்து வந்தனர்…ஒரு கணவனும், மனைவியும், மற்றொரு கணவனும் மனைவியுமாக, திருமணமான வாலிபர்களாக, மிஷெனரியாக ஆப்பிரிக்காவிற்குச் செல்லும்படியாக ஒரு இடத்திற்குள் நடந்து சென்றனர். அப்பொழுது யாரோ ஒருவர் எழும்பி நின்று ஒரு தீர்க்கதரிசனமுரைத்து, அந்நியபாஷையிலும் பேசி, “அவர்கள் இருவருமே மனைவிகளை உடையவர்களாயிருக்கிறார்கள்,” ஆனால் அது, “அந்தவிதமாக இருக்கக் கூடாது. அவர்கள் தவறான நபர்களை திருமணம் செய்துள்ளனர்” என்று வியாக்கியானமுரைத்தார். அப்பொழுது அந்த இரண்டு பேரும் வேறுபிரிக்கப்பட்டு மீண்டும் மறுவிவாகம் செய்து கொண்டனர். ஒரு மனிதன், மற்றொருவருடைய மனைவியை மறுவிவாகம் செய்து கொண்டு, அதேவிதமாக மற்றொருவரும் செய்து, முண்ணணியில் உள்ள ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தில் உள்ள இவர்கள் மிஷெனரிகளாக ஆப்பிரிக்காவிற்குச் சென்றனர். 189 சகோதரனே, நீங்கள் விவாக வாக்குறுதியை எடுத்துக் கொள்ளும்போது, மரணம் உங்களை விடுவிக்கும் வரை அந்த வாக்குறுதிக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். முற்றிலும் உண்மையே. நிச்சயமாக. நீங்கள் உங்களுடைய வாக்குறுதியை எடுக்கும்போது, அது உறுதிசெய்யப்படுகிறது. 190 அவையாவும் அர்த்தமற்றதாயிற்றே! நீங்கள் சபைகளுக்கு செல்லும்போது, அது மிகவும் குளிர்ந்துபோய், சம்பிரதாயமான, வறண்டு காணப்படுமளவிற்கு அந்த ஆவிக்குரிய வெப்பமானி பூஜ்ஜியத்திற்கு கீழாக ஐம்பது பாகை செல்லக் கூடிய ஒரு நிலையை அடைந்திருக்கும். ஜனங்களோ ஊறுகாயின் மீது அமர்ந்துள்ள பாலூண்ணியைப் போன்றும், வெறுப்புத்தட்டியது போன்றும், முக்கியத்துவமற்றிருப்பது போன்றும், உறைந்து போயிருப்பது போன்றும் அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது அங்கே பின்னால் மூலையில் உள்ள யாராவது ஒருவர் எப்பொழுதாவது ஒருமுறை, “ஆமென்” என்று சற்று கரகரப்பான குரலில் கூறுவதை அவர்கள் கேட்பார்களானால், அது அவர்களை புண்படுத்திவிட்டதைப் போன்று, அவர்கள் எல்லோருமே என்ன சம்பவித்துவிட்டது என்பதை சுற்றும் முற்றும் நோக்கிப் பார்க்கும்படி தங்களுடைய கழுத்தை வாத்தைப் போன்று நீட்டுவார்கள். அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒரு கேலிக்காக அதைக் கூறிக்கொண்டிருக்கவில்லை. இது வேடிக்கைப் பேச்சு பேசுவதற்கான இடம் அல்ல. அது சத்தியமாயுள்ளது. சரி. அது சுவிசேஷ சத்தியமாயிருக்கிறபடியால் நான் அதைக் கூறிக்கொண்டிருக்கிறேன். 191 மற்றொரு பக்கத்தில் நீங்கள் ஒரு கூட்ட அர்த்தமற்ற மாம்சபிரகாரமாக உணர்ச்சிவசப்படுகின்ற ஒரு கூட்டம் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதை பெற்றிருக்க, உண்மையான தேவனுடைய வார்த்தையோ என்னுடைய பாதைக்கு வெளிச்சமான பண்டைய சுவிசேஷ பாதையின் மையத்தில், அல்லேலூயா, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தையும், உலகத்தின் காரியங்களிலிருந்து நம்மை பிரித்தெடுக்கிற தேவனுடைய அன்பையும் நீங்கள் அபூர்வமாய் கேட்கக் கூடிய ஒரு இடத்தையே அடைந்துள்ளது. 192 “சகோதரனே, நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறீர்களா? நீங்கள் அதை பெற்றிருக்கவில்லை. உங்களுடைய முதுகில் குளிர்ச்சியான உணர்வு எழும்புமளவிற்கு நீங்கள் சத்தமிட்டீர்களா? நீங்கள் அக்கினிப் பந்துகளைக் கண்டீர்களா? ஓ, அர்த்தமற்றதாயுள்ளதே! அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை. 193 நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்று தேவனுடைய ஆவியானவர்தாமே உங்களுடைய ஆவியுடனே சாட்சி பகருகிறார். உங்களுடைய ஜீவியம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு என்ற கனிகளைத் தருகிறது. அப்படியானால் நீங்கள் ஒரு கிறிஸ்தவரயிருக்கிறீர்கள். உங்களுடைய ஜீவியம் ஆவியின் கனியைத் தரவில்லையென்றால், நீங்கள் என்ன செய்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை. பவுல், “என்னால் ஒரு பலியாக என்னுடைய சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்கு கொடுக்க முடிந்தாலும், நான் எல்லா தேவ இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், என்னுடைய விசுவாசத்தினால் என்னால் மலைகளைப் பேர்க்க முடிந்தாலும், என்னால் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேச முடிந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” என்று கூறினான். அதைக் குறித்து எப்படி? அது சரியா அல்லது இல்லையா என்பதை முதலாம் கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் கண்டறியுங்கள். 194 இப்பொழுது கொரிந்தியரில் உள்ளதா என்று கண்டறியுங்கள், கொரிந்தியர் இரண்டாம் நிரூபம் 13-ல் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால், அது முதலாம் அல்லது இரண்டாம் கொரிந்தியரில் இருக்கலாம். அங்கே சரியாக முதலாம் கொரிந்தியரில், முதலாம் கொரிந்தியர் 13-ல் உள்ளது. “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசி, அவை இரண்டையும் வியாக்கியானிக்க முடிந்தாலும், வியாக்கியானிக்க முடியாவிட்டாலும், நான் ஒன்றுமில்லை.” ஆகையால் அப்படியிருக்க அதனைக் கொண்டு ஏமாற்றுவதனால் என்ன பயன்? 195 “என்னால் எல்லா தேவனுடைய இரகசியங்களையும் அறிந்துகொள்ள முடிந்தாலும்.” நீங்கள் ஏன் வேதபாட கருத்தரங்களுக்கு சென்று அவைகளைக் குறித்து அதிகமாக கற்றுக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் முதலில் உங்களை தேவனோடு சரிபடுத்திக் கொள்வது மேலானதாகும். நிச்சயமாக. “நான், ‘ஓ, ஸ்தோத்திரம் அல்லேலூயா!’” என்று கூறினாலும் ஒன்றுமில்லை. 196 உங்களுக்கு ஒரு சுகமளிக்கும் கூட்டம் நடந்தாலொழிய அல்லது ஒருவிதமான அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலொழிய உங்களால் சபையில் ஒரு அற்புதத்தையும் கூட கண்டறிய முடியவில்லை. “ஒரு பலவீனமான, விபச்சார சந்ததியார் அடையாளத்தையே தேடுகிறார்கள்.” நீங்கள் அதனோடு என்ன செய்ய விரும்புகிறீர்கள்? 197 பவுலினால் எல்லாவிதமான காரியங்களையும் செய்ய முடிந்து, மலைகளையும் கூட பேர்க்க முடிந்தாலும், அப்பொழுதும் அவன் ஒன்றுமில்லை என்று அவன் கூறினான். “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். ஆனால் நிறைவானது வரும்போது, அது என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கும்,” அன்பு பரிபூரணமானதாயுள்ளது. “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” அதாவது, “நடுங்குகிறவன் எவனோ, குலுக்குகிறவன் எவனோ, பேசுகிறவன் எவனோ, எவனோ என்றா?” “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான்.” பிள்ளைகளே அதை விசுவாசியுங்கள். 198 அவர்கள் அதை, இந்தக் காரியங்களை மற்றும் அந்தக் காரியங்களை அவ்வளவு சிக்கலாக்க முயற்சிக்கிறார்கள். அது ஒரே ஒரு காரியத்தினிடத்திற்கு சரியாகக் கொண்டு வருகிறது; அது தேவனில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட விசுவாசம். அதுதான் இதுவாகும். அதுவே இதைச் சொல்லுகிறது. “விசுவாசத்தினால்,” உணர்ச்சியினால் அல்ல. “விசுவாசத்தினால்,” மனக்கிளர்ச்சியினால் அல்ல. “விசுவாசத்தினால்,” உணர்ச்சிவசப்படுதலினால் அல்ல. “ஆனால் விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்; அதாவது…” நீங்கள் கர்த்தரைத் தேடினக் காரணத்தினாலா? நீங்கள் ஒரு நல்ல நபராய் இருந்த காரணத்தினாலா? ஏனென்றால், தேவன், கிருபையினால் உங்களை முன்னறிந்து, நித்திய ஜீவனுக்கென்று உங்களை நியமித்தார். 199 இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனை அளிப்பேன். ஒருவனும் அவர்களை என் கையிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் என்றென்றைக்குமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் அவர்களைக் காத்துக்கொண்டேன். என் பிதாவினுடைய கையிலிருந்து ஒருவனும் அவர்களைப் பறித்துக் கொள்ள முடியாது. அவரே அவர்களை எனக்குக் கொடுத்தவராயிருக்கிறார். அவர்கள் என்னுடைய அன்பின் ஈவுகளாய் இருக்கிறார்கள்” என்றார். 200 “அவர் முன்னறிந்த யாவரையும் அவர் அழைத்தார்.” அவர் ஒருவனை முன்னறிந்திருந்தாலொழிய, அவர் வேறு யாரையும் அழைக்கிறதில்லை. “அவர் அழைத்த யாவரையும், அவர் நீதிமான்களாக்கினார்; அவர் நீதிமான்களாக்கின யாவரையும், அவர் மகிமைப்படுத்தினார்.” ஆகையால், நீங்கள் பாருங்கள், நாம் மற்றவர்களைப் போல பூரண சற்குணராயிருக்கிறோம். 201 இப்பொழுது, இங்கே உங்களில் ஏராளமானோர் தொண்ணூற்றொன்பது சதவீதத்தினர் பிரமாணத்தைக் கடைபிடிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு, நான் உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தை கூற முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை என்று தெளிவாக உணருவீர்களேயானால் நலமாயிருக்கும். 202 அப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நான் இதைச் செய்ய வேண்டியதாயிருந்தது, நான் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது என்று எப்பொழுதும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று கூறுவீர்கள். அப்பேர்ப்பட்ட ஒரு—அதில் அப்பேர்ப்பட்ட ஒரு வித்தியாசம் உண்டு, சகோதரனே, நீங்கள் என்ன செய்ய வேண்டும், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதாய் உள்ளது. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் அதனோடு ஒரு காரியம் செய்ய வேண்டியதாயிருந்தது என்ற காரணத்தினால் அல்ல. தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னரே உங்களை இரட்சித்தார் என்ற காரணத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். 203 கவனியுங்கள். இங்கே கவனியுங்கள். வேதம் வெளிப்படுத்தின விசேஷத்தில் அதைக் கூறியுள்ளது. இப்பொழுது நான் உங்களை துவக்கத்திலிருந்து முடிவு மட்டுமாய் கொண்டு செல்லப் போகிறேன். வேதம் வெளிப்படுத்தின விசேஷத்தில், அந்த மிருகம் வந்தபோது, அது பூமியின் மேலுள்ள யாவரையும் வஞ்சித்துப்போட்டது, மிருகம் அதைச் செய்தது என்று கூறியுள்ளது. “அது ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத பூமியின் மேலிருந்த யாவரையும் வஞ்சித்துப் போட்டது…” எழுப்புதல் ஆரம்பித்ததிலிருந்தா? அது சரியாகத் தென்படுகிறதா? பிரசங்கியார் வல்லமையான பிரசங்கத்தை பிரசங்கித்த காரணத்தினாலா? அந்த மனிதன் சுகமடைந்த காரணத்தினாலா? “…உலகத்தோற்ற முதல்.” 204 இயேசு எங்கே அடிக்கப்பட்டார்? கல்வாரியிலா? இல்லை, ஐயா. இயேசு உலகத்தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்டார். “இதோ தேவ ஆட்டுக்குட்டியானவர் உலகத்தோற்றத்துக்கு முன்னரே அடிக்கப்பட்டார்.” தேவன் ஆதியிலே, அவர் பாவத்தைக் கண்டபோது, என்ன சம்பவித்தது என்பதை அவர் கண்டார். அவர் வார்த்தையை உரைத்தார். இயேசு உலகத் தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்டார். உலகத்தோற்றத்துக்கு முன்னரே வேதாகமத்தின்படி தேவனுடைய சிந்தையில் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, ஒவ்வொரு நபரும் இரட்சிக்கப்பட்டுவிட்டனர், இரட்சிக்கப்பட்டுவிட்டனர். அப்பொழுதே நீங்கள் இரட்சிப்பில் சேர்க்கப்பட்டுவிட்டீர்கள். ஆகையால் நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? 205 அது தேவனாயுள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! “அது தேவன் கிரியை செய்கிறதேயன்றி; விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” இயேசு உலகத் தோற்றத்துக்கு முன்னரே அடிக்கப்படிருந்தார், அது உண்மையாகவே நான்காயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே சம்பவித்தது. ஆனால் தேவன் அதை மீண்டும் இங்கே உரைத்தபோது, ஒவ்வொரு வார்த்தையும் நிலையான உறுதியானதாயிருக்கிறது. அது மாற்றமுடியாததாய் உள்ளது. அது பிரிக்க முடியாததாய் உள்ளது. அது தவறிப்போக முடியாது. தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்னரே குமாரனை அடித்தபோது, அவர் கல்வாரியில் செய்தது போன்றே அப்பொழுதும் அதேவிதமாக அவர் அடிக்கப்பட்டார். தேவன் அவ்வண்ணமாய்க் கூறுகிறபோது, அது ஒரு முடிவுபெற்ற விளைபொருளாய் உள்ளது. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, உங்களுடைய இரட்சிப்பானது பலியில் சேர்க்கப்பட்டுவிட்டது என்பது நினைவிருக்கட்டும், ஏனென்றால் உங்களுடைய பெயர், “உலகத் தோற்றத்துக்கு முன்னரே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது” என்று வேதம் உரைத்து விட்டது. அதைக் குறித்து என்ன? ஆகையால் நாம் என்ன செய்யப் போகிறோம்? அது இரங்குகிற தேவனாலேயாம். அது தேவன் உங்களை அழைத்ததாயுள்ளது. அது உலகத்தோற்றத்துக்கு முன்னரே தேவன் உங்களை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டதாயுள்ளது. இயேசு, “நீங்கள்—நீங்கள் என்னை ஒருபோதும் தெரிந்து கொள்ளவேயில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உலகத்தோற்றத்துக்கு முன்னே உங்களை அறிந்திருந்தேன்” என்றார். அங்குதான் காரியமே உள்ளது. 206 ஆகையால், பாருங்கள், அது உங்களிடத்தில் பயத்தை எடுத்துப்போடுகிறது. “ஓ, என்னால் தொடர்ந்துப் பற்றிக்கொண்டிருக்க முடியுமா என்று நான் வியப்புறுகிறேன். நான் அதைச் செய்வேன், தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் அப்படியே தொடர்ந்துப் பற்றிக்கொண்டால் நலமாயிருக்கும்.” அது நான் பற்றிக்கொண்டிருக்கிறேனா அல்லது இல்லையா என்றல்ல. அது அவர் பற்றிக்கொண்டிருக்கிறாரா அல்லது இல்லையா என்பதாயுள்ளது. அது அவர் என்ன செய்தார் என்பதாய் உள்ளதேயன்றி, நான் என்ன செய்தேன் என்பது அல்ல. அது அவர் என்ன செய்தார் என்பதாகும். அது மீட்பின் நியாயப்பிரமாணத்தின் கீழ் உள்ளதா? இது முடிப்பதற்கு முன்னர் நான் கூற விரும்புகிற ஒரு சிறு காரியமாய் உள்ளது. 207 ஒரு பெண் குதிரை ஒரு கோவேறு கழுதையை பிறப்பித்திருந்தால், அது என்னவாயிருக்கும்? அந்த குட்டி கோவேறு கழுதைக்கு இரண்டு காதுகளும் கீழே தொங்குவது போலிருக்க, அதனுடைய கண்கள் குறுகிபோயிருக்க, முட்டிக்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்க, வளைந்த கால்களையுடையதாயிருக்க, அதனுடைய வாலோ ஆகாயத்தை நோக்கியவாறு நீட்டியிருக்க, அது என்னே ஒரு பயங்கரமான தோற்றங்கொண்ட மிருகமாயிருந்திருக்கும்! ஏன்? எவருமே…அந்த குட்டி கோவேறு கழுதையோ, “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறும். அவர்கள் இந்தக் காலையில் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, நான் உங்களுக்கு கூறுகிறேன், நிச்சயமாக என்னுடையத் தலையில் அடிப்பார்கள். ஏனென்றால், அவர்கள் என்னை ஒருபோதும் போஷிக்கவில்லை. நான் என்ன ஒரு பயங்கரமான தோற்றமுடையவனாய் காணப்படுகிறேன் பாருங்கள். நான் பிழைக்கும்படியான எந்த ஒரு வாய்ப்பும் பெற்றிருக்கவில்லை” என்று எண்ணிப் பார்த்து கூற முடிந்தால் எப்படியிருக்கும்? 208 அது உண்மை. நீங்கள் எந்த ஒரு வாய்ப்பினையும் பெற்றிருக்கவில்லை. “நான் இந்த உலகத்தில் பிறந்தேன், ஆனால் நான் என்ன ஒரு பயங்கரமான தோற்றங்கொண்டவனாய் இங்கே காணப்படுகிறேன் பாருங்கள். ஆகையால் நான்—நான்—நான்…எனக்கு ஒரு வாய்ப்பே ஒருபோதும் இருக்காது. என்னால் சரியான நிலையில் இருக்க முடியாது. என்னால் சரியாக இருக்கவே முடியாது.” புரிகிறதா? 209 ஆனால் அதனுடைய தாய்க்கு உண்மையாகவே நியாயப்பிரமாணத்தில் கற்பிக்கப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? அவளோ, “மகனே, அது உண்மைதான். நீ சரியான உருவ வடிவமில்லாமல் இருக்கிறாய். நீ பூமியிலிருந்து ஆகாரத்தைப் புசிக்கக் கூட பாத்திரவானாயிருக்கவில்லை. அது உண்மை. நீ பாத்திரவானாயிருக்கவில்லை. ஆனால் மகனே, எப்படியாயினும் நீ என்னுடைய தலைச்சன் பிள்ளையாயிருக்கிறாய். நீ ஒரு சேஷ்டபுத்திர பாகத்தின் கீழ் பிறந்திருக்கிறாய் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஆசாரியனோ உன்னை ஒருபோதும் பார்க்கவேமாட்டான். ஆனால் உன்னுடைய பெயருக்காக, உன்னுடைய ஸ்தானத்தில் குற்றமற்ற, பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டி மரிக்க வேண்டியதாய் உள்ளது, ஆகவே நீ ஜீவிக்க முடியும்” என்று கூறும். 210 அப்பொழுது அந்த குட்டி கோவேறு கழுதையானது தன்னுடைய குதிங்கால்களை மேலே தூக்கி உதைத்து, மகிழ்ந்து கொண்டிருக்கும். அது என்னவாயிருக்கிறது என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை, ஏனென்றால் அது ஒருபோதும் நியாதிபதியினால், ஆசாரியனால் பார்க்கமாட்டாது. அது ஆசாரியன் ஆட்டுக்குட்டியை நோக்கிப் பார்க்கிறதாயுள்ளது. கோவேறு கழுதையையல்ல; ஆட்டுக்குட்டியையே! 211 அது தேவன் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கிறதாயுள்ளதேயன்றி, உங்களையல்ல, அது கிறிஸ்துவை நோக்கிப்பார்ப்பதாகும். ஆகையால் அவரில் யாதொரு குற்றமும் இல்லாதிருக்குமாயின், எப்படி குற்றமிருக்க முடியும்? நீங்கள் மரித்து, உங்களுடைய ஜீவன் தேவன் மூலமாக கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கும்போது, அவர் எப்படி குற்றம் கண்டுபிடிக்க முடியும்? “தேவனால் பிறந்தவர்கள் பாவம் செய்கிறதில்லை, ஏனென்றால் அவனால் பாவம் செய்ய முடியாது.” ஒரு பரிபூரண பலியானது அவனுடைய ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கும்போது, அவனால் எப்படி பாவம் செய்ய முடியும்? தேவன் என்னை ஒருபோதும் நோக்கிப்பார்க்கிறதில்லை, அவர் கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்கிறார், ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். 212 இப்பொழுது, நான் கிறிஸ்துவை நேசிப்பேனேயானால், நான் அவரோடு ஜீவிப்பேன். அவர் அறிந்திருந்தாலொழிய, அவர் என்னை ஒரு போதும் கொண்டு வந்திருக்கமாட்டார். தேவன் இன்றைக்கு இரட்சித்துவிட்டு, இன்றைய தினத்திலிருந்து ஆறு வாரத்தில் என்னை அவர் இழந்துவிடப்போவதாயிருந்தால், அப்பொழுது அவர் தம்முடைய சொந்த தீர்மானத்தையே முறியடித்துக்கொண்டிருக்கிறார். சரி. அப்பொழுது அவர் என்னை அவ்வாறு இரட்சித்திருந்தால், அப்பொழுது அவர் எதிர்காலத்தையும் கூட அறிந்திருக்கவில்லை என்பதை அறிகிறோம். அவர் என்னை இழந்துவிடப்போகிறவராயிருக்கிறார் என்பதை அறிந்து, என்னை என்னத்திற்காக அவர் இரட்சிக்க வேண்டும்? தேவன் அவ்வாறு காரியங்களைச் செய்கிறதில்லை, அப்படியானால் காத்துக்கொள்ளும்படியான தம்முடைய வாக்குத்தத்தத்தை இரண்டு வாரங்களிலேயே நிறைவேற்றாமல் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாயிருக்கும். அவர் உங்களை இரட்சிக்கிறபோது, அது காலத்திற்கும், நித்தியத்திற்குமானதாயுள்ளது. 213 இப்பொழுது, நீங்கள் உண்ர்ச்சிவசப்பட்டு, “ஓ, ஆம், தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! நான் அந்நிய பாஷையில் பேசினேன். நான் சத்தமிட்டேன். நான் அதைப் பெற்றுவிட்டேன். அல்லேலூயா!” என்று கூற முடியும். நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை. ஆனால், சகோதரனே, இங்கே ஏதோ ஒரு காரியம் இறங்கி வரும்போது, நீங்கள் கிறிஸ்துவோடு நங்கூரமிடுகிறீர்கள், அதன்பின்னர் ஆவியின் கனிகள் உங்களைப் பின் தொடர்கின்றன். நாம் சாட்சி பகருகிறோம், நாம் தேவனுடைய குமாரரும், குமார்த்திகளுமாயிருக்கிறோம் என்று அவருடைய ஆவியானது நம்முடைய ஆவியுடனே சாட்சிபகருகிறது. நண்பர்களே, தயவு கூர்ந்து அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். 214 நான் அதைக் குறித்துப் பேசி, இங்கே இரவு முழுவதும் உங்களைக் காக்க வைத்துவிடுவேன். நான் அதை நேசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். தேவன் என்னுடைய ஜீவனைக் காப்பாரேயானால், நான் இந்த கூடாரத்திற்கு அடிக்கடி திரும்பி வருவேன். நீங்கள் அந்த பரிசுத்த விசுவாசத்தில் வேரூன்றி நிலைபெற வேண்டும் என்பதையே நான் காண விரும்புகிறேன். நீங்கள் காற்றினால் அடிபட்டு அலைகிற போதகத்தினால் அலைந்து, உங்களை குலுக்கி, அவ்வாறு தொடர்ந்து சென்று, தங்களுடைய கரங்களில் கொஞ்சம் இரத்தத்தைப் பெற்று அல்லது தங்களுடைய முகத்தில் கொஞ்சம் உறைபனி தோன்றுவது, அல்லது மற்ற ஏதோ ஒரு காரியம், உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விதமான ஒளிகள் தோன்றுவதைக் காண்பது, ஒரு விதமான ஒரு—ஒரு சுய நலக் காரியம் போன்றவற்றை உடையவர்களாய் இருப்பதை காணவோ, வேதம் “தன்னுடைய இருதயத்தில் இறுமாப்பு கொண்டுள்ளவன் ஒன்றையும் கண்டதில்லை” என்று கூறினது போன்றவர்களாயிருக்கவோ நான் விரும்பவில்லை. அது உண்மை. நீங்கள் வார்த்தையின் பேரில் திடமானவர்களாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருக்குமானால், அதனோடு தரித்திருந்து, அதனோடு ஜீவியுங்கள். அதுவே இந்த நாளின் ஊரீம் தும்மீமாய் உள்ளது. நீங்கள் அதனைக் கொண்டே ஜீவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது வார்த்தையில் இல்லையென்றால், அப்பொழுது அதைக் குறித்து மறந்துவிடுங்கள். தேவனுக்காக ஜீவியுங்கள், கிறிஸ்துவுக்காக ஜீவியுங்கள். 215 உங்களுடைய இருதயம் வழிவிலகிச் செல்லத் துவங்கி, ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளதை நீங்கள் அறிந்திருந்தால், அப்பொழுது பீடத்தண்டைத் திரும்பிச் சென்று, “கிறிஸ்துவே, என்னுடைய…என்னுடைய இரட்சிப்பின் சந்தோஷத்தைப் புதுப்பியும். நான் ஒரு காலத்தில் கொண்டிருந்த அன்பை எனக்குத் தாரும். கர்த்தாவே அது கசிந்து வெளியே சென்று கொண்டிருக்கிறது. நான் செய்துள்ள ஏதோ ஒரு காரியம் உண்டு. என்னை மீண்டும் பரிசுத்தமாய் நிற்கச் செய்யும். ஓ, கர்த்தாவே, என்னால் ஒன்றையுமே செய்ய முடியவில்லை. என்னால் இதைவிட முடியவில்லை. அதைவிட முடியவில்லை. கர்த்தாவே, நீரே அதை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். 216 பின்னர் அந்த பீடத்திலிருந்து நடந்து சென்று, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய நபராய் இருங்கள். அப்பொழுது நீங்கள் உங்களுடைய சபையின் பேரில் சார்ந்திருக்க வேண்டியதில்லை, உங்களுடைய ஆசாரியரின் பேரில் சார்ந்திருக்க வேண்டியதில்லை, உங்களுடைய மேய்ப்பரின் பேரில் சார்ந்திருக்க வேண்டியதில்லை.நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் பேரில் சார்ந்து கொண்டிருக்கிறீர்கள். “நீங்கள் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்.” நாம் ஜெபம் செய்வோமாக. 217 கர்த்தாவே, எப்படிப்பட்ட பலமான போதனைகளாயுள்ளன! இது சிறு சபையானது பலமான ஆகாரத்தை எடுக்கக் கூடிய நேரமாய் உள்ளது, இனி ஒருபோது வார்த்தையின் பாலை எடுக்காது. நாங்கள் இப்பொழுது அதிகப்படியான பாலையே தன்னுடைய புட்டியில் குழந்தைக்குத் தருவதுபோல பருகி வந்துள்ளோம். ஆனால் நாங்கள் பலமான ஆகாரங்களை எடுக்க வேண்டியதாயுள்ளது, ஏனென்றால் நாளானது சமீபித்துக் கொண்டிருக்கிறது. பெரிய கொடிய காலங்கள் சமீபித்துவிட்டன, அதிகத் தொல்லைகள் பாதையில் உள்ளன. இனி ஒருபோதும் நல்ல மேலான காலங்களே இருக்காது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் முடிவில் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். வேதவாக்கியங்களின்படி இயேசுவானவர் வரும் வரையில் காலங்கள் இனி தொடர்ந்து மிகவும் மோசமாகிக் கொண்டே செல்லும். 218 நாங்கள் அவர்களுக்கு இந்த ஜீவியத்தில் ஒன்றையுமே வாக்களிக்க முடியாது. ஆனால் அவர்கள் தேவகுமாரன் மேல் விசுவாசம் வைத்து, அவரை தங்களுடைய கிருபாதார பலியாக ஏற்றுக்கொண்டு, தங்களுடைய ஸ்தானத்தில் நின்ற ஒருவராக, தங்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்ட ஒருவராக அவரை ஏற்றுக்கொண்டால், அப்பொழுது வரப்போகும் ஜீவியத்தில், நாங்கள் அவர்களுக்கு உம்முடைய வார்த்தையினூடாக நித்திய ஜீவனை வாக்களிக்க முடியும். இப்பொழுதே அதை அருளும். 219 அவிசுவாசிகள் விசுவாசிகளாக மாறுவார்களாக. இன்றிரவு மார்க்கத்தைக் குறித்து பேசிக்கொண்டு, அப்படியே சபையில் வாழ்ந்து கொண்டிருக்கிற இங்குள்ள வேதாகம சபை பேராசியர்கள், அவர்கள் தேவனோடு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வார்களாக. அதாவது அப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக வர, அவர்கள் தங்களுடைய பாவங்களுக்காக அழுது, தங்களுக்குத் தாங்களே மரித்து, பரிசுத்த ஆவியினால் மீண்டும் புதியதாய்ப் பிறந்து, சாந்தமாயும், தயவாயும், அன்பாயும், முழு சந்தோஷத்தையும், ஆசீர்வாதங்களையும் உடையவர்களாயிருப்பார்களாக. அவர்களைச் சுற்றிலுமுள்ள ஜனங்கள் இவர்களைப் போன்றே இருக்க வேண்டும் என்று தாகமடையச் செய்யுமளவிற்கு அவர்கள் அவ்வளவு உப்புள்ளவர்களாயிருக்குமளவிற்கு, அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் ஜீவிப்பார்களாக. கர்த்தாவே, இதை அருளும், ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு இருக்கட்டும். 220 இனிறிரவு இங்குள்ள யாராவது ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த நேரத்தில் நான் தேவனுடைய தராசில் நிறுத்தப்பட்டிருந்தால், நீர் இன்றிரவு பேசிக்கொண்டிருக்கிற அந்த தகுதியை நான் ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் நிறைவு செய்யக் கூடியவனாய் இருந்திருக்கவேமாட்டேன். நான் என்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தேவன் எனக்குள்ளாக வந்து, இந்த அர்த்தமற்றதை என்னிடத்திலிருந்து எடுத்துப் போட்டு, என்னை ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவனாக்க வேண்டும் என்று நீர் எனக்காக ஜெபத்தில் நினைவு கூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா என்று நான் வியப்புறுகிறேன். நீங்கள் அவ்வாறு விரும்புவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய கரத்தை ஜெபத்திற்காக உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, பருமனான சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். பரலோகமும் பூமியும் உம்மால் நிறைந்துள்ளன, ஓ, உன்னதமான கர்த்தரே, பரலோகமும் பூமியும் உம்மைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. 221 “பரிசுத்தம்.” நீங்கள் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஜெபித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் தவறாய் இருந்து வந்துள்ளீர்கள் என்பதை உறுதியாக நம்புவதாக நீங்கள் உணருகிறபடியால், நீங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறபடியால், நீங்கள் அப்படியே உங்களுடைய கரத்தை உயர்த்தி, “தேவனே, நான் இருக்க வேண்டியவிதமாகவே என்னை உருவாக்கும்” என்று கூறுவீர்களா? சிறு பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. “தேவனே, நான் இருக்க வேண்டிய விதமாகவே என்னை உருவாக்கும்.” சகோதரனே உம்மை, சகோதரியே, உம்மை, உம்மை, இங்கு உள்ள உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. 222 நாளானது மரித்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களே, இது கடினமாயுள்ளது என்பதை நான் அறிவேன், ஆனாலும் இப்பொழுதே சத்தியத்தை அறிந்து கொள்வது மேலானதாகும். இப்பொழுது அமைதியாக ஜெபியுங்கள். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்… அவர் மாத்திரமே பரிசுத்தராயிருக்கிறார். …முழுவதும் உம்மால், ஓ உன்னதமான கர்த்தாவே, பரலோகமும் பூமியும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கின்றன. 223 பரலோகப் பிதாவே, மாலையில் சூரியன் அஸ்தமிக்கையில், ராபின் பறவைகள் தங்களுடைய அன்பார்ந்த ஜோடிகளோடு மரங்களில் கூடுகின்றன. பறவைகள் யாவும் தங்களுடைய கூடுகளுக்குச் செல்கின்றன. புறாக்கள் மின்சார கம்பிகளுக்கு மேலே உயரமாக பறக்கின்றன. அதனால் பாம்புகள் அவைகளை இரவு நேரத்தில் தொந்தரவு செய்யாது. அவைகள் அங்கே அமர்ந்து, அவைகள் உறங்கச் செல்லும் வரை ஒன்றுக்கொன்று ‘கூ’ என்று கூவுகின்றன. முடிவாக சூரியன் அஸ்தமிக்கிறது. 224 என்றோ ஒரு நாள் நாங்களும் அந்த வேளைக்கு வரப்போகின்றோம். சூரிய அஸ்தமனம் நிகழப் போகிறது. கர்த்தாவே, அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றிரவு தாங்கள் தவறாயிருந்து வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள ஜனங்கள் இங்கிருக்கிறார்கள், அவர்கள் அந்த இடத்திற்கு…வர விரும்புகிறார்கள்…லிங்கன் மரித்துக்கொண்டிருந்தபோது, “சூரிய அஸ்தமனத்தை நோக்கியவாறு என்னுடைய முகத்தைத் திருப்புங்கள்” என்று கூறி அதனண்டைக்கு அவர் அவ்விதமாக வந்தார். அப்பொழுது அவர், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று கூறத் துவங்கினார். 225 வயோதிக மூடி, “இது மரணமா? இது என்னுடைய முடிசூட்டு விழா நாளாயிருக்கிறது” என்று கூறினார். 226 ஓ நித்தியமானவரே, இப்பொழுது அவர்களை ஏற்றுக்கொள்ளும்; விசுவாசத்தினால், அவர்கள் அங்கே தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்திருக்கையில் ஏற்றுக்கொள்ளும். நீரே அவர்களுடைய இருக்கையில் அவர்களுடைய இருதயத்தைத் தட்டினீர். அதுவே அவர்களுடைய பீடமாயுள்ளது. இப்பொழுதே நீர் அவர்களை ஏற்றுக்கொள்ளும்படியான நேரமாய் இது உள்ளது. நீர், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்று கூறினீர். 227 என்றோ ஒரு நாள் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும்போது, மனைவி அல்லது கணவன் படுக்கையின் அருகில் நின்றுகொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் நடந்து சென்று விடுவர். சூரியன் அஸ்தமிப்பதற்கு சற்று முன்னர், ஓ, பரிசுத்த, அந்த அழகிய, பரிசுத்த இனிமையான நிசப்தம் உண்டாகும். அப்பொழுது நாம் எழும்பி, இவ்வாறு கூறுவோம்: சூரிய அஸ்தமன வேளையிலும், மாலை நட்சத்திரமும் தோன்றுகையிலும், எனக்காக ஒரு தெளிவான அழைப்பு வந்திடுமே; நான் சமுத்திரத்தில் பயணிக்கும், அம்மரண வேளையிலே துக்கங்கொண்டாடுதலே இல்லாதிருக்கும். 228 ஓ, தேவனே, அவர்கள் காத்திருக்கையில், அவர்கள் மீது வரும்படியான தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கையில், இந்த வேளையில் அதை அவர்களுக்கு அருளும். எல்லா கோபத்தையும், உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் அவர்களிடத்திலிருந்து எடுத்துப் போட்டு, அவர்களுக்குள் ஒரு புதிய இருதயத்தை சிருஷ்டியும். நீர், “நான் அந்த பழைய இருதயத்தை எடுத்துப்போட்டுவிட்டு, ஒரு சதையான இருதயத்தைக் கொடுப்பேன். நான் இந்த இருதயத்தில் என்னுடைய ஆவியை வைப்பேன், அப்பொழுது அவர்கள் என் கட்டளைகளில் நடந்து, என்னுடைய கற்பனைகளை காத்துக்கொள்வார்கள்” என்று கூறினீர். காரணம் இது ஒரு அன்பின் மேலாணையேயன்றி கடமையல்ல. இது அன்பாய் உள்ளது. அன்பே அதைச் செய்யும்படி எங்களை வற்புறுத்துகிறது. இது எங்களை வற்புறுத்துகிற ஒரு அன்பின் கடமையாய் உள்ளது. இது அன்பைப் பின்தொடரும்படியான எங்களுடைய கடமையாய் உள்ளது. தேவனே, இன்றிரவு தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொரு இருதயத்திற்கும் அதை நீர் தந்தருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 229 தங்களுடைய கரங்களை உயர்த்தாதவர்கள், உம்மை ஏற்றுக்கொள்ளும்படி கிருபையினால் தங்களுடைய கரங்களை உயர்த்தி, இந்த சாந்தமான, இனிமையான, அமைதியான, தாழ்மையான வழியில் உள்ள உம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, கிருபையினால் நிறைத்து, ஒரு மாற்றப்பட்ட நபராக இங்கிருந்து செல்வார்களாக. இந்த மணி வேளைக்குப் பிறகு, ஓ உன்னதமான கர்த்தாவே, பறவைகள் எப்படியாய் வித்தியாசமாகப் பாடும், எப்படி ஒவ்வொரு நபரும் வித்தியாசமாயிருப்பார்கள். பூமியின் தேவனாகிய கர்த்தாவே, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பரலோகமும், பூமியும் உம்மால் நிறைந்துள்ளன, ஓ, உன்னதமான கர்த்தாவே, பரலோகமும் பூமியும் உம்மைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. 230 இப்பொழுது நீங்கள் உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று உங்களுடைய கரங்களை உயர்த்தின நீங்கள், தேவன் உங்களிடத்தில் இப்பொழுது ஒரு தனிப்பட்ட வழியில் பேசியிருக்கிறார் என்றும், உணர்ச்சிவசப்படுதலினால் அல்ல, ஆனால் அப்படியே உங்களுக்குள்ளாக ஒருவிதமாக பேசியிருக்கிறார் என்று நீங்கள் உணருகிறீர்களா? தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனை அளித்திருக்கிறார் என்பதைப் போன்று நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் இன்றிரவு ஒரு வித்தியாசமான நபராக சபையிலிருந்து வெளியேச் செல்ல போகிறீர்கள் என்பது போன்று உணருகிறீர்களா? பின்னால் உள்ள நீங்கள் இன்றிரவு உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? மகனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. “நான் இன்றிரவு இந்த சபையிலிருந்து ஒரு புதிய நபராகச் செல்வேன்.” தேவனுடைய ராஜ்ஜியத்தில் புதியதாய்ப் பிறந்த குழந்தைகள். 231 என்ன சம்பவித்தது? இது பீடத்தண்டை வருவதற்கான ஒரு கட்டளை என்பதை நான் அறிவேன். அது ஒரு மெத்தோடிஸ்டு பீட…ஒரு மெத்தோடிஸ்டு ஒழுங்கு முறை என்று நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன். இது மெத்தோடிஸ்டு சபையில் ஜான் வெஸ்லியின் நாட்களில் நிலைநாட்டப்பட்டது. இது வேதாகம நாட்களில் ஒருபோதும் இருந்ததில்லை. “விசுவாசித்தவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் சபையிலே சேர்க்கப்பட்டனர்.” நீங்கள் எங்கேயிருந்தாலும், வயலிலோ, ஒரு வீதியிலோ, எங்கிருந்தாலும் உங்களால் விசுவாசிக்க முடியும். எங்கிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறபடியால், அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அது உங்களுடைய இருதயத்திற்குள்ளாக வருகிற பரிசுத்த ஆவியின் செய்க்கையாயுள்ளது. நீங்கள் அவரை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிகளாக மாறியிருக்கிறீர்கள். ஓ கனிவான இரட்சகரே, என்னை கடந்து செல்லாதேயும், இப்பொழுது உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். …என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்கு, நீர் மற்றவர்களை அழைத்துக் கொண்டிருக்கையில், என்னைக் கடந்து செல்லாதேயும். 232 இப்பொழுது நான் அந்த வாலிப மனிதனும், பெண்மணியும், நான் அது அவருடைய மனைவி என்று மனதில் நினைக்கிறேன், உங்களுடைய கரத்தை மேலே உயர்த்தினீர்கள், எனவே நீங்கள் அங்கே மீண்டும் உங்களுடைய கரத்தை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; சிவப்பான மேலாடை அணிந்துள்ள மகனும், அந்தப் பெண்மணியும், அவர்கள் கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இங்கே ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிற வாலிப மனிதன், கிறிஸ்துவை அவனுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவன் அவனை இரட்சித்திருந்தார் என்பதை உணர்ந்தான். அங்கே பின்னால் உள்ள மற்றவர்களும் உங்களுடைய கரங்களை உயர்த்தினீர்கள், எனவே ஜனங்கள் சுற்றும் முற்றும் பார்த்து உங்களோடு ஐக்கியங்கொள்ளும்படிக்கு, அவர்கள் மீண்டும் கரங்களை உயர்த்தட்டும். 233 சுற்றிலும் உள்ள யாரோடாவது, அவர்களுக்கு அருகில் நின்று நின்று கொண்டிருப்பவர்களோடு தங்களுடைய கரத்தை குலுக்கட்டும். நீங்கள், “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரனே, என் சகோதரியே, தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் வரவேற்கப்படுகிறீர்கள்,” என்று கூறுங்கள். ஐக்கியம், அதைத்தான் நாம் விரும்புகிறோம். தேவன் ஆசீர்வதிப்பாராக…இங்கே நாற்காலியில் அமர்ந்துள்ள இந்த வாலிப மனிதனோடு கரங்களைக் குலுக்குங்கள். கர்த்தர் அவனோடு இருப்பாராக. அது உண்மை. பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள்ளாக நாங்கள் உங்களை வரவேற்கிறோம். 234 நீங்கள் இன்னமும் ஞானஸ்நானம் பண்ணப்படாமலிருந்து, அதே சமயத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வாஞ்சித்தால், உங்களுடைய வழியை சரிப்படுத்திக்கொண்டு, அதைக் குறித்து போதகரிடத்தில் சொல்லுங்கள். நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டுமென்று விரும்பினால், இங்கே தண்ணீர் தொட்டியில் இன்றிரவு அதில் தண்ணீரும் கூட நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு காரியமும் ஆயத்தமாயுள்ளது. (நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா, எப்படியாயினும்…?…?…) ஆனால் எவரேனும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினால், தண்ணீர் தொட்டி ஆயத்தமாயுள்ளது. வேதம், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று உரைத்துள்ளது. 235 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயத்துங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, அவர் அற்புதமானவரல்லவா? நீங்கள் இந்த எபிரெயரின் புத்தகத்தைக் குறித்த பிரசங்கத்தை கேட்டு எப்படி மகிழ்ந்தீர்களா? நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? [“ஆமென்.”] ஆம், அற்புதமானது. இப்பொழுது, இது திருத்துதலாய் உள்ளது. ஓ, இது கண்டிப்பானதாய் உள்ளது, இது நேரானதாய் உள்ளது, ஆனால் நாம் அதை நேசிக்கிறோம். அந்த விதமாகத்தான் நாம் அதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதை வேறெந்த வழியிலும் பெற்றிருந்திருக்க முடியாது. 236 இப்பொழுது, பவுல் அதை அந்த விதமாகப் பிரசங்கிக்க அதிகாரம் பெற்றிருக்கிறான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பவுல் “ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். அது உண்மைதானே? ஆகையால் நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறோம். 237 இப்பொழுது நம்முடைய மிகவும் விலையேறப்பெற்ற சகோதரன், போதகர், சகோதரன் நெவில் அவர்கள் அப்படியே ஒரு நிமிடம் இங்கே வரும்படி நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன், அவர் உங்களுக்கு கூற வேண்டிய வார்த்தைகளை உடையவராயிருப்பார். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் உங்களை புதன் கிழமை இரவு காண்போம், மற்றும் ஒரு இரவு சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங் அவர்களுடைய கூட்டத்திற்காக செல்வதைக் குறித்த ஏற்பாடுகளைச் செய்வோம். அதன்பின்னர் இந்த வருகின்ற புதன்கிழமை இரவு இங்கே தொடர்ந்து 7-வது மற்றும் 8-வது அதிகாரத்தைப் பிரசங்கிக்கவுள்ளேன். சகோதரன் நெவில்.